Home
News

ISRO விஞ்ஞானிகளால் கூட செய்ய முடியாததை.. சாதிக்க துடிக்கும் சென்னை ஸ்டார்ட்-அப்.. Agnikul Agnibaan மிஷன்!

ஒரு ஹாலிவுட் படம் எடுக்கும் செலவில்.. செவ்வாய் கிரகத்திற்கு விண்கலம் அனுப்பும் அளவிற்கு திறமையும், வல்லமையும் கொண்ட இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவினால் (ISRO) அக்னிகுல் அக்னிபான் ராக்கெட்டை ஏன் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தமுடியவில்லை? என்கிற கேள்விக்கான பதிலை பார்க்கும் முன்னர்..

அக்னிகுல் அக்னிபான் (Agnikul Agnibaan) என்றால் என்ன? இதற்கும் இஸ்ரோவிற்கும் (ISRO) என்ன தொடர்பு? என்பதை பற்றி நீங்கள் அறிந்திருக்க வேண்டும். அக்னிகுல் காஸ்மோஸ் (Agnikul Cosmos) என்பது சென்னையை சேர்ந்த ஸ்பேஸ் ஸ்டார்ட்-அப் நிறுவனமாகும். இந்நிறுவனம் உருவாக்கியுள்ள ராக்கெட்டின் பெயர் தான் - அக்னிபான். இது அக்னிகுல் நிறுவனத்தின் SOrTeD (Suborbital Tech Demonstrator) மிஷன் ஆகும்.

ISRO-வால் கூட செய்ய முடியாததை சாதிக்க துடிக்கும் சென்னை ஸ்டார்ட்-அப்!

அக்னிபான் ராக்கெட்டை உருவாக்கியது சென்னையை சேர்ந்த நிறுவனம் என்றதுமே.. இதை ஒரு சாதாரணமான ராக்கெட் என்று நினைத்துக்கொள்ள வேண்டாம். இது 3டி-ப்ரிண்டட், செமி-கிரையோஜெனிக் எஞ்சின் (3D-printed, Semi-cryogenic engine) கொண்ட உலகின் முதல் ராக்கெட் ஆகும். இப்படியான சிறப்புமிக்க ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தும் வேலை இஸ்ரோவின் "மேற்பார்வையில்" நடக்கிறது.

இருந்தாலும் கூட, இதுவரை மொத்தம் 3 முறை முயற்சித்தும் கூட அக்னிபான் ராக்கெட்டை விண்ணில் செலுத்த முடியவில்லை. சில தினங்களுக்கு (ஏப்.7) முன்னர் விண்ணில் செலுத்தப்படுவதற்கு சரியாக 92 நொடிகளுக்கு முன்பாக, தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக அக்னிபான் ராக்கெட்டின் லான்ச் நிறுத்தப்பட்டது.

ISRO-வால் கூட செய்ய முடியாததை சாதிக்க துடிக்கும் சென்னை ஸ்டார்ட்-அப்!

இஸ்ரோவின் "துணை" இருந்தும் கூட அக்னிபான் ராக்கெட் சொதப்புவது ஏன்? கடைசியாக முயற்சி செய்யப்பட்ட லான்ச்சின் போது, இஸ்ரோவால் அக்னிபான் ராக்கெட்டின் செமி-கிரையோஜெனிக் எஞ்சினை வெற்றிகரமாக பறக்கவிட முடியவில்லை. இதன் விளைவாகவே 92 நொடிகளுக்கு முன்பாக ராக்கெட்டை லான்ச் செய்யும் முயற்சி கைவிடப்பட்டது.

செமி-கிரையோஜெனிக் எஞ்சின் ஆனது திரவம் மற்றும் வாயுவின் உந்துசக்தியின் கலவையை பயன்படுத்தும் ஒரு எஞ்சின் ஆகும். இப்படி ஒரு எஞ்சின் - இஸ்ரோவால் கூட இன்னும் நிரூபிக்கப்படாத தொழில்நுட்பமாகும். எனவே தான் தொடர்ந்து மூன்றாவது முறையாக.. அக்னிபான் ராக்கெட்டின் லான்ச் ஆனது தோல்வியில் முடிந்துள்ளது போல் தெரிகிறது.

ISRO-வால் கூட செய்ய முடியாததை சாதிக்க துடிக்கும் சென்னை ஸ்டார்ட்-அப்!

300 கிலோ எடையுள்ள பேலோடுகளை சுமார் 700 கிமீ சுற்றுவட்டப்பாதையில் சுமந்து செல்லும் திறன் கொண்ட டூ-ஸ்டேஜ் லான்ச் வெஹிக்கல் (Two-stage Launch Vehicle) ஆக வடிவமைக்கப்பட்டுள்ள அக்னிபான் ஆனது வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டால்.. இந்தியாவிற்கான ஒரு மிகப்பெரிய தொழில்நுட்ப பாய்ச்சலாகு இருக்கும் என்பதில் சந்தேகேமே வேண்டாம்.

இஸ்ரோவிற்கு இதெல்லாம் சைடு வேலைகள் தான்.. மெயின் வேலை சந்திரயான் 4 மிஷன் தான்! நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரை இறஙகிய சந்திரயான்-3 மற்றும் இந்தியாவின் முதல் சோலார் மிஷன் ஆன ஆதித்யா-எல்1 ஆகியவைகளின் வெற்றிகளை தொடர்ந்து.. ஒட்டுமொத்த உலகமும் எதிர்பார்க்கும் இஸ்ரோவின் அடுத்த மிஷன் சந்திரயான்-4 தான்!

ISRO-வால் கூட செய்ய முடியாததை சாதிக்க துடிக்கும் சென்னை ஸ்டார்ட்-அப்!

இதுகுறித்து பேசிய இஸ்ரோ தலைவர் ஆன எஸ்.சோமநாத், இஸ்ரோவின் அடுத்த சந்திர பயணமான சந்திரயான்-4 உருவாக்கப்பட்டு வருவதாகவும், 2040-ம் ஆண்டு நிலவில் விண்வெளி வீரரை இந்தியா தரையிறக்கும் இலக்கை அடைவதற்கான முதல் படிதான் சந்திரயான்-4 என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னதாக பிஓஇஎம்-3 (POEM-3) என்று சுருக்கமாக அழைக்கப்படும் பிஎஸ்எல்வி ஆர்பிட்டல் எக்ஸ்ப்ரீமென்டல் மாட்யூல்-3 (PSLV Orbital Experimental Module-3) என்று அழைக்கப்படும் இஸ்ரோவின் ஸ்பேஸ் மிஷன் (Space Mission) ஆனது.. துளி அளவு கூட விண்வெளியில் எந்த குப்பையையும் போடாமல்.. பூமியின் வளிமண்டலத்திற்குள் மீண்டும் நுழைந்து சாதனை செய்திருந்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது.

இதன் விளைவாக இஸ்ரோவின் பிஓஇஎம்-3 மிஷன் ஆனது ஸீரோ டெப்ரிஸ் மிஷன் (Zero debris mission) ஆக பதிவாகியுள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் இதுவொரு முக்கியமான மைல்கல் ஆகும். ஏனென்றால் வழக்கமாக விண்வெளிக்குள் செல்லும் எந்தவொரு ராக்கெட்டுமே அல்லது விண்கலமுமே, விண்வெளியில் ஏதேனும் சிறிய பாகத்தையோ அல்லது துண்டையே மிதக்கவிட்டு விடுவது வழக்கம். அதுதான் ஸ்பேஸ் டெப்ரிஸ் (Space Debris) என்று அழைக்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Why Agnikul Agnibaan Rocket Launch with 3D printed Semi Cryogenic Engine Postponed For 3rd Time
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X