Home
News

இனி டபுள் கேம் ஆட முடியாது! Online அம்சத்திற்கு வந்த திடீர் மாற்றம்.. WhatsApp-ல் புது வெடி.. ரெடி ஆகிக்கோங்க!

மெட்டாவிற்கு சொந்தமான வாட்ஸ்அப் (WhatsApp) நிறுவனமானது ஆன்லைன் (Online) அம்சத்தை வைத்து "ஆட்டம் காட்டும்" பயனர்களுக்கு பகீர் கிளப்பும்படியான ஒரு புதிய அம்சத்தை கொண்டு வந்துள்ளது. அதென்ன அம்சம்? அது எப்படி வேலை செய்யும்? இதனால் என்ன பயன்? இதோ விவரங்கள்:

ஸ்டேட்டஸ் அப்டேட்ஸ் (Status updates) பிரிவில் பிரைவேட்லி டேக் காண்டாக்ஸ் (Privately tag contacts) என்கிற அம்சம், ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி போட்டோக்களை எடிட்டிங் செய்யும் அம்சம் உட்பட.. கடந்த சில வாரங்களில், ஏற்கனவே பல புதிய அம்சங்கள் வாட்ஸ்அப்பிற்கு வந்துவிட்டன.

Online அம்சத்திற்கு வந்த திடீர் மாற்றம்.. WhatsApp-ல் புது வெடி!

அதனொரு பகுதியாக.. உங்கள் காண்டாக்ட் லிஸ்ட்டில் யாரெல்லாம் சமீபத்தில் ஆன்லைனுக்கு வந்து சென்றனர் (Contacts Were Online Recently) என்கிற பட்டியலை வெளிப்படுத்தும் புதிய அம்சமும் வாட்ஸ்அப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. அதாவது வாட்ஸ்அப் பிளாட்ஃபார்மில் மிகவும் சமீபத்தில் யார் எல்லாம் ஆக்டிவ் ஆக இருந்தார்கள் என்பதை நீங்கள் சரிபார்க்க விரும்பினால் இந்த அம்சம் பயனுள்ளதாக இருக்கும். இதன்மூலம் யாருக்கு முதலில் மெசேஜ் அனுப்ப வேண்டும் என்பதையும் எளிமையாக தீர்மானிக்க முடியும்.

மேலும் இந்த புதிய அம்சம், ஒவ்வொரு காண்டாக்ட்டிற்கும் சென்று அவர்கள் கடைசியாக எப்போது ஆன்லைனிற்கு வந்தார்கள் என்பதை தனித்தனியாக சரிபார்க்க வேண்டிய தேவையையும் நீக்குகிறது. ஆன்லைன் அம்சத்தை மறைத்து வைத்து இருக்கும் பயனர்களிடம் இந்த அம்சம் எப்படி வேலை செய்யும் என்பது குறித்து எந்த தெளிவும் இல்லை. இந்த அம்சம் அனைவருக்கும் அறிமுகமான பின்னர் அதுகுறித்த தகவல் கிடைக்கலாம்.

Online அம்சத்திற்கு வந்த திடீர் மாற்றம்.. WhatsApp-ல் புது வெடி!

தற்போதைய நிலவரப்படி, ஆண்ட்ராய்டுக்கான வாட்ஸ்அப் பீட்டாவின் (WhatsApp Android Beta) லேட்டஸ்ட் வெர்ஷனை அப்டேட் செய்யும் தேர்ந்தெடுக்கப்பட்ட பீட்டா டெஸ்டர்களுக்கு (Beta Tester) மட்டுமே இந்த புதிய அம்சம் அணுக கிடைக்கிறது. இது வரும் வாரங்களில் இன்னும் அதிகமான பயனர்களுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் அப்டேட்ஸ் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள பிரைவேட்லி டேக் காண்டாக்ஸ் என்கிற அம்சத்தை பொறுத்தவரை.. பெயர் குறிப்பிடுவது போலவே, இதுஸ்டேட்டஸ் அப்டேட்டில் தங்கள் காண்டாக்ட்ஸ்-ன் கீழ் உள்ள நபர்களை தனிப்பட்ட முறையில் டேக் செய்ய உதவும் ஒரு அம்சமாகும். இதுவும் கூட தற்போது வரையிலாக இது பீட்டா டெஸ்டிங்கிற்கான ஆண்ட்ராய்டு வெர்ஷனில் மட்டுமே அணுக கிடைக்கிறது.

Online அம்சத்திற்கு வந்த திடீர் மாற்றம்.. WhatsApp-ல் புது வெடி!

வாட்ஸ்அப்பில் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி போட்டோக்களை எடிட்டிங் செய்யும் அம்சத்தை பொறுத்தவரை.. இது ஏஐ உதவுடன் போட்டோக்களின் பேக்கிரவுண்டை மாற்றுவது, மறுசீரமைப்புகளை செய்வது, இமேஜ் சைஸ்-ஐ எக்ஸ்பான்ட் செய்வது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை செய்வதன் மூலம் போட்டோக்களின் லுக்கை மேம்படுத்தும் ஒரு அம்சமாகும்.

வாட்ஸ்அப்பிற்கு வரும் இந்த புதிய ஏஐ இமேஜ் எடிட்டர் ஆனது.. போட்டோக்களை ஷேர் செய்யும் போது ஏற்கனவே அனுக கிடைக்கும் எச்டி ஐகானுக்கு அருகில், ஒரு பச்சை நிற ஐகானாக அணுக கிடைக்கும். அதன்கீழ் பேக்ட்ராப் (Backdrop), ரீஸ்டைல் (Restyle) மற்றும் எக்ஸ்பான்ட் (Expand) உள்ளிட்ட போட்டோ எடிட்டிங் விருப்பங்கள் அணுக கிடைக்கும். அந்த விருப்பங்கள் ஒவ்வொன்றும் தனித்துவமான போட்டோ எடிட்டிங் திறன்களை கொண்டிருக்கும்.

இதெல்லாம் தவிர்த்து பெர்சனல் சாட் மற்றும் க்ரூப் சாட், ஆகிய இரண்டிற்குமே பொருந்தும்படியான ஒரு புதிய மாற்றமும் வாட்ஸ்அப் தளத்திற்கு வந்த்துள்ளது. பின் மெசேஜஸ் (PIN Messages) அம்சத்தின் கீழ் இனிமேல் ஒரு மெசேஜிற்கு பதிலாக 3 மெசேஜ்களை பின் செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அதாவது இனிமேல் ஒவ்வொரு (பெர்சனல் அல்லது க்ரூப்) சாட்டிலும் 3 மெசேஜ்களை பின் செய்து வைத்து வைக்க முடியும். முன்னதாக இந்த பின் மெசேஜஸ் அம்சத்தின்கீழ் ஒரே ஒரு மெசேஜை மட்டுமே பின் செய்ய முடியும்படி இருந்தது; தற்போது இந்த எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒரு பெர்சனல் சாட் அல்லது க்ரூப் சாட்டின் மேல் பகுதியில் ஒரு முக்கியமான மெசேஜை பின் செய்ய உதவுவதே பின் மெசேஜஸ் அம்சமாகும்.

Best Mobiles in India

English summary
New WhatsApp Feature To Show The List of Contacts Were Online Recently
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X