WhatsApp-க்கு வரும் கட்டாய அம்சம்.. Status வைப்பதில் புது டிவிஸ்டு.. மார்க் அண்ணே.. இதெல்லாம் தேவையா நமக்கு?
மார்க் ஜூக்கர்பெர்க் தலைமையிலான மெட்டா நிறுவனத்தின் கீழ் இயங்கும் வாட்ஸ்அப் (WhatsApp) ஆனது, கடந்த சில வாரங்களில் தனது மெசேஜிங் பிளாட்ஃபார்மில் "பெரிய பெரிய மாற்றங்களை" செய்துவிட்டது என்றே கூறலாம். அதெல்லாம் போதாதென்று தற்போது மேலும் ஒரு முக்கிய மாற்றத்தை செய்துள்ளது.
யூசர் என்கேஜ்மென்ட் மற்றும் இன்டெராக்ஷனை (User engagement and interaction) மேம்படுத்தும் நோக்கத்தின் கீழ், அதாவது பயனர்கள் அதிக ஈடுபாடு உடனும், முன்பை விட ஒருவருக்கு ஒருவர் அதிகமாக தொடர்பில் இருக்க வேண்டும் என்கிற நோக்கத்தின் கீழ், வாட்ஸ்அப் நிறுவனமானது, புது வகை நோட்டிஃபிக்கேஷன் ஒன்றை அறிமுகம் செய்யவுள்ளது.

இந்த புதிய நோட்டிஃபிக்கேஷன் ஆனது உங்கள் காண்டாக்ட் லிஸ்ட்டில் உள்ள யாராவது ஸ்டேட்டஸ் வைத்தால்.. அது தொடர்பான அறிவிப்பை உங்களுக்கு நேரடியாக வழங்கும். இது இன்னமும் சோதனை கட்டத்தில் தான் இருக்கிறது என்பதால், இது சரியாக எப்படி வேலை செய்யும் என்பதை அறிந்துகொள்ள முடியவில்லை.
அதாவது.. உங்களுக்கு ஒரு மெசேஜ் அனுப்பப்பட்டால், அது தொடர்பாக வரும் நோட்டிஃபிக்கேஷனை போலவே, யாரெல்லாம் ஸ்டேட்டஸ் வைக்கிறார்களோ அது தொடர்பான நோட்டிஃபிக்கேஷனும் உங்களுக்கு கிடைக்குமா? அல்லது.. குறிப்பிட்ட ஸ்டேட்டஸ் ஆனது கூடிய விரைவில் மறைய போகிறது, அதை உடனே பார்க்கவும் என்கிற மாதிரியான நோட்டிஃபிக்கேஷன் வருமா? என்பதில் தெளிவு இல்லை!

எது எப்படி இருந்தாலும், இந்த புதிய நோட்டிஃபிக்கேஷன் ஆனது வாட்ஸ்அப் பயனர்களை ஏதோவொரு வகையில் கட்டாயப்படுத்துவது போல் உள்ளது. யாருக்கெல்லாம் எப்போது நேரம் கிடைக்கிறதோ.. அப்போதெல்லாம் ஸ்டேட்டஸ் அப்டேட் பிரிவிற்கு சென்று.. யாரெல்லாம் என்னென்ன ஸ்டேட்டஸ் வைத்துள்ளனர் என்பதை பார்ப்பதை வழக்கமாக கொண்டுள்ள நமக்கு.. இந்த அம்சம் உண்மையிலேயே "தேவை இல்லாத ஆணி" தான்!
இதே வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் இன்னொரு மாற்றமும் வந்துள்ளது! வாட்ஸ்அப் நிறுவனமானது அதன் ஸ்டேட்டஸ் அப்டேட்ஸில் (Status updates) பிரைவேட்லி டேக் காண்டாக்ஸ் (Privately tag contacts) என்கிற புதிய அம்சத்தை சேர்த்துள்ளது. தற்போது வரையிலாக இந்த புதிய ப்ரைவேட் டேக் அம்சமானது பீட்டா டெஸ்டிங்கிற்கான ஆண்ட்ராய்டு வெர்ஷன் 2.24.6.19-ல் அணுக கிடைக்கிறது.

அதாவது இந்த அம்சம் கடைசிக்கட்ட சோதனையில் உள்ளது. இது அனைத்து வாட்ஸ்அப் பயனர்களுக்கு வந்துசேர இன்னும் சில நாட்கள் ஆகலாம். பெயர் குறிப்பிடுவது போலவே இது ஸ்டேட்டஸ் அப்டேட்டில் தங்கள் காண்டாக்ட்ஸ்-ன் கீழ் உள்ள நபர்களை தனிப்பட்ட முறையில் டேக் செய்ய முடியும்.
அதாவது இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸில் நண்பர்களையோ அல்லது பிற பயனர்களையோ டேக் செய்யும் அம்சம் உள்ளது அல்லவா.. அதனுடைய "வேறுபட்ட ஒரு பிரதிபலிப்பு" தான் வாட்ஸ்அப்பிற்கு வந்துள்ள பிரைவேட்லி டேக் காண்டாக்ஸ் அம்சமாகும். இது எப்படி வேறுபடுகிறது என்றால்.. வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் ஒருவரை ப்ரைவேட் ஆக டேக் செய்யும் போது, அந்த ஸ்டேட்டஸை பார்க்கும் மற்ற பார்வையாளர்களுக்கு அந்த டேக் தெரியாது.
மாறாக யார் டேக் செய்யப்பட்டு இருக்கிறார்களோ, அவர்களுக்கு மட்டுமே தாங்கள் டேக் செய்யப்பட்டது தெரியும். இருப்பினும் அவர்களுக்கு இதுகுறித்த அலெர்ட் ஒன்று கிடைக்கும். இது ஃபேஸ்புக்கில் ஒருவர் நம்மை டேக் செய்யும் போது நமக்கு கிடைக்கும் அலெர்ட் நோட்டிஃபிக்கேஷன் போல செயல்படலாம்.
இதுதவிர்த்து வாட்ஸ்அப்பில், ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி போட்டோக்களை எடிட்டிங் செய்யும் ஒரு புதிய அம்சமும் சேர்க்கப்படவுள்ளது. பெயர் குறிப்பிடுவது போலவே, இது ஏஐ உதவுடன் போட்டோக்களின் பேக்கிரவுண்டை மாற்றுவது, மறுசீரமைப்புகளை செய்வது, இமேஜ் சைஸ்-ஐ எக்ஸ்பான்ட் செய்வது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை செய்து புகைப்படங்களை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வாட்ஸ்அப்பிற்கு வரும் இந்த புதிய ஏஐ இமேஜ் எடிட்டர் ஆனது ஏற்கனவே அனுக கிடைக்கும் எச்டி ஐகானுக்கு அருகில், ஒரு பச்சை நிற ஐகானாக அணுக கிடைக்கும். அதன் கீழ் பேக்ட்ராப் (Backdrop), ரீஸ்டைல் (Restyle) மற்றும் எக்ஸ்பான்ட் (Expand) உள்ளிட்ட தேர்ந்தெடுக்கக்கூடிய விருப்பங்கள் அணுக கிடைக்கும்.
அந்த விருப்பங்கள் ஒவ்வொன்றும் தனித்துவமான எடிட்டிங் திறன்களை கொண்டிருக்கும். சமீபத்தில் வாட்ஸ்அப் நிறுவனமானது.. சாட்ஸ், ஸ்டேட்டஸ், கம்யூனிட்டீஸ் மற்றும் கால்ஸ் ஆகியவைகளை உள்ளடக்கிய நேவிகேஷன் பார்-ஐ வாட்ஸ்அப் ஹோம் ஸ்க்ரீனுக்கு கீழே கொண்டு வந்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது!


Click it and Unblock the Notifications