Home
News

இதுவும் போச்சா.. மோடியின் தேர்தல் அறிக்கை.. அந்த 2 விஷயத்தை பார்த்துட்டு.. ஆடிப்போன ISRO விஞ்ஞானிகள்!

வழக்கமாக அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளை பார்த்து, பொதுமக்கள் தான் ஷாக் ஆவாரக்ள். ஆனால் பிரதமர் மோடியின்கீழ் இயங்கும் பாரதிய ஜனதா கட்சியானது.. இஸ்ரோ (ISRO) விஞ்ஞானிகளே ஷாக் ஆகும்படியான 2 விஷயங்களை தனது தேர்தல் அறிக்கையில் (BJP Election Manifesto) சேர்த்துள்ளது.

அப்படி என்ன வாக்குறுதிகளை அளித்துள்ளது? முதலாவதாக.. வரவிருக்கும் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால், இந்தியாவின் முதல் மனித விண்வெளி பயணமான (India's First Human Spaceflight) ககன்யான் (Gaganyaan) விண்ணில் ஏவப்பட்டு, அது வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கும் என்று தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மோடி அரசின் தேர்தல் வாக்குறுதி.. ஆடிப்போன ISRO விஞ்ஞானிகள்!

இதுவரை உலகின் 3 நாடுகள் மட்டுமே.. தற்போது ரஷ்யா (Russia) என்று அழைக்கப்படும் சோவியத் யூனியன், அமெரிக்கா (America) மற்றும் சீனா (China) மட்டுமே.. மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் மிஷனை வெற்றிகரமாக முடித்துள்ளன. ககன்யான் மிஷன் வெற்றிகரமாக முடிக்கப்பட்டால், இந்த பட்டியலில் இந்தியாவும் சேரும்.

கேட்பதற்கு மட்டுமல்ல, நடந்தாலும் கூட இது நன்றாகத்தான் இருக்கும்; ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் இது பெருமையாகத்தான் இருக்கும். ஆனால் இங்கே எழும் மிகவும் பொதுவான மற்றும் எளிமையான சில கேள்விகள் என்னவென்றால்.. "அரசியல்வாதிகளுக்கும் அறிவியலுக்கும் என்ன தொடர்பு?", "பல ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிடப்பட்டு விட்ட ஸ்பேஸ் மிஷன்களை மக்கள் நலத்திட்டங்களை போல தேர்தல் அறிக்கையில் சேர்க்க என்ன காரணம்?".

மோடி அரசின் தேர்தல் வாக்குறுதி.. ஆடிப்போன ISRO விஞ்ஞானிகள்!

இதற்கெல்லாம் நிச்சயம் பதில்கள் கிடைக்காது. ஏனென்றால்.. சந்திரயான்-3 மிஷன் ஏவப்பட்டபோது, நேரலையில் வந்து இந்திய கொடியை ஆட்டியதும் பிரதமர் மோடி தான். அது வெற்றிகரமாக நிலவின் தென்துருவதில் தரை இறங்கிய போது அதற்கான கிக்ரெடிட்களை எடுத்துக்கொண்டது பிரதமர் மோடி தான். அது தரை இறங்கிய இடத்திற்கு ஷிவ் சக்தி பாயிண்ட் (Shiv Shakti Point) என்று பெயரிட்டதும் மோடி தான்!

நிலைமை இப்படி இருக்கும் போது.. ககன்யான் மிஷன் எப்படி இஸ்ரோவின், அதில் பணியாற்றும் விஞ்ஞானிகளுக்கான (ISRO Scientist) வெற்றியாக மாறும்? இதெல்லாம் கண்டுகொள்ளாமல் இஸ்ரோ தொடர்ந்து வேலை செய்துகொண்டே வருகிறது. ககன்யான் தயாரிப்பு பணிகள் ஏற்கனவே தொடங்கி, தீவிரமாக நடந்து வருகின்றன.

மோடி அரசின் தேர்தல் வாக்குறுதி.. ஆடிப்போன ISRO விஞ்ஞானிகள்!

அடுத்த 2 ஆண்டுகளில், இந்த மிஷன் குறித்து பல தொழில்நுட்ப விளக்கங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. நினைவூட்டும் வண்ணம், இந்தியாவின் முதல் ஆளில்லா வாகன சோதனையானது (Unmanned Test Vehicle Flight) கடந்த அக்டோபர் மாதம் நடத்தப்பட்டது. இதற்கான அடுத்தக்கட்ட சோதனை அடுத்த சில மாதங்களில் நடத்தப்படவுள்ளது.

ககன்யான் எப்போது விண்ணில் செலுத்தப்படும்? இந்த மிஷன், இஸ்ரோ தலைவர் எஸ் சோமநாத்தின் தலைமையின் கீழ், 2025 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மிஷனில் பங்கேற்பதற்காக 4 விண்வெளி வீரர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களை 3 நாட்களுக்கு 400 கிமீ சுற்றுவட்டப்பாதையில் வைத்து, மீண்டும் பாதுகாப்பாக பூமிக்கு கொண்டு வருவதே இஸ்ரோவின் திட்டமாகும்.

அந்த இரண்டாவது தேர்தல் அறிக்கை என்ன? இது இஸ்ரோவின் இன்னொரு கனவுத்திட்டமான இந்தியன் ஸ்பேஸ் ஸ்டேஷனை பற்றியது. லியோ (LEO) என்று சுருக்கமாக அழைக்கப்படும் குறைந்த புவி சுற்றுப்பாதையில் இந்திய விண்வெளி நிலையத்தை உருவாக்கப்படும் என்றும் பிஜேபி தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

கேட்கும் போதே சிலிர்படையை வைக்கும் இந்த அறிக்கையில் ஒரு பெரிய டிவிஸ்டு உள்ளது. ககன்யான் மிஷனாவது பரவாயில்லை. சில சோதனைகள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளன; அடுத்த 2 ஆண்டுகளில் நடக்கும் என்கிற டைம்லைனை (Timeline) கொண்டுள்ளது. ஆனால் இந்திய விண்வெளி நிலையம் என்பது ஒரு கான்செப்ட் மட்டுமே ஆகும். அதாவது இது ஒரு கருத்தியல் கட்டத்தில் மட்டுமே உள்ளது.

இஸ்ரோவின் இந்த கான்செப்ட் ஒரு 'கம்ப்ளீட் மிஷன்' ஆக உருவாகவே இன்னும் 10 ஆண்டுகள் அல்லது அதற்கு மேலாக கூட ஆகலாம். தோராயமாக இது 2035-க்குள் ஒரு திட்டமிடப்பட்ட மிஷனாக நிறைவடையலாம். அதன் பின்னர் சாத்தியமான ஆய்வுகள் செய்யப்பட வேண்டும்; அதற்கான முன்மொழிவுகள் முறையான அரசாங்க ஒப்புதலுக்காக முன்வைக்கப்பட வேண்டும்; அதன் பின்னர் விண்வெளி நிலையத்தை அமைப்பதற்கான நிதி ஒதுக்கீடு கோரப்பட வேண்டும்; பின்னர் நிதி ஒதுக்கப்பட வேண்டும்.

இப்படியாக நிதி ஒதுக்கப்படவே இன்னும் 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகும் என்கிற ஒரு விண்வெளி திட்டத்தை 2024 ஆம் ஆண்டு நடக்கும் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருப்பது.. ஒரு நல்ல தொலைநோக்கு பார்வை தான். எல்லாமே படிப்படியாகத்தான் நடக்க வேண்டும். இருந்தாலும் கூட இங்கே மீண்டும் எழும் ஒரு கேள்வி என்னவென்றால் - ஒட்டுக்கும், இஸ்ரோவிற்கும் என்ன தொடர்பு?

More from GizBot

Best Mobiles in India

English summary
ISRO Dream Missions First Human Spaceflight Gaganyaan and Indian Space Station in Election Manifesto
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X