Home
News

முடிஞ்சா பண்ணி காட்டு.. சூடான சுந்தர் பிச்சை.. TrueCaller-ஐ தொடர்ந்து WhatsApp-க்கு வெடி வச்ச Google நிறுவனம்!

ட்ரூகாலர் (TrueCaller) ஆப்பின் கதையை முடிக்க கூகுள் (Google) நிறுவனமானது ஒரு பக்காவான ஸ்கெட்ச்-ஐ போட்டுள்ளது. லுக்அப் (LookUp) என்கிற புதிய டூலை அதன் போன் ஆப்பில் சேர்ப்பதன் வழியாக ட்ரூகாலரை பயன்படுத்தும் பெரும்பாலான மக்களை தன்வசம் ஈர்க்க திட்டமிட்டு உள்ளது.

இதற்கிடையில் வாட்ஸ்அப்பிற்கு (WhatsApp) வெடி வைக்கும் வேலை ஒன்றையும் கூகுள் நிறுவனம் செய்துள்ளது. முதலில் கூகுளின் லுக்அப் டூல் என்றால் என்ன? அது என்ன செய்யும்? இதெப்படி ட்ரூகாலர் ஆப்பை பயன்படுத்தும் பயனர்களை கூகுள் போன் ஆப்பிற்கு ஈர்க்கும்? என்பதை பற்றி சுருக்கமாக பார்த்துவிடலாம். பின்னர் வாட்ஸ்ஆப் தலையில் என்ன இடி இறங்கவுள்ளது என்பதை பற்றி பார்ப்போம்.

TrueCaller-ஐ தொடர்ந்து WhatsApp-க்கு வெடி வச்ச Google நிறுவனம்!

கூகுளின் லுக்அப் டூல் ஆனது தெரியாத அல்லது உங்கள் காண்டாக்ட் லிஸ்ட்டில் சேமிக்கப்படாத எண்களில் இருந்து வரும் அழைப்புகளை அடையாளம் காட்டி, அந்த எண்ணில் இருந்து வரும் அழைப்பை ஏற்க வேண்டுமா அல்லது புறக்கணிக்க வேண்டுமா என்பதை தீர்மானம் செய்ய உதவும்.

அதாவது ட்ரூகாலர் ஆப்பில் அணுக கிடைக்கும் 'ஐடென்டிட்டிஃபை அன்நோன் நம்பர்ஸ் (Identify unknown numbers) அம்சமானது கூகுள் போன் ஆப்பிற்கு வரவுள்ளது. கூகுளின் இந்த நடவடிக்கை ட்ரூகாலர் ஆப்பை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை குறைக்கும் என்பதிலும், கூகுள் போன் ஆப்பை டீஃபால்ட் போன் கால் ஆப் ஆக செட் செய்யும் பயனர்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்கும் என்பதிலும் சந்தேகமே வேண்டாம்.

TrueCaller-ஐ தொடர்ந்து WhatsApp-க்கு வெடி வச்ச Google நிறுவனம்!

வாட்ஸ்அப்பிற்கு அப்படி என்ன வேட்டு வைக்கப்பட்டுள்ளது? எஸ்எம்எஸ் வழியாக உரையாடல் செய்யும் பழக்கமெல்லாம் காலாவதியாகி விட்டாலும் கூட.. அந்த இடத்தை வாட்ஸ்அப் ஆக்கிரமித்து விட்டாலும் கூட.. இன்னமும் ஒவ்வொரு ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனிலும் கூகுள் மெசேஜஸ் (Google Messages) தான் பிரதான மெசேஜிங் ஆப் ஆக உள்ளது.

ஆதார், பான் உட்பட அரசாங்க ஆவணங்கள் முதல் தபால் நிலையம், வங்கி கணக்கு வரையிலாக.. ஒடிபி போன்ற தனிப்பட்ட மெசேஜ்கள் வந்துசேரும் இடமாக கூகுள் மெசேஜஸ் உள்ளது. அப்படியான கூகுள் மெசேஜஸ் ஆப்பில் ஸ்பேமை குறைக்கும் நோக்கத்தின் கீழ் ஒரு புதிய அம்சம் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

TrueCaller-ஐ தொடர்ந்து WhatsApp-க்கு வெடி வச்ச Google நிறுவனம்!

கூகுளின் இந்த புதிய அம்சமானது, மோசடி செய்பவர்கள் மற்றும் ஹேக்கர்கள் வழியாக.. போலியான லிங்க்குகளுடன் வரும் மெசேஜ்களை, பயனர்கள் திறக்கும் முன்பே அதுகுறித்து எச்சரிக்கை கொடுக்கும். "இந்த மெசேஜை அனுப்பியவர் உங்கள் காண்டாக்ட் லிஸ்ட்டில் இல்லை", "உங்களுக்கு தெரியாத நபர்களிடம் இருந்து வரும் லிங்க்குகளை கிளிக் செய்தால். அதனுள் தேவை இல்லாத அல்லது ஆபத்தான கன்டென்ட் இருக்கலாம்" என்று எச்சரிக்கப்படுவீர்கள்.

ஒருவேளை கூகுளின் இந்த எச்சரிக்கையை நீங்கள் மீற விரும்பினால்.. தெரியாத எண்ணில் இருந்து வரும் மெசேஜை ஓப்பன் செய்ய அல்லது அதில் உள்ள லிங்க்-ஐ கிளிக் செய்ய விரும்பின்னால்.. "சாத்தியமான ஆபத்து என்று தெரிந்தும் இதை நான் செய்ய விரும்புகிறேன்" என்கிற செக்பாக்ஸை நீங்கள் கடக்க வேண்டியிருக்கும்.

ஒட்டுமொத்தமாக.. கூகுள் மெசேஜஸ் ஆப்பில் போலியான மற்றும் ஸ்பேம் மெசேஜ்களுக்கு எதிராக கடுமையான பாதுகாப்பு செயல்முறைகள் கொண்டுவரப்படவுள்ளது. ஆனால் மறுகையில் உள்ள வாட்ஸ்அப் ஆனது ஸ்பேம் மற்றும் போலியான மெசேஜ்களை பரப்புவதற்கான முக்கிய தளமாக உள்ளது. ரிப்போர்ட் செய்யும் ஆதரவை தவிர்த்து, ஸ்பேம் மெசேஜ்களை அல்லது ஆபத்தான லிங்க்குகளை தடுக்க வாட்ஸ்அப் எதுவும் செய்யவில்லை!

இதுமட்டுமல்ல, ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் அப்டேட் உடன் வரும் புதிய ப்ளூடூத் மோட் ஆனது ப்ளூடூத் ஆஃப் செய்யப்பட்டாலும் கூட, பார்ப்பதற்கு அது ஆஃப் செய்யப்பட்டு இருப்பது போல் தோன்றினாலும் கூட, அது குறைந்த ஆற்றல் நிலையில் (Low-energy state) தொடர்ந்து செயல்படும்படியான புதிய மாற்றம் ஒன்றும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கு வரவுள்ளது.

இப்படி செய்வதன் மூலம் ப்ளூடூத்தின் முக்கிய செயல்பாடுகளை இன்ஆக்டிவ் (Inactive) நிலையில் வைத்து இருக்கும் மறுகையில் பேட்டரி லைஃப்பை (Battery Life) கணிசமாக பாதிக்காமல், பேக்கிரவுண்டில் (Background) அத்தியாவசிய பணிகளை செய்ய முடியும். எடுத்துக்காட்டிற்கு, ப்ளூடூத் அம்சத்தை முழுமையாக ஆக்டிவ் ஆக அல்லது ஆன் செய்து வைத்திருக்க தேவையில்லாமல், ஃபைண்ட் மை டிவைஸ் மற்றும் ஸ்மார்ட் ஹோம் டிவைஸ்களுடன் கெனெக்ட் செய்ய முடியும்.

கேட்பதற்கு அட்டகாசமாக இருக்கும் இந்த புதிய ப்ளூடூத் மோட் ஆனது ப்ரைவஸி (Privacy) தொடர்பான கவலைகளையும் எழுப்பியுள்ளது. பார்ப்பதற்கு செயலற்று இருக்கும் ஆனால் பேக்கிரவுண்டில் செயல்பட்டு கொண்டே இருக்கும் என்கிற சூழ்நிலை. பயனர்களுக்கு என்ன மாதிரியான செக்யூரிட்டி சிக்கல்களை கொண்டுவரும் என்பது யாருக்குமே தெரியாது. இதற்கான தீர்வையும் கூகுள் தான் கொடுக்க வேண்டும்!

Best Mobiles in India

English summary
Google to Add New Spam Warning Feature Before clicking Link From unknown numbers in its Messages App
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X