Mark பண்ண உருப்படியான விஷயம்.. WhatsApp போட்டோவில் முக்கிய மாற்றம்.. இனிமே வச்சி விளையாடலாம்!
சாட்ஸ், ஸ்டேட்டஸ், கம்யூனிட்டீஸ் மற்றும் கால்ஸ் ஆகியவைகளை உள்ளடக்கிய நேவிகேஷன் பார்-ஐ வாட்ஸ்அப் ஹோம் ஸ்க்ரீனுக்கு கீழே கொண்டு வந்த கையோடு, வாட்ஸ்அப்பில் (WhatsApp) புதிய எடிட் ஆப்ஷன் ஒன்றும் சேர்க்கப்படவுள்ளது. அது எங்கே உள்ளது? இதனால் என்ன பயன்? இதோ விவரங்கள்:
வாட்ஸ்அப்பில் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி போட்டோக்களை எடிட்டிங் செய்யும் புதிய அம்சம் கூடிய விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. பெயர் குறிப்பிடுவது போலவே, இது ஏஐ உதவுடன் போட்டோக்களின் பேக்கிரவுண்டை மாற்றுவது, மறுசீரமைப்புகளை செய்வது, இமேஜ் சைஸ்-ஐ எக்ஸ்பான்ட் செய்வது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை செய்து புகைப்படங்களை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டபுள்யூஏபீட்டாஇன்ஃபோ (WABetaInfo) வழியாக கிடைத்த அறிக்கையின்படி, ஆண்ட்ராய்டுக்கான லேட்டஸ்ட் பீட்டா அப்டேட் (வெர்ஷன் 2.24.7.13) ஆனது ஏஐ அடிப்படையிலான இமேஜ் எடிட்டருக்கான அடிப்படை குறியீட்டை கொண்டுள்ளது. இருப்பினும், இந்த அம்சம் இன்னுமும் உருவாக்கத்தில் உள்ளது. ஏனென்றால் இது பீட்டா புரோகிராமில் உள்ளவர்களுக்கு கூட டெஸ்டிங்கிற்காக அனுப்பி வைக்கப்படவில்லை.
வாட்ஸ்அப்பிற்கு வரும் இந்த புதிய ஏஐ இமேஜ் எடிட்டர் ஆனது ஏற்கனவே அனுககிடைக்கும் எச்டி ஐகானுக்கு அருகில், ஒரு பச்சை நிற ஐகானாக அணுக கிடைக்கும். அதன் கீழ் பேக்ட்ராப் (Backdrop), ரீஸ்டைல் (Restyle) மற்றும் எக்ஸ்பான்ட் (Expand) உள்ளிட்ட தேர்ந்தெடுக்கக்கூடிய விருப்பங்கள் அணுக கிடைக்கும். அந்த விருப்பங்கள் ஒவ்வொன்றும் தனித்துவமான எடிட்டிங் திறன்களை கொண்டிருக்கும். இருப்பினும் அவற்றின் செயல்பாடுகள் குறித்த சரியான விவரங்கள் வெளியிடப்படவில்லை.

சமீபத்தில் பெர்சனல் சாட் மற்றும் க்ரூப் சாட், ஆகிய இரண்டிற்குமே பொருந்தும்படியான புதிய மாற்றம் ஒன்றையும் வாட்ஸ்அப் கொண்டு வந்தது. வாட்ஸ்அப் நிறுவனம் அதன் பின் மெசேஜஸ் (PIN Messages) அம்சத்தில் முக்கிய மாற்றத்தை கொண்டு வந்து, ஒரு மெசேஜிற்கு பதிலாக இனிமேல் 3 மெசேஜ்களை பின் செய்யும் வசதியை அறிமுகம் செய்தது.
அதாவது இனிமேல் ஒவ்வொரு சாட்டிலும் 3 மெசேஜ்களை பின் வைத்து வைக்க முடியும். நினைவூட்டும் வண்ணம், பின் மெசேஜஸ் என்பது ஒரு பெர்சனல் சாட் அல்லது க்ரூப் சாட்டின் மேல் பகுதியில் ஒரு முக்கியமான மெசேஜை பின் செய்ய உதவும் அம்சமாகும். இதை செய்ய, சாட்டில் உள்ள ஒரு குறிப்பிட்ட மெசேஜை லாங் பிரஸ் (Long Press) செய்ய வேண்டும். பின்னர் வலது மேல்பக்கத்தில் உள்ள த்ரீ டாட் ஐகானை (Three dot icon) கிளிக் செய்ய வேண்டும். அதன் கீழ் கிடைக்கும் 'பின்' (Pin) என்கிற விருப்பத்தை கிளிக் செய்யவும்.

பின்னர் "எவ்வளவு காலத்திற்கு இந்த மெசேஜை பின் செய்து வைக்க வேண்டும்?" என்கிற கேள்வியோடு சேர்த்து உங்களுக்கு 3 விருப்பங்கள் (24 மணிநேரம், 7 நாட்கள், 30 நாட்கள்) கிடைக்கும். அவைகளில், உங்களுக்கு விருப்பமான ஏதேனும் ஒன்றை தேர்வு செய்யவும். கடைசியாக ஓகே என்பதை கிளிக் செய்யவும். அவ்வளவு தான். குறிப்பிட்ட மெசேஜ், குறிப்பிட்ட சாட்டில் பின் செய்யப்பட்டு இருக்கும்!
இதற்கு முன்னதாக வாட்ஸ்அப்பிற்கு வந்த முக்கிய மாற்றம் என்றால்.. புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட 4 டெக்ஸ்ட் ஃபார்மெட்டிங் விருப்பங்களை (Text Formatting Options) கூறலாம். இவைகள் வாட்ஸ்அப்பில் ஏற்கனவே அணுக கிடைக்கும் போல்ட் (Bold), இடாலிக் (Italic), ஸ்ட்ரைக்த்ரோ (Strikethrough) மற்றும் மோனோஸ்பேஸ் (Monospace) ஆகிய 4 டெக்ஸ்ட் ஃபார்மெட்டிங் விருப்பங்களுடன் இணைந்துள்ளன.
தற்போது இந்த 4 புதிய டெக்ஸ்ட் ஃபார்மெட்டிங் விருப்பங்களுமே அனைத்து ஆண்ட்ராய்டு (Android), ஐஓஎஸ் (iOS), வெப் (Web) மற்றும் மேக் (Mac) டெஸ்க்டாப் என அனைத்து பயனர்களுக்கும் அணுக கிடைக்கிறது. வாட்ஸ்அப் நிறுவனம் இவைகளை - புல்லடட் லிஸ்ட் (Bulleted List), நம்பர்டு லிஸ்ட் (Numbered List), பிளாக் கோட் (Block Quote) மற்றும் இன்லைன் கோட் (Inline Code) என்று குறிப்பிடுகிறது.


Click it and Unblock the Notifications








