அடுத்த இடி.,இனி அந்த வங்கி ஏடிஎம்மில் ரூ.2000 நோட்டு வராது: ரூ.2000 செல்லாதா?-ரிசர்வ் வங்கி பதில்

|

பொதுவாக நமது கையில் 2000 ரூபாய் முழு தாள் கிடைத்தால் அதை முழு செலவாக பயன்படுத்துவதற்கே மட்டுமே முனைகிறோம். அந்த நோட்டை பயன்படுத்தி 100 ரூபாய்க்கு பொருள் வாங்க முனைந்தால் கடைக்காரர் சில்லரை கொடுப்பதற்கு சற்று தொய்வடைகிறார்.

ரூ.2000 நோட்டை சில்லரை மாற்ற முடியாமல் தவிப்பு

ரூ.2000 நோட்டை சில்லரை மாற்ற முடியாமல் தவிப்பு

சிறு குறு கடைக்காரராக இருக்கும் பட்சத்தில் இரண்டு பேர் ஒரே நாளில் 2000 ரூபாய் தாளை நீட்டி ரூ. 100-க்கு பொருள் வாங்கினால் மீதம் கொடுக்க வேண்டிய ரூ.3800 சில்லரைக்கு அவர் எங்கே போவார். மேலும் இதன் காரணமாகவே பலரும் பொருள் வேண்டுமானால் சில்லரை கொடுக்க வேண்டும் என்று கேட்கின்றனர். இதனால் அவர்களுக்கும் வியாபாரம் பாதிக்கப்படுகிறது.

ஏடிஎம் பயன்பாடே மாறுகிறது

ஏடிஎம் பயன்பாடே மாறுகிறது

வங்கியில் சென்று பணத்தை எடுக்கும் முறையை எளியதாக்கவே ஏடிஎம் மிஷன் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் தற்போது ஏடிஎம் மிஷனின் 2000 ரூபாய் நோட்டை எடுப்பவர்கள் சில்லரை வாங்குவதற்காக வங்கிக்கே வருகின்றனர். இதனால் ஏடிஎம்-ன் பயன்பாடு முற்றிலும் மாற்றம் அடைந்து வருகிறது.

Google pay-ல பணத்த போடுங்க., அந்த பொன்னு கால் பண்ணி பக்குவமா பேசும்- திணுசு திணுசா மோசடி!Google pay-ல பணத்த போடுங்க., அந்த பொன்னு கால் பண்ணி பக்குவமா பேசும்- திணுசு திணுசா மோசடி!

2,000 ரூபாய் நோட்டுகளை ஏடிஎம் புழக்கத்திலிருந்து நீக்க உத்தரவு

2,000 ரூபாய் நோட்டுகளை ஏடிஎம் புழக்கத்திலிருந்து நீக்க உத்தரவு

2,000 ரூபாய் நோட்டுகளை ஏடிஎம் புழக்கத்திலிருந்து உடனடியாக நீக்கும்படி, இந்தியன் வங்கியின் அனைத்துக் கிளைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அந்த சுற்றறிக்கையில், 2,000 ரூபாய் நோட்டுக்கு சில்லறை மாற்றுவதற்கு வாடிக்கையாளர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள் என குறிப்பிட்டுள்ளது.

சில்லறை மாற்றுவதற்காக நமது வங்கிக்கிளைகளுக்கே வருகிறார்கள்

சில்லறை மாற்றுவதற்காக நமது வங்கிக்கிளைகளுக்கே வருகிறார்கள்

மேலும் நமது ஏடிஎம்-களில் 2,000 ரூபாய் நோட்டுகளைப் பெறும் வாடிக்கையாளர்கள், வேறெங்கும் சில்லறை கிடைக்காததால், சில்லறை மாற்றுவதற்காக நமது வங்கிக்கிளைகளுக்கே வருகிறார்கள். இதனால் வாடிக்கையாளர்கள் வங்கிகளைத் தேடி அலையும் நிலை ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.

ஏடிஎம்-களில் 2,000 ரூபாய் நோட்டுகளை வைக்க வேண்டாம்

ஏடிஎம்-களில் 2,000 ரூபாய் நோட்டுகளை வைக்க வேண்டாம்

இதைத் தவிர்ப்பதற்காக, இனி வங்கிகளில் உள்ள ஏடிஎம்-களில் 2,000 ரூபாய் நோட்டுகளை வைக்க வேண்டாம் என்று கூறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல, வங்கி டெபாசிட் மெஷின்களில் வாடிக்கையாளர்கள் செலுத்தும் 2,000 ரூபாய் நோட்டுகளை மீண்டும் சுழற்சிக்கு விடவேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

500, 200 மற்றும் 100 ரூபாய் நோட்டுகளால் மட்டும் நிரப்பினால் போதும்

500, 200 மற்றும் 100 ரூபாய் நோட்டுகளால் மட்டும் நிரப்பினால் போதும்

அவற்றுக்குப் பதிலாக, அதைவிட குறைந்த 500, 200 மற்றும் 100 ரூபாய் நோட்டுகளால் மட்டும் நிரப்பினால் போதும். இந்தியன் வங்கியின் வெளிப்புற ஏடிஎம் மெஷின்களில் பணத்தைச் செலுத்தும் ஏஜென்ஸிகளும், இனிமேல் 2,000 ரூபாய் நோட்டுகளை ஏடிஎம்-களில் வைக்க வேண்டாம். இந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளவற்றை உடனடியாகச் செயல்படுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

பணம் டெபாசிட் செய்யலாம் ஆனால் எடுக்க முடியாது

பணம் டெபாசிட் செய்யலாம் ஆனால் எடுக்க முடியாது

இந்தியன் வங்கியின் டெபாசிட் மெஷினைப் பொறுத்தவரை, 2,000 ரூபாய் நோட்டுகளைச் செலுத்தினால், அது எடுத்துக்கொள்ளும். அதிலிருந்து பணத்தை எடுக்கும்போது, 2,000 ரூபாய் நோட்டுகளை இம்மாதம்வரை மட்டுமே பெறலாம். ஆனால், வரும் மார்ச் 1 முதல் டெபாசிட் மெஷின்களில் 2,000 ரூபாய் நோட்டுகளைச் செலுத்த மட்டுமே முடியும். திரும்பப் பெற முடியாது என தெரிகிறது.

எப்போது வேண்டுமானாலும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது

எப்போது வேண்டுமானாலும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது

இதையடுத்து எப்போது வேண்டுமானாலும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்படலாம் என பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். இது குறித்து ரிசர்வ் வங்கி அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

NASA செல்லும் நாமக்கல் மாணவி., 9-ம் வகுப்பில் அசத்தல் செயல்- என்ன செய்தார் தெரியுமா?NASA செல்லும் நாமக்கல் மாணவி., 9-ம் வகுப்பில் அசத்தல் செயல்- என்ன செய்தார் தெரியுமா?

சமூக ஊடகங்களில் தவறான தகவல்கள்

சமூக ஊடகங்களில் தவறான தகவல்கள்

2 ஆயிரம் ரூபாய் நோட்டு செல்லாது என்று அறிவிப்பு வெளியாகலாம் என்று சமூக ஊடகங்களில் தவறான தகவல்கள் பரவி வருகிறது. ஆனால் அதுபோன்ற எண்ணம் மத்திய அரசிடம் தற்போது வரை இல்லை. இதுதொடர்பான அதிகாரபூர்வமான தகவல்களும் ரிசர்வ் வங்கிக்கு தெரிவிக்கப்படவில்லை. ஏ.டி.எம். மையங்களிலும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வழக்கம்போல் நிரப்பப்பட்டு வருகிறது.

2 ஆயிரம் ரூபாய் நோட்டை வாங்கி பயன்படுத்தலாம்

2 ஆயிரம் ரூபாய் நோட்டை வாங்கி பயன்படுத்தலாம்

பொதுமக்களும் இதனை எடுத்து பயன்படுத்தி வருகின்றனர். பொதுமக்களிடம் இருந்து இதுபோன்ற எந்த புகாரும் வரவில்லை. எனவே சமூக ஊடகங்களில் பரப்பப்படும் தவறான செய்தியை பொதுமக்கள் நம்ப வேண்டாம். வழக்கம்போல் 2 ஆயிரம் ரூபாய் நோட்டை வாங்கி பயன்படுத்தலாம் என தெரிவித்துள்ளது.

Source: indiatimes.com

Best Mobiles in India

English summary
RS.2000 note will not be in india bank ATM: Reserve bank clear the social media rumours

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X