Home
News

கொடி பறக்குதா.. சொன்னதை செய்த ISRO விஞ்ஞானிகள்.. Naughty Boy-ஐ நம்பினோர் கைவிடப்படார்.. அடுத்தது என்ன?

இஸ்ரோ (ISRO) என்று அழைக்கப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமானது, திட்டமிட்டபடியே அதன் ஜிஎஸ்எல்வி எப்14 (GSLV F14) ராக்கெட்டின் வழியாக இன்சாட்-3டிஎஸ் செயற்கைகோளை (INSAT-3DS Satellite) வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சீறிப்பாய்ந்த இந்த சாட்டிலைட்டின் வேலை என்ன? இதோ விவரங்கள்:

இன்சாட்-3டிஎஸ் என்பது இந்தியாவிற்கான புதிய வானிலை செயற்கைக்கோள் (Meteorological satellite) ஆகும். இது ஏற்கனவே இருக்கும் வானிலை செயற்கைக்கோள்களை விட, இன்னும் துல்லியமான முறையில் வானிலை தொடர்பான முன்னறிவிப்புகள் மற்றும் இயற்கை பேரிடர் தொடர்பான எச்சரிக்கைகளை வழங்கும் நோக்கத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளது.

கொடி பறக்குதா.. சொன்னதை செய்த ISRO விஞ்ஞானிகள்!

2274 கிலோ எடையும், 4 முக்கிய பேடுகளையும் கொண்டுள்ள இன்சாட்-3டிஎஸ் சாட்டிலைட் ஆனது, ஆந்திரப் பிரதேசத மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் (Satish Dhawan Space Centre) இருந்து, இஸ்ரோவின் ஜிஎஸ்எல்வி எப்14 ராக்கெட்டின் உதவியுடன் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

இன்சாட்-3டிஎஸ் சாட்டிலைட் ஆனது ஒரு இமேஜர் (Imager), ஒரு சவுண்டர் (Sounder), ஒரு டேட்டா ரிலே டிரான்ஸ்பாண்டர் (Data Relay Transponder) மற்றும் ஒரு தேடல் மற்றும் மீட்பு டிரான்ஸ்பாண்டர் (Satellite aided Search and Rescue Transponder) என் மொத்தம் பேலோடுகளை கொண்டுள்ளது.

கொடி பறக்குதா.. சொன்னதை செய்த ISRO விஞ்ஞானிகள்!

இன்சாட்-3டிஎஸ் சாட்டிலைட்டின் மல்டி-ஸ்பெக்ட்ரல் இமேஜர் ஆனது 6 வேவ்லெங்த் பேண்டுகளில் பூமியின் படங்களை உருவாக்கும், இது நீராவி (ஈரப்பதம்) போன்ற வண்ணம் சார்ந்த வளிமண்டல அளவுருக்களை காட்சிப்படுத்த உதவும். இதன் சவுண்டர், வளிமண்டலத்தின் வெர்ட்டிக்கல் ப்ரொஃபைலை உருவாக்க உதவும்; வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் போன்ற தகவல்களையும் வழங்கும்.

இப்படியாக ஜியோசின்க்ரோனஸ் டிரான்ஸ்ஃபர் ஆர்பிட்டில் (Geosynchronous Transfer Orbit - GTO) நிலைநிறுத்தப்படும் இன்சாட்-3 டிஎஸ் செயற்கைக்கோள் ஆனது கடலின் மேற்பரப்பை ஆய்வு செய்வது மிகவும் துல்லியமான மற்றும் தகவல்கள் மிக்க வானிலை முன்னறிவிப்புகளையும், இயற்கை பேரழிவு தொடர்பான எச்சரிக்கைகளையும் வழங்கும். இன்சாட்-3டிஎஸ் சாட்டிலைட் மிஷனிற்கான நிதியுதவி "முழுக்க முழுக்க" புவி அறிவியல் அமைச்சகத்தால் (Ministry of Earth Sciences) செய்யப்பட்டுள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

கொடி பறக்குதா.. சொன்னதை செய்த ISRO விஞ்ஞானிகள்!

ஜிஎஸ்எல்வி எப்14 ராக்கெட் ஆனது 40% தோல்வி விகிதத்தை கொண்டுள்ளதால், இன்சாட்-3டிஎஸ் சாட்டிலைட் ஆனது வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்படுமா என்கிற கேள்வியும், சந்தேகமும் மேலோங்கி இருந்தது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. "நாட்டி பாய்" (Naughty Boy) என்று அழைக்கப்பட்டாலும் கூட இன்சாட்-3டிஎஸ் செயற்கைகோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

ஜிஎஸ்எல்வி எஃப்14 ராக்கெட்டை "நாட்டி பாய்" என்று குறிப்பிட காரணம், கடந்த காலங்களில் பல தடைகளை சந்தித்துள்ளது. இது 40 சதவீத தோல்வி விகிதத்தையும் (40% Failure rate) கொண்டுள்ளது. இன்றுவரையிலாக ஜிஎஸ்எல்வி எஃப்14 ராக்கெட் ஆனது மொத்தம் 15 ஸ்பேஸ் மிஷன்களை பார்த்துள்ளது, அவற்றில் 6 மிஷன்களில் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளது.

கடைசியாக 2023 ஆம் ஆண்டு மே மாதத்தில் ஜிஎஸ்எல்வி எஃப்14 ராக்கெட் தனது ஸ்பேஸ் மிஷனை வெற்றிகரமாக முடித்தது. ஆனால் அதற்கு முந்தைய மிஷன் தோல்வியில் முடிந்தது. இப்படியாக ஜிஎஸ்எல்வி எஃப்14 ராக்கெட் ஆனது என்ன மாதிரியான முடிவை வழங்கும் என்பதை கணிக்கவே முடியாது என்பதால் தான் என்னவோ.. அதை நாட்டி பாய் (Naughty boy) என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் அழைக்கிறார்கள் போல!

Best Mobiles in India

English summary
ISRO Scientists Successfully Launched INSAT 3DS Weather Satellite Using Naughty Boy GSLV F15 Rocket
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X