Home
News

வந்தது புதிய PRIVATE அம்சம்.. WhatsApp ஸ்டேட்டஸ்-ல் முக்கிய மாற்றம்.. அலெர்ட் போகும்படி புது செட்டிங்ஸ்!

கடந்த சில வாரங்களிலேயே.. மார்க் ஜுக்கர்பெர்க் தலைமையிலான மெட்டா நிறுவனத்தின் கீழ் இயங்கும் வாட்ஸ்அப்பில் (WhatsApp) பல புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டு விட்டன. அதனொரு பகுதியாக வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் புதிய ப்ரைவேட் அம்சம் இணைக்கப்பட்டுள்ளது. அதென்ன அம்சம்? இதனால் என்ன மாற்றம் வரும்? இதோ விவரங்கள்:

அதென்ன அம்சம்? வாட்ஸ்அப் நிறுவனமானது அதன் ஸ்டேட்டஸ் அப்டேட்ஸில் (Status updates) பிரைவேட்லி டேக் காண்டாக்ஸ் (Privately tag contacts) என்கிற புதிய அம்சத்தை சேர்த்துள்ளது. பெயர் குறிப்பிடுவது போலவே இது ஸ்டேட்டஸ் அப்டேட்டில் தங்கள் காண்டாக்ட்ஸ்-ன் கீழ் உள்ள நபர்களை தனிப்பட்ட முறையில் டேக் செய்ய முடியும்.

வந்தது புதிய PRIVATE அம்சம்.. WhatsApp ஸ்டேட்டஸ்-ல் முக்கிய மாற்றம்!

நீங்களொரு இன்ஸ்டாகிராம் பயனராக இருந்தால் வாட்ஸ்அப்பிற்கு வந்துள்ள இந்த புதிய ப்ரைவேட் டேக் அம்சமானது, உங்களுக்கு மிகவும் பழக்கப்பட்ட அல்லது ஏற்கனவே தெரிந்த ஒரு அம்சமாக இருக்கலாம். இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸில் நண்பர்களையோ அல்லது பிற பயனர்களையோ டேக் செய்யும் அம்சம் நீண்ட காலமாகவே இருக்கிறது. அதனுடைய "வேறுபட்ட ஒரு பிரதிபலிப்பு" தான் வாட்ஸ்அப்பிற்கு வந்துள்ளது.

இது எப்படி வேறுபடுகிறது என்றால்.. வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் ஒருவரை ப்ரைவேட் ஆக டேக் செய்யும் போது, அந்த ஸ்டேட்டஸை பார்க்கும் மற்ற பார்வையாளர்களுக்கு அந்த டேக் தெரியாது. யார் டேக் செய்யப்பட்டு இருக்கிறார்களோ, அவர்களுக்கு மட்டுமே டேக் செய்யப்பட்டது தெரியும். இருப்பினும் அவர்களுக்கு இதுகுறித்த அலெர்ட் ஒன்று கிடைக்கும். அது ஃபேஸ்புக்கில் டேக் செய்யும் போது கிடைக்கும் அலெர்ட் போல செயல்படலாம்.

வந்தது புதிய PRIVATE அம்சம்.. WhatsApp ஸ்டேட்டஸ்-ல் முக்கிய மாற்றம்!

தற்போது வரையிலாக இந்த புதிய ப்ரைவேட் டேக் அம்சமானது பீட்டா டெஸ்டிங்கிற்கான ஆண்ட்ராய்டு வெர்ஷன் 2.24.6.19-ல் அணுக கிடைக்கிறது. அதாவது இந்த அம்சம் கடைசிக்கட்ட சோதனையில் உள்ளது. இது அனைத்து வாட்ஸ்அப் பயனர்களுக்கு வந்துசேர இன்னும் சில நாட்கள் ஆகலாம். ஆண்ட்ராய்டில் மட்டுமின்றி இந்த அம்சம் ஐஓஎஸ் ஆப்பிலும் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

இதற்கு முன்னதாக, சாட்ஸ், ஸ்டேட்டஸ், கம்யூனிட்டீஸ் மற்றும் கால்ஸ் ஆகியவைகளை உள்ளடக்கிய நேவிகேஷன் பார் ஆனது வாட்ஸ்அப் ஹோம் ஸ்க்ரீனுக்கு கீழே நகர்த்தப்பட்டது. அதை தொடர்ந்து வாட்ஸ்அப்பில் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி போட்டோக்களை எடிட்டிங் செய்யும் புதிய அம்சம் கூடிய விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

வந்தது புதிய PRIVATE அம்சம்.. WhatsApp ஸ்டேட்டஸ்-ல் முக்கிய மாற்றம்!

வாட்ஸ்அப்பிற்கு வரும் இந்த ஏஐ இமேஜ் எடிட்டர் அம்சமானது, ஏஐ உதவுடன் போட்டோக்களின் பேக்கிரவுண்டை மாற்றுவது, மறுசீரமைப்புகளை செய்வது, இமேஜ் சைஸ்-ஐ எக்ஸ்பான்ட் செய்வது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை செய்து புகைப்படங்களை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அம்சத்திற்கான அடிப்படை குறியீட்டானது ஆண்ட்ராய்டுக்கான லேட்டஸ்ட் பீட்டா அப்டேட்டில் (வெர்ஷன் 2.24.7.13) காணப்படுகிறது.

இந்த புதிய ஏஐ இமேஜ் எடிட்டர் ஆனது வாட்ஸ்அப்பில் ஏற்கனவே அனுககிடைக்கும் எச்டி ஐகானுக்கு (HD Icon) அருகில், ஒரு பச்சை நிற ஐகானாக அணுக கிடைக்கும். அதன் கீழ் பேக்ட்ராப் (Backdrop), ரீஸ்டைல் (Restyle) மற்றும் எக்ஸ்பான்ட் (Expand) உள்ளிட்ட தேர்ந்தெடுக்கக்கூடிய விருப்பங்கள் அணுக கிடைக்கும். அந்த விருப்பங்கள் ஒவ்வொன்றும் தனித்துவமான எடிட்டிங் திறன்களை கொண்டிருக்கும்

இதெல்லாம் தவிர்த்து பெர்சனல் சாட் மற்றும் க்ரூப் சாட், ஆகிய இரண்டிற்குமே பொருந்தும்படியான ஒட்டு புதிய மாற்றம் ஒன்றையும் வாட்ஸ்அப் கொண்டு வந்தது. பின் மெசேஜஸ் (PIN Messages) அம்சத்தின் கீழ் இனிமேல் ஒரு மெசேஜிற்கு பதிலாக 3 மெசேஜ்களை பின் செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அதாவது இனிமேல் ஒவ்வொரு (பெர்சனல் அல்லது க்ரூப்) சாட்டிலும் 3 மெசேஜ்களை பின் செய்து வைத்து வைக்க முடியும். முன்னதாக இந்த பின் மெசேஜஸ் அம்சத்தின் கீழ் ஒரே ஒரு மெசேஜை மட்டுமே பின் செய்ய முடியும். அறியாதோர்களுக்கு ஒரு பெர்சனல் சாட் அல்லது க்ரூப் சாட்டின் மேல் பகுதியில் ஒரு முக்கியமான மெசேஜை பின் செய்ய உதவுவதே பின் மெசேஜஸ் அம்சமாகும்.

Best Mobiles in India

English summary
New Private Tag Feature in Status updates in WhatsApp How it will Work
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X