ஜியோவின் புதிய ரூ.49 & ரூ.69 திட்டம் பற்றி தெரியுமா? வேலிடிட்டி தெரிஞ்ச ஷாக் ஆகிடுவீங்க!

|

ரிலையன்ஸ் ஜியோ அதன் ஜியோபோன் பயனர்களுக்கு ரூ.49 மற்றும் ரூ.69 என்கிற இரண்டு 'குறுகிய காலம் செல்லுபடியாகும்' திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த இரண்டு புதிய திட்டங்களின் கீழ் என்ன நன்மைகள் கிடைக்கிறது என்று தெரிந்துகொள்ளுங்கள். இத்துடன் ஜியோ ரீசார்ஜ் தொகுப்பில் இருக்கும் மற்ற திட்டங்களின் விபரங்களையும் அறிந்துகொள்ளுங்கள்.

ஜியோவின் புதிய ரூ.49 திட்டம்

ஜியோவின் புதிய ரூ.49 திட்டம்

டிசம்பர் 2019 இல் நிகழ்த்தப்பட்ட கட்டண திருத்தத்திற்கு முன் ரிலையன்ஸ் ஜியோ, அதன் ஜியோ போன் பயனர்களுக்கு ரூ.49 திட்டத்தை வழங்கி வந்தது, ஆனால் பிறகு இது பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது. அண்மையில் நீக்கப்பட்ட அதே திட்டத்தை ஜியோ மீண்டும் சில மாற்றங்களுடன் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பிட்ட மாற்றம் இத்திட்டத்தின் வேலிடிட்டியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜியோ ரூ.49 திட்டம் விபரங்கள்

ஜியோ ரூ.49 திட்டம் விபரங்கள்

புதிய ஜியோ போன் ரூ.49 திட்டமானது உண்மையில் புதிய திட்டம் இல்லை, இதற்கு முன்பு ஜியோ இந்த திட்டத்தை வழங்கிவந்துள்ளது. இப்பொழுது வேலிடிட்டி மாற்றம் செய்யப்பட்டு புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் வரம்பற்ற ஜியோ டூ ஜியோ வாய்ஸ் அழைப்பு, மற்ற நெட்வொர்க்கு அழைப்புகளுக்கான 250 நிமிடங்கள், ஒட்டுமொத்தமாக 2 ஜிபி அளவிலான 4 ஜி டேட்டா மற்றும் 25 எஸ்எம்எஸ்கள் என அனைத்தும் 14 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

அடுத்த இடி.,இனி அந்த வங்கி ஏடிஎம்மில் ரூ.2000 நோட்டு வராது: ரூ.2000 செல்லாதா?-ரிசர்வ் வங்கி பதில்அடுத்த இடி.,இனி அந்த வங்கி ஏடிஎம்மில் ரூ.2000 நோட்டு வராது: ரூ.2000 செல்லாதா?-ரிசர்வ் வங்கி பதில்

பாதியாகக் குறைக்கப்பட்டுள்ள வேலிடிட்டி

பாதியாகக் குறைக்கப்பட்டுள்ள வேலிடிட்டி

தற்பொழுது ஜியோ அறிமுகம் செய்துள்ள இந்த குறைந்த கால செல்லுபடியாகும் திட்டம் 14 நாட்கள் வேலிடிட்டியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்பு ஜியோ வைத்திருந்த ரூ.49 திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது இத்திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

ஜியோ ரூ.69 திட்ட விபரங்கள்

ஜியோ ரூ.69 திட்ட விபரங்கள்

இந்த புதிய ரூ.69 ஜியோபோன் திட்டம் முற்றிலும் புதிய ஜியோ திட்டமாகும். இத்திட்டத்தின் கீழ் ஜியோ டூ ஜியோ உடனாக வரம்பற்ற குரல் அழைப்பு,மற்ற நெட்வொர்க்கு அழைப்புகளுக்கான 250 நிமிடங்கள், ஒட்டுமொத்தமாக 7 ஜிபி அளவிலான 4ஜி டேட்டா மற்றும் 25 எஸ்எம்எஸ்கள் என அனைத்தும் 14 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் ஜியோபோன் பயனர்களுக்குத் தினமும் 0.5 ஜிபி டேட்டா நன்மையுடன், ஜியோ ஆப்ஸ் சேவையும் கிடைக்கிறது.

NASA செல்லும் நாமக்கல் மாணவி., 9-ம் வகுப்பில் அசத்தல் செயல்- என்ன செய்தார் தெரியுமா?NASA செல்லும் நாமக்கல் மாணவி., 9-ம் வகுப்பில் அசத்தல் செயல்- என்ன செய்தார் தெரியுமா?

ஜியோவின் புதிய ரூ.2,121 திட்டம்

ஜியோவின் புதிய ரூ.2,121 திட்டம்

அதேபோல், ஜியோ சமீபத்தில் ரூ.2,121 என்ற புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டம் ஜியோ நியூ இயர் ஆஃப்பர் திட்டமான ரூ.2,020 திட்டத்திற்குப் பதிலாக அதே நன்மைகளுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முந்தைய ரூ.2,020 திட்டத்தின் கீழ் வரம்பற்ற ஜியோ - ஜியோ குரல் அழைப்பு, ஜியோ அல்லாத அழைப்புகளுக்கு FUP வரம்பு, தினசரி 1.5 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ சந்தா என 365 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்பட்டது.

தினசரி 1.5 ஜிபி டேட்டா ஆனால், வேலிடிட்டியில் மாற்றம்

தினசரி 1.5 ஜிபி டேட்டா ஆனால், வேலிடிட்டியில் மாற்றம்

தற்பொழுது அறிமுகம் செய்யப்பட்ட ரூ.2,121 ப்ரீபெய்ட் திட்டத்துடன், 12,000 வாயிஸ் கால் நிமிடங்கள், 1.5 ஜிபி தினசரி டேட்டா, 100 எஸ்எம்எஸ், JioTV மற்றும் JioCinema போன்ற பயன்பாடுகளுக்கான சந்தாவுடன், 336 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டியுடன் வருகின்றது. இந்த வேலிடிட்டி செல்லுபடி காலம் ஜியோ முன்பு வழங்கிய 365 நாட்கள் வேலிடிட்டியில் இருந்து 29 நாட்கள் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

FASTag பாதையில் தவறுதலாக நுழைந்தவர்களுக்கு அபராதம்! 20 கோடி வசூல்!FASTag பாதையில் தவறுதலாக நுழைந்தவர்களுக்கு அபராதம்! 20 கோடி வசூல்!

ஜியோ பயனர்களுக்கு ஷாக் கொடுக்கும் வேலிடிட்டி

ஜியோ பயனர்களுக்கு ஷாக் கொடுக்கும் வேலிடிட்டி

ஜியோ அறிமுகம் செய்துள்ள ரூ.49 திட்டம் மற்றும் ரூ.69 திட்டம் ஆகிய இரண்டு திட்டங்களின் வேலிடிட்டியும் குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஜியோ வழங்கிய ரூ.2,121 திட்டத்தின் வேலிடிட்டியம் 29 நாட்கள் குறைக்கப்பட்டுள்ளது என்பது அதன் பயனர்களுக்கு ஒரு ஷாக்காக இருக்கிறது.

குறைந்த கால நன்மைக்கு இந்த திட்டத்தை ரீசார்ஜ்  செய்யுங்கள்

குறைந்த கால நன்மைக்கு இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யுங்கள்

இந்த புதிய திட்டங்களை, ஜியா பயனர்கள் மைஜியோ ஆப் மற்றும் பிற மூன்றாம் தரப்பு ரீசார்ஜ் போர்ட்டல்களான பேடிஎம் மற்றும் ஃப்ரீசார்ஜ் மூலம் ரீசார்ஜ் செய்துகொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
Reliance Jio launches Rs 49 and Rs 69 plans come with a validity period of 14 days : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X