Home
News

WhatsApp-ல் திடீரென தோன்றிய நீல நிற வட்ட ஐகான்.. இது என்ன செய்யும்? இதை மக்கள் எப்படி பயன்படுத்தலாம்?

இந்தியாவில் உள்ள சில வாட்ஸ்அப் (WhatsApp) பயனர்களின் மெயின் சாட் பாக்ஸில் புதிதாக ஒரு சிறிய நீல நிற வட்ட ஐகான் காண துவங்கியுள்ளது. இது மெட்டா (Meta) நிறுவனத்திற்கு சொந்தமான லாமா (Llama) ஏஐ (AI) அம்சத்திற்குரியது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆம், மக்களே நீங்கள் யூகிப்பது சரி தான். வாட்ஸ்அப் இப்போது அதன் தளத்தில் ஏஐ அம்சத்தை (WhatsApp AI) வழங்க துவங்கியுள்ளது. வாட்ஸ்அப் நிறுவனம் அதன் மெசேஜ்ஜிங் (Messaging platform)தளத்தில் தரத்தை உயர்த்தவும், அதன் வாட்ஸ்அப் பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்த நிறுவனம் பல புதிய அம்சங்களை அதன் புதிய வாட்ஸ்அப் அப்டேட் (WhatsApp Update) மூலம் அறிமுகம் செய்து வருகிறது.

WhatsApp-ல் திடீரென தோன்றிய நீல நிற வட்ட ஐகான்.. இது என்ன செய்யும்?

வாட்ஸ்அப் உல் திடீரென காணப்பட்ட நீல நிற வட்ட ஐகான் (A blue circular icon suddenly appeared on WhatsApp):

அந்த வகையில் இந்த முறை வாட்ஸ்அப் நிறுவனம் AI அம்சத்தை இந்தியாவில் உள்ள சில பயனர்களுக்கு கிடைக்க செய்துள்ளது. இந்தியாவில் உள்ள வாட்ஸ்அப் பயனர்களின் மெயின் சாட் பக்கத்தில் (main chat page) புதிதாக கீழ் வலதுபுறத்தில் ஒரு சிறிய நீல-நிற வட்ட ஐகான் (small blue colour circular icon) காண்பிக்கப்படுகிறது. அதை கிளிக் செய்தால், மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான மெட்டா ஏஐ (Meta AI) அம்சம் திறக்கப்படுகிறது.

இதன் மூலம் நேரடியாக வாட்ஸ்அப் தளத்தில், இப்போது மெட்டா ஏஐ (Meta AI) அம்சம் கிடைக்க துவங்கியுள்ளது. இதை வாட்ஸ்அப் இப்போது Meta AI #with Llama# என்ற விபரத்துடன் காண்பிக்கிறது. மெட்டா ஏஐ அல்லது லாமா என்பது இந்த ஏஐ அம்சத்தின் பெயராகும். இதுவொரு முதல் வெர்ஷன் லாமா (Llama) ஏஐ என்பது கவனிக்கத்தக்கது.

சமீபத்தில் வாட்ஸ்அப் நிறுவனம் லாமா 2 (Llama 2) ஏஐ அம்சத்தை சோதனை செய்து அறிமுகம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்தியாவில் உள்ள வாட்ஸ்அப் பயனர்களுக்கு இப்போதைக்கு ஆரம்பக்கட்டமாக லாமா (Llama) ஏஐ வெர்ஷன் 1 அம்சம் மட்டுமே பயன்படுத்த கிடைக்கிறது. இந்த அம்சத்தை வாட்ஸ்அப் இப்போது இந்திய பயனர்களிடம் சோதனை செய்வதாக கூறப்படுகிறது.

WhatsApp-ல் திடீரென தோன்றிய நீல நிற வட்ட ஐகான்.. இது என்ன செய்யும்?

மெட்டா ஏஇ அல்லது லாமா என்றழைக்கப்படும் புது வாட்ஸ்அப் ஏஐ அம்சம் (New WhatsApp AI Feature Called Meta AI or Llama):

இந்த சோதனை வெற்றி அடைந்த பிறகு, மெட்டா நிறுவனம் வாட்ஸ்அப் தளத்தில் இன்னும் கூடுதல் சக்தி கொண்ட லாமா (Llama) ஏஐ அம்சத்தை பயன்படுத்த கொண்டுவரும் என்று கூறப்பட்டுள்ளது. அடுத்த சில வாரங்களில் மெட்டா நிறுவனம், லாமா 3 (Llama 3) ஏஐ அம்சத்தை அறிமுகம் செய்யவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இது மைக்ரோசாப்ட் (Microsoft) நிறுவனத்தின் கோர்ட்டான (Cortana) அசிஸ்டன்ட் போன்றது.

இந்திய வாட்ஸ்அப் பயனர்களுக்கு கிடைக்கு புதிய மெட்டா ஏஐ அம்சம் அல்லது லாமா (Llama) அம்சம் உண்மையில் என்ன செய்யுமென்று இப்போது பார்க்கலாமா? உங்களுக்கு தெரிந்த வழக்கமான AI போன்று தான் இந்த ஏஐ அம்சமும் செயல்படுகிறது. AI இடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு இதில் பதில் அளிக்கிறது. உங்களுக்கு இருக்கும் சந்தேகங்களுக்கான விடையை இந்த AI மூலம் கேட்டு நீங்கள் அறிந்துகொள்ளலாம்.

வாட்ஸ்அப் இல் காணப்படும் புதிய மெட்டா ஏஐ லாமா இப்போது பல விதமான தகவல்களை வழங்குகிறது. அதேபோல், அதுவே பல தலைப்புகளிலில் இருந்து உங்களை ஏதேனும் ஒன்றை கிளிக் செய்ய அனுமதிக்கிறது. உங்கள் விருப்பத்திற்கேற்ற தேர்வின் அடிப்படையில் விளக்கங்களை வழங்குகிறது. இது பயனர்களை வாட்ஸ்அப் உடன் கூடுதல் நேரம் இணைத்து வைக்கிறது.

இந்த AI உங்கள் சாட் மற்றும் வாட்ஸ்அப் புகைப்படங்களை படிக்கும் என்ற கவலை பயனர்களுக்கு இருக்க வேண்டாம் என்றும் வாட்ஸ்அப் கூறியுள்ளது. இதுவொரு சாதரண ஏஐ மட்டுமே. உங்கள் வாட்ஸ்அப் சாட், வீடியோ கால், வாய்ஸ் கால் தகவல்கள் எல்லாம் எண்டு-டு-எண்டு என்கிரிப்ஷன் உடன் வருகிறது என்பதனால், உங்கள் வாட்ஸ்அப் தகவலை உங்களை தவிர வேறு யாரும் அணுக முடியாது என்று வாட்ஸ்அப் உறுதியளித்துள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
WhatsApp Starts Testing Meta AI With Llama For Some Indian Users With New Circle Icon How To Use It
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X