WhatsApp-ல ஸ்டேட்டஸ் போடுறீங்களா? வருது புது அப்டேட்.. டபுள் சந்தோஷத்தில் பயனர்கள்.. என்ன மேட்டர் தெரியுமா?
வாட்ஸ்அப் (WhatsApp) இல் தினம்தோறும் ஸ்டேட்டஸ் வைக்கும் பயனர்களில் நீங்கள் ஒருவர் என்றால், உங்களுக்கு ஒரு குட் நியூஸ் வெளியாகியுள்ளது. வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் பயனர்களை கவரும் விதமாக ஒரு புதிய அப்டேட்டை நிறுவனம் விரைவில் வெளியிடவுள்ளது. அது பற்றிய விபரங்கள் இதோ.
வாட்ஸ்அப் நிறுவனம் தொடர்ந்து அதன் பயனர்களின் தேவையை அறிந்து, பல பல புதிய அப்டேட்களை அதன் தளத்தில் அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், நீண்ட காலமாக வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைக்கும் பயனர்கள் எதிர்பார்த்த எந்தவொரு சூப்பர் அப்டேட்டை இறுதியாக நிறுவனம் இப்போது வெளியிடவுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

வாட்ஸ்அப் 60 வினாடி ஸ்டேட்டஸ் அப்டேட் (WhatsApp 60 Second Status Update):
ஆம், இப்போது வரை வாட்ஸ்அப் இல் ஸ்டேட்டஸ் வைக்கும் பொழுது 30 வினாடி வீடியோவை மட்டுமே ஸ்டேட்டஸ் ஆக வைக்க வாட்ஸ்அப் அனுமதிக்கிறது. இந்த 30 வினாடி ஸ்டேட்டஸ் நேரம் போதாது என்று பல முறை வாட்ஸ்அப் பயனர்கள் குமுறி புகார் அளித்து வந்தனர். ஒரு வழியாக இவர்களின் புகார்களுக்கு செவி சாய்த்துள்ள வாட்ஸ்அப் நிறுவனம் இந்த 30 வினாடி கால அவகாசத்தை இரட்டிப்பாக்க முடிவு செய்துள்ளது.
ஆம், விரைவில் இனி வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் அளவு 60 வினாடிகளாக மாற்றப்படவுள்ளது. இதற்கான வேலைகளை வாட்ஸ்அப் இப்போது மிகவும் வேகமாக செய்து வருவதாக வாட்ஸ்அப் பீட்டா இன்ஃபோ (WABetaInfo) வலைப்பக்க தகவல் குறிப்பிட்டுள்ளது. வாட்ஸ்அப் பீட்டா பக்கத்தில் வெளியான தகவலின் படி, நிறுவனம் இப்போத 60 வினாடி வீடியோக்களை அனுமதிக்கும் புதிய அப்டேட்டை சோதனை செய்து வருகிறது.
இந்த புதிய பீட்டா அப்டேட் ஆனது, வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷன் ஆண்ட்ராய்டு 2.24.7.6 இல் சோதனை செய்யப்பட்டு வருகிறது என்ற உறுதியான தகவல் இப்போது இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இந்த தகவல் உலக வாட்ஸ்அப் பயனர்களை குஷியடைய செய்துள்ளது. இந்த சோதனை அம்சம் இப்போது சில பீட்டா வெர்ஷன் பயனர்களுக்கு பயன்படுத்த கிடைக்கிறது.

இந்த புதிய 60 வினாடி வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வீடியோ அம்சத்தை நீங்களும் ட்ரை செய்ய விரும்பினால், லேட்டஸ்ட் வாட்ஸ்அப் பீட்டா ஆண்ட்ராய்டு அப்டேட்டை அப்டேட் செய்து முயற்சிக்கலாம். இத்துடன் வாட்ஸ்அப் நிறுவனம் மற்றொரு அப்டேட்டையும் சோதனை செய்து வருவதாக கூறப்பட்டுள்ளது. இந்த புதிய அம்சம் பயனர்களை மிகவும் விரைவாக UPI பேமெண்ட் செய்ய அனுமதிக்கிறது.
வாட்ஸ்அப் QR ஷார்ட்கட் அப்டேட் (WhatsApp QR Shortcut Update):
இந்த புதிய அம்சம் பயனர்களை இரண்டு டேப், அதாவது இரண்டு முறை டச் செய்தவுடன் UPI மூலம் பணம் செலுத்த அனுமதிக்கும் அம்சமாக உருவாக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் இல் உள்ள மூன்று-புள்ளி மெனுவைத் தட்டி, Payments > Scan payment QR code குறியீட்டைத் தேர்ந்தெடுப்பதற்குப் பதிலாக, பீட்டா சோதனையாளர்கள் பிரைமரி சாட் லிஸ்டிற்கு மேலே உள்ள பிரத்யேக QR குறியீடு ஸ்கேனர் ஷார்ட்கட்டைத் தட்டலாம்.
இது கேமராவின் இடதுபுறத்தில் அமைந்துள்ளது. டிஸ்பிளேவின் மேல் வலது மூலையில் கேமரா மற்றும் சர்ச் ஐகான் வரிசையில் முதலாவது ஐகானாக இந்த புதிய QR ஸ்கேன் ஐகான் இடம்பெறுகிறது. இந்த புதிய அப்டேட்டும் கூட விரைவில் பொது வாட்ஸ்அப் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என்று வாட்ஸ்அப் அறிவித்துள்ளது. இனி வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்களில் 1 நிமிட வீடியோவை பயன்படுத்த பயனர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர் என்பதே உண்மை.


Click it and Unblock the Notifications








