Home
News

கடைசி நேரத்துல முன்னாள் ISRO விஞ்ஞானி பகீர்.. INSAT-3DS லான்ச்.. 40% என்ன வேணா நடக்கலாம்.. ஏன்?

இஸ்ரோ (ISRO) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமானது (Indian Space Research Organization) இன்று மாலை, அதாவது பிப்.17 ஆம் தேதி மாலை, அதன் ஜிஎஸ்எல்வி எப்14 (GSLV F14) ராக்கெட்டின் வழியாக இன்சாட்-3டிஎஸ் செயற்கைகோளை (INSAT-3DS Satellite) விண்ணில் செலுத்தவுள்ளது.

இஸ்ரோ விஞ்ஞானிகள் மத்தியில் இந்த ஜிஎஸ்எல்வி எப்14 ராக்கெட்டிற்கு "நாட்டி பாய்" (Naughty Boy) என்கிற பட்டப்பெயரும் உள்ளது. இந்த பெயருக்கு பின்னால் உள்ள காரணம் என்ன? இன்சாட்-3டிஎஸ் எப்போது விண்ணில் செலுத்தப்படும்? செலுத்தப்பட்ட பின்னர் அது என்னென்ன வேலைகளை செய்யும்? இதோ விவரங்கள்:

INSAT-3DS லான்ச்.. 40% என்ன வேணா நடக்கலாம்.. ஏன்?

இன்சாட்-3டிஎஸ் சாட்டிலைட் உடனான ஜிஎஸ்எல்வி எப்14 ராக்கெட் எப்போது விண்ணில் சீறிப்பாயும்? இன்சாட்-3டிஎஸ் என்பது இந்தியாவிற்கான புதிய வானிலை செயற்கைக்கோள் (Meteorological satellite) ஆகும். ஏற்கனவே இருக்கும் வானிலை செயற்கைக்கோள்களை விட, இன்னும் துல்லியமான முறையில் வானிலை தொடர்பான முன்னறிவிப்புகள் மற்றும் இயற்கை பேரிடர் தொடர்பான எச்சரிக்கைகளை வழங்கும் நோக்கத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளது.

முன்னரே குறிப்பிட்டபடி, இன்சாட்-3டிஎஸ் சாட்டிலைட் ஆனது இஸ்ரோவின் ஜிஎஸ்எல்வி எப்14 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்படவுள்ளது. இந்த ராக்கெட், ஆந்திரப் பிரதேசத மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் (Sriharikota in Andhra Pradesh) உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் (Satish Dhawan Space Centre ) இருந்து பிப்ரவரி 17 ஆம் தேதி மாலை 5:35 மணிக்கு விண்ணில் ஏவப்படும்.

INSAT-3DS லான்ச்.. 40% என்ன வேணா நடக்கலாம்.. ஏன்?

இன்சாட்-3டிஎஸ் சாட்டிலைட்டின் முக்கிய நோக்கங்கள்: முன்னரே குறிப்பிட்டபடி இதுவொரு வானிலை செயற்கைக்கோள் ஆகும். இது கடலின் மேற்பரப்பை ஆய்வு செய்வதன் மூலம் மிகவும் துல்லியமான மற்றும் தகவல்கள் மிக்க வானிலை முன்னறிவிப்புகளை பெற உதவும். கூடவே இயற்கை பேரழிவு தொடர்பான எச்சரிக்கைகளையும் வழங்கும்.

ஜிஎஸ்எல்வி எப்14 ராக்கெட்டிற்கு இது எத்தனையாவது மிஷன்? ஜிஎஸ்எல்வி (GSLV) என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஜியோசின்க்ரோனஸ் சேட்டிலைட் லாஞ்ச் வெஹிக்கிளுக்கு (Geosynchronous Satellite Launch Vehicle) இன்சாட் 3டிஎஸ் சாட்டிலைட் ஆனது 16வது ஸ்பேஸ் மிஷன் ஆகும். இந்த ராக்கெட்டின் வேலை - இன்சாட்-3டிS செயற்கைக்கோளை ஜியோசின்க்ரோனஸ் டிரான்ஸ்ஃபர் ஆர்பிட்டில் (Geosynchronous Transfer Orbit - GTO) நிலைநிறுத்துவதே ஆகும்.

INSAT-3DS லான்ச்.. 40% என்ன வேணா நடக்கலாம்.. ஏன்?

வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்படுமா அல்லது ஏதேனும் தவறாக நடக்க வாய்ப்புள்ளதா? இந்த கேள்விக்கான பதிலில் தான்.. ஜிஎஸ்எல்வி எஃப்14 ராக்கெட் ஆனது ஏன் நாட்டி பாய் என்று அழைக்கப்படுகிறது என்பதற்கான காரணமும் உள்ளது. இஸ்ரோவின் முன்னாள் தலைவர், ஜிஎஸ்எல்வி எஃப்14 ராக்கெட்டை "நாட்டி பாய்" என்று குறிப்பிடுகிறார்.

ஏனென்றால் ஜிஎஸ்எல்வி ராக்கெட் ஆனது கடந்த காலங்களில் பல தடைகளை சந்தித்துள்ளது. இது 40 சதவீத தோல்வி விகிதத்தையும் (40% Failure rate) கொண்டுள்ளது. இன்றுவரையிலாக ஜிஎஸ்எல்வி எஃப்14 ராக்கெட் ஆனது மொத்தம் 15 ஸ்பேஸ் மிஷன்களை பார்த்துள்ளது, அவற்றில் 6 மிஷன்களில் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளது.

கடைசியாக 2023 ஆம் ஆண்டு மே மாதத்தில் ஜிஎஸ்எல்வி எஃப்14 ராக்கெட் தனது ஸ்பேஸ் மிஷனை வெற்றிகரமாக முடித்தது. ஆனால் அதற்கு முந்தைய மிஷன் தோல்வியில் முடிந்தது. இப்படியாக ஜிஎஸ்எல்வி எஃப்14 ராக்கெட் ஆனது என்ன மாதிரியான முடிவை வழங்கும் என்பதை கணிக்கவே முடியாது என்பதால் தான் என்னவோ.. அதை நாட்டி பாய் (Naughty boy) என்று அழைக்கப்படுகிறது போல!

தோல்வியில் கூட முடியலாம் என்கிற கட்டத்திலும் இன்சாட்-3டிஎஸ் மிஷனுக்கான நிதியுதவி எங்கிருந்து வந்தது? ஜிஎஸ்எல்வி எஃப்14 ராக்கெட் மூலம் ஜியோசின்க்ரோனஸ் டிரான்ஸ்ஃபர் ஆர்பிட்டிற்கு செலுத்தப்படவுள்ள இன்சாட்-3டிஎஸ் சாட்டிலைட் மிஷனிற்கான நிதியுதவி "முழுக்க முழுக்க" புவி அறிவியல் அமைச்சகத்தால் ( Ministry of Earth Sciences) செய்யப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Why ISRO Called GSLV F14 Rocket As Naughty Boy 5 Interesting Facts About INSAT 3DS Satellite Launch
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X