Home
News

வியப்பில் உலகம்.. மனித மூளையில் சிப்.. செஸ் காய்களை எண்ணத்தின் மூலம் நகர்த்திய நபர்.. எலான் மஸ்க் ரொம்ப ஹேப்பி

மனித மூளைக்குள் பொருத்தப்பட்ட நியுரோலிங் சிப் உதவியுடன், எப்படி ஒரு நபர் அவருடைய சிந்தனைகளை மட்டுமே வைத்துகொன்டு கம்ப்யூட்டரில் உள்ள செஸ் காய்களை நகர்த்துகிறார் என்பதை காண்பிக்கும் அசாதாரணமான வீடியோ இப்போது இணையத்தை புரட்டிபோட்டுள்ளது.

நியுரோலிங் (Neuralink): எலான் மஸ்க்கிற்கு சொந்தமான நியுரோலிங் (Neuralink) நிறுவனம், மனித மூளையில் சிப் பொருத்தி அதனை சோதனை செய்து வருகிறது என்பது நம்மில் பலருக்கு தெரிந்த ஒரு விஷயம் தான் என்றாலும், இந்த சோதனை குறுகிய காலத்திற்குள் எப்படி அசுரர் வேகத்தில் அடுத்தடுத்த நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது வியப்பின் ஆச்சரியமாக இருக்கிறது.

வியப்பில் உலகம்.. மனித மூளையில் சிப்.. செஸ் காய்களை நகர்த்திய நபர்..

மனித மூளைகளில் சிப்: எலான் மஸ்க்கின் வித்தியாசமான ஐடியாக்களில் ஒன்று தான் இந்த நியுரோலிங் நிறுவனம். மருத்துவ உலகில் நரம்பியல் மருத்துவத்தில் சவாலாக இருக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் விதமாக, மனித மூளைகளில் சிப் ஒன்றை பொருத்தி, அதை மனித எண்ணங்களுடன் செயல்படும் வகையில் ஒரு இணைப்பை உருவாக்கி, அதை நடைமுறையில் சாத்தியப்படுத்தும் நோக்கத்தில் இந்த நியுரோலிங் திட்டம் உருவாக்கப்பட்டது.

குரங்கின் மூளையில் ஏன் முதல் சிப் பொருத்தப்பட்டது?

இந்த திட்டத்திற்கான பணிகளை உலக பணக்காரரான எலான் மஸ்க் தனது சொந்த செலவில் தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக, கடந்த ஆண்டுகளில் மணி முடியை விட சிறிய அளவில் இருக்கும் ஒரு சிப்பை நியுரோலிங் நிறுவனம் உருவாக்கியது. இதை நேரடியாக மனித மூலையில் பொருத்தி சோதனை செய்ய முடியாது என்ற காரணத்தினால், ஒரு மனித குரங்கின் மூளையில் இந்த மைக்ரோ சிப் பொருத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டது.

மனித மூளையில் சிப் பொறுத்த ஒப்புதல் வழங்கிய அமேரிக்கா: மனித குரங்கின் மூளையில் பொருத்தப்பட்ட சிப் பலகட்ட சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வெற்றி அடைந்தது. பிறகு, அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாடுகள் அமைப்பு மனித மூளையில் இந்த சிப்பை பொருத்தி சோதனை செய்ய அனுமதி வழங்கியது. விபத்தில் சிக்கி நரம்பியல் செயல்பாடு பாதிக்கப்பட்ட 29 வயதான நோலந்த் ஆர்பாக் என்ற இளைஞர் இந்த திட்டத்திற்காக தேர்வு செய்யப்பட்டார்.

வியப்பில் உலகம்.. மனித மூளையில் சிப்.. செஸ் காய்களை நகர்த்திய நபர்..

அறுவைசிகிச்சை மூலம் நியுரோலிங் சிப் பொருத்தப்பட்ட முதல் மனிதன்: கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர் மூளையில் சிறிய அறுவைசிகிச்சை மூலம் நியுரோலிங் மைக்ரோ சிப் பொருத்தப்பட்டது. அதற்கு பிறகு, சில நாட்களிலேயே இவர் உடல்நிலை ஆரோக்கியம் தேர்ச்சி பெற்றது. பிறகு இவருடைய மூளையில் பொருத்தப்பட்ட சிப் மூலம் கம்ப்யூட்டர் மவுஸ் கண்ட்ரோல் செய்யப்பட்டது. அவருடைய எண்ணங்களுக்கு ஏற்ப கம்ப்யூட்டர் மவுஸின் கர்ஸர் டிஸ்பிளேவில் நகரத் துவங்கியது.

இது மகத்தான வெற்றி இல்லை: இதுவொரு மகத்தான வெற்றியாக பார்க்கப்பட்டது. ஆனால், நியுரோலிங் திட்டம் இதற்காக உருவாக்கப்படவில்லை. இன்னும் ஏராளமான அற்புதங்களை சாத்தியமாக்கும் எண்ணத்தில் உருவாக்கப்பட்டது என்பதனால், சோதனைகள் தொடர்ந்தது. அடுத்தகட்ட பாய்ச்சலாக மனித மூளையில் பொருத்தப்பட்ட சிப் உதவியுடன், செஸ் கேமில் உள்ள காய்களை நோலந்த் ஆர்பாக் அவருடைய எண்ணங்கள் கொண்டு வெற்றிகரமாக நகர்த்த துவங்கியுள்ளார்.

மனித எண்ணத்தில் நகர்ந்த செஸ் காய்கள்.. வியந்து பார்த்த உலகம்: இது அடுத்தகட்ட வெற்றியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த செயலின் வீடியோ இப்போது இணையத்தில் வைரல் ஆகிவருகிறது. விரைவில், அடுத்த கட்ட சோதனைகள் நடத்தப்படவுள்ளது. இறுதியாக, நரம்பியல் கோளாறுகளால் எழுந்து நடக்கமுடியாமல் இருக்கும் நபர்களை நடக்க வைக்கும் நோக்கத்தில் நியுரோலிங் இப்போது செயல்பட்டு வருகிறது.

இது சாத்தியமா? சவாலில் வெற்றிபெற துடிக்கும் நியுரோலிங்: அதாவது, பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த சிப்பை பொருத்துவதன் மூலம் அவர்களால் எழுந்து நடக்க முடியும் என்று நியுரோலிங் நம்புகிறது. இதை விரைவில் சாத்தியமாக்கும் என்று உறுதிபட தெரிவித்துள்ளது. .அதேபோல், நரம்பியல் கோளாறால் தவிக்கும் மனிதர்களுக்கு இது மூளை அலைவரிசை மூலம் கம்ப்யூட்டர்களை கட்டுப்படுத்தும் சக்தியையும் வழங்கும் என்று நியுரோலிங் தெரிவித்துள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Elon Musk Neuralink Human Brain Chip Implant Person Controls Chess Coins Playing Computer Games
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X