WhatsApp-இல் வாய்ஸ் மெசேஜ் அனுப்பி மாட்டிக்காதீங்க; இனிமேல் இப்படி பண்ணுங்க!
"கடினமான வேலையை ஒரு சோம்பேறியிடம் தான் கொடுக்க வேண்டும். ஏனென்றால், ஒரு சோம்பேறியால் தான் கஷ்டமான வேலையை எளிமையாக செய்வது எப்படி என்கிற வழியை கண்டுபிடிக்க முடியும்" என்கிற பில் கேட்ஸின் கூற்றை "மிகவும் சீரியஸ்" ஆக எடுத்துக்கொள்பவரா நீங்கள்?
அல்லது "அட நீ வேற? எவ்ளோ ஈஸியான வேலையை கொடுத்தாலும் சரி, அதையே நான் கஷ்டப்பட்டு தான் செய்வேன்" என்று கூறும் 'அக்மார்க்' சோம்பேறியா நீங்கள்?
இந்த இரண்டில் நீங்கள் எந்த வகையை சேர்ந்தவராக இருந்தாலும் சரி, இக்கட்டுரை வழியாக நாம் 'டிஸ்கஸ்' செய்யப்போகும் 'மேட்டர்' உங்களுக்கு 100% உதவிகரமாக இருக்கும்!

அப்படி என்ன மேட்டர்?
வாட்ஸ்அப்பில் 'வாய்ஸ் மெசேஜ்' அம்சம் அறிமுகமான பின்னர் மாங்கு மாங்கென்று, விரல்கள் வலிக்க டைப் செய்யும் வேலை முற்றிலும் குறைந்து விட்டது என்றாலும் கூட எல்லா நேரத்திலும், எல்லாருக்கும் நம்மால் வாய்ஸ் மெசேஜ்களை அனுப்ப முடிவதில்லை. ஏனெனில் "நேரம் கெட்ட நேரத்தில்" நாம் அனுப்பும் வாய்ஸ் மெசேஜ்கள் பிறரை தொந்தரவுக்கு உள்ளாக்கலாம்.
இப்படியாக சிலருக்கு, நீளமான மெசேஜ்களை டைப் செய்யும் சாபம் நீண்டுகொண்டே தான் போகிறது. அதில் இருந்து விடுபட உதவும் ஒரு "தந்திரம்" தான் - ஒரு வார்த்தையை டைப் செய்யாமலேயே பெரிய பெரிய வாட்ஸ்அப் மெசேஜ்களை அனுப்புவது எப்படி என்கிற கேள்விக்கான பதில்!

அதென்ன பதில்? அதெப்படி முடியும்?
"கண்ணாடியை திருப்புனா ஆட்டோ எப்படிப்பா ஓடும்?" என்கிற கதையாவுல்ல இருக்கு என்று கடுப்பாக வேண்டாம்!
நீங்கள் ஒரு வாய்ஸ் மெசேஜை அனுப்பும் சூழ்நிலையில் இருந்தாலும் கூட, அதை பெறுபவர்கள் குறிப்பிட்ட வாய்ஸ் மெசேஜை ஓப்பன் செய்து கேட்கும் நிலையில் இல்லை என்றால், அதே சமயம் உங்களாலும் டைப் செய்து கொண்டே இருக்க முடியாது என்றால்.. நாங்கள் இங்கே சொல்லப்போகும் டெக் டிப்ஸ் தான் - உங்களுக்கான ஆபத்பாண்டவன்!

அந்த ஆபத்பாண்டவன் வேறு யாருமில்லை?
அந்த ஆபத்பாண்டவன், உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் இருக்கும் கூகுள் அசிஸ்டென்ட் (Google Assistant) தான். ஆம், நீங்கள் ஒரு வாட்ஸ்அப் மெசேஜை அனுப்பும்படி இந்த விர்ச்சுவல் அசிஸ்டென்ட்டிடம் கேட்டால் போதும், வாட்ஸ்அப்பில் ஒரு வார்த்தையை கூட டைப் செய்யாமல் உங்களால் எத்தனை மெசேஜ்களை வேண்டுமானாலும் அனுப்ப முடியும்.
இந்த "தந்திரத்தை" பயன்படுத்த தொடங்கும் முன், உங்கள் கூகுள் அசிஸ்டென்ட் இயக்கப்பட்டு இருக்கிறதா? அது உங்கள் குரலை அடையாளம் காண்கிறதா? என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்!
முடிந்தால், கூகுள் அசிஸ்டென்ட்-ஐ உங்கள் ஹோம் ஸ்க்ரீனில் வையுங்கள். அப்போது தான் அதை 'டக்-டக்கென்று' அணுக முடியும்.

ஆரம்பிக்கலாங்களா? மெசேஜ் அனுப்ப!
- உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள கூகுள் அசிஸ்டென்ட் ஆப்-ஐ திறக்கவும் அல்லது "ஹே கூகுள்" என்று சொல்லி அதை "எழுப்பவும்".
- கூகுள் அசிஸ்டென்ட்-ஐ நீங்கள் ஆக்டிவேட் செய்ததும், அது உங்களுக்கு பதிலளிக்கும். இப்போது நீங்கள் ஒரு வாட்ஸ்அப் மெசேஜை அனுப்ப விரும்பும் எண்ணை சொல்லி, அதாவது "99999 88888-க்கு ஒரு வாட்ஸ்அப் மெசேஜை அனுப்பு!" என்று சொல்ல வேண்டும்

மொபைல் நம்பரைத்தான் சொல்ல வேண்டுமா? பெயரை சொல்ல கூடாதா?
சொல்லலாம்! நீங்கள் ஒரு மொபைல் நம்பரை தான் சொல்ல வேண்டும் என்கிற அவசியம் இல்லை. உங்கள் காண்டாக்ட் லிஸ்டில் உள்ள ஒரு பெயரையும் கூட சொல்லலாம்.
இந்த இடத்தில், குறிப்பிட்ட நபரின் சரியான காண்டாக்ட் நேம்-ஐ பயன்படுத்துவதை உறுதிசெய்யவும். நீங்கள் எதை சொன்னாலும் மிகவும் கவனமாக சொல்லவும், ஏனென்றால் நீங்கள் தவறான எண் அல்லது தவறான பெயரை சொன்னால், நீங்கள் அனுப்பும் மெசேஜை பொறுத்து உங்களுக்கான பிரச்சனை காத்திருக்கலாம்!

எல்லாம் கரெக்ட் என்றால்.. நோ வெயிட்டிங்!
- நம்பர் அல்லது பெயர் எல்லாமே சரியாக சொன்னபிறகு, நீங்கள் அனுப்ப விரும்பும் மெசேஜை கூறுமாறு கூகுள் அசிஸ்டென்ட் கேட்கும்; அதை தெளிவாக சொல்லவும்.
- அதை தொடர்ந்து, கூகுள் அசிஸ்டென்ட் நீங்கள் வார்த்தையால் சொன்ன மெசேஜை டெக்ஸ்ட் ஆக டைப் செய்து காண்பிக்கும். உடன் குறிப்பிட்ட மெசேஜ் ஆனது அனுப்ப தயாராக உள்ளது என்றும் பதிலளிக்கும்.
- இப்போது நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், "Okay, Send it" என்று கூறுவது மட்டுமே. கூகுள் அசிஸ்டென்ட் குறிப்பிட்ட டெக்ஸ்ட் மெசேஜை, குறிப்பிட்ட நபருக்கு அனுப்பி வைக்கும்; அவ்வளவு தான்!


Click it and Unblock the Notifications