முழு WhatsApp சாட்டையும் சிங்கிள் PDF-ல் சேவ் செய்யலாமா? மீடியா பைல் கூட சேவ் செய்யலாமா? எப்படி?
வாட்ஸ்அப் (WhatsApp) பயனர்களே கொஞ்சம் கவனியுங்க. உங்கள் போனில் வாட்ஸ்அப் இருக்கிறது என்றால் கட்டாயமாக ஒரு கட்டத்தில் ஸ்டோரேஜ் சிக்கல்களை நீங்கள் சந்திக்க நேரிடும். இதனால், பல முக்கியமான சாட்களை நீங்கள் நீக்க நேரிடலாம்.
வாட்ஸ்அப் (WhatsApp): இப்படி சாட்களை நீக்காமல், அவற்றை PDF வடிவில் நீங்கள் தனியாக எக்ஸ்போர்ட் செய்துகொள்ளலாம், அதுவும் அந்த சாட்டில் உள்ள மீடியா பைல்களுடன் (WhatsApp media file) நீங்கள் ஒரு ஃபைலாக சேவ் செய்துகொள்ளலாம் என்று கூறினால் வேண்டாமென்றா சொல்வீர்கள். இந்த வாட்ஸ்அப் சாட் எக்ஸ்போர்ட் (WhatsApp chat export) அம்சம் பற்றி பலருக்கு தெரிந்திருக்கும். தெரியாதவர்களுக்கு இந்த பதிவு உதவும்.

WhatsApp: வாட்ஸ்அப் சாட் எக்ஸ்போர்ட் அம்சத்தை பற்றி முன்பே தெரிந்திருந்தாலும், இப்போது கிடைக்கும் புதிய அப்டேட் உடன் இந்த அம்சம் எப்படி மீடியா பைல்களை ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோனில் PDF வடிவத்தில் சேமிக்க அனுமதிக்கிறது மற்றும் இது எப்படி செயல்படுகிறது என்பதை இப்போது பார்க்கலாம். பொதுவாக வாட்ஸ்அப் உங்கள் சாட்டை கூகுள் டிரைவ் (Google drive) அல்லது iCloud இல் பேக்கப் செய்கிறது.
கிளவுட் ஸ்டோரேஜ்: கிளவுட் ஸ்டோரேஜ்ஜாக (cloud storage) இருந்தாலும், உங்கள் போனில் மீடியா பைல்கள் ஒன்றுசேர்ந்து கொண்டே இருக்கும் காரணத்தினால், நீங்கள் கட்டாயம் ஒரு நிலையில் ஸ்டோரேஜ் சிக்கலை சந்திக்க நேரிடும். இதை தவிர்க்க உங்கள் வாட்ஸ்அப் சாட்களை ஒவ்வொரு PDF பைலாக நீங்கள் தனித்தனியாக எக்ஸ்போர்ட் செய்துகொள்ள முடியும். இது இப்போது ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் ஆகிய இரண்டு வாட்ஸ்அப் பயனர்களுக்கு கிடைக்கிறது.
வாட்ஸ்அப் சாட்டை PDF வடிவில் சேமிக்க: ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு இந்த அம்சம் இப்போது சாட்டை PDF வடிவில் சேமிக்க அனுமதிக்கிறது. மறுபுறம் iOS பயனர்களுக்கு சாட் File.Zip பைலாக வாட்ஸ்அப் டெஸ்க்டாப் தளங்களில் டவுன்லோட் செய்ய கிடைக்கிறது. சரி, இப்போது எப்படி ஆண்ட்ராய்டு போனில் இருக்கும் வாட்ஸ்அப் சாட்டை PDF வடிவில் சேமித்து டவுன்லோடு செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு: ஆண்ட்ராய்டு பயனர்கள் இப்போது ஒரு வாட்ஸ்அப் சாட்டை கிளிக் செய்து அதன் கீழ் உள்ள ஒட்டுமொத்த மெசேஜ்களையும் எக்ஸ்போர்ட் (WhatsApp message PDF export) செய்ய முடியும். இப்படி ஒரு சாட்டை எக்ஸ்போர்ட் செய்யும் பொழுது, அந்த தனிப்பட்ட வாட்ஸ்அப் சாட்டின் கீழ் உள்ள அணைத்து டெக்ஸ்ட் மெசேஜ்கள் மற்றும் மீடியா பைல்கள் மற்றும் PDF பைலாக (PDF file) மாற்றப்படும்.
WhatsApp சாட் எக்ஸ்போர்ட்: இந்த மாற்றத்தின் பொழுது அந்த சாட்டின் கீழ் மேற்கொள்ளப்பட்ட வாய்ஸ் கால்ஸ் மற்றும் வீடியோ கால்ஸ் விபரங்கள் இத்துடன் இணைக்கப்படாது என்பதை கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள். அதாவது கால் லாக் விபரங்களை உங்களால் எக்ஸ்போர்ட் செய்ய முடியாது. அதேபோல், அந்த பயனரின் ஸ்டேட்டஸ் விபரங்களையும் உங்களால் எக்ஸ்போர்ட் செய்ய முடியாது. மற்றபடி, மெசேஜ் மற்றும் மீடியா பைல்களை உங்களால் பார்க்க முடியும்.
PDF வடிவில் சாட் எக்ஸ்போர்ட்: சரி, இப்போது வாட்ஸ்அப் சாட்டை PDF வடிவில் தனியாக எக்ஸ்போர்ட் செய்ய, நீங்கள் விரும்பும் வாட்ஸ்அப் சாட்டிற்கு செல்ல வேண்டும். பிறகு, அந்த சாட்டின் வலது மேல் மூலையில் உள்ள 3 புள்ளி ஐகானை தட்ட வேண்டும். பிறகு, அதனுள் காணப்படும் More என்ற விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும். இப்போது காண்பிக்கப்படும் விருப்பங்களில் இருந்து Export Chat என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
மீடியா பைல்: இதை கிளிக் செய்த பிறகு மீடியா பைல்களுடன் சாட் எக்ஸ்போர்ட் செய்யப்பட வேண்டுமா? அல்லது மீடியா பைல்கள் இல்லாமல் சாட் எக்ஸ்போர்ட் செய்யப்பட வேண்டுமா? என்ற கேள்வி கேட்கப்படும். உங்கள் விருப்பத்தை தேர்வு செய்து ஓகே கிளிக் செய்தால், உங்கள் சாட் PDF வடிவில் எக்ஸ்போர்ட் செய்யப்படும்.


Click it and Unblock the Notifications








