Home
News

இனி 1 இல்ல.. 3 முறை பண்ணலாம்! WhatsApp-க்கு வந்த திடீர் மாற்றம்.. பெர்சனல் சாட், க்ரூப் சாட்.. இரண்டுக்குமே!

வாட்ஸ்அப் (WhatsApp) நிறுவனம் அதன் பெர்சனல் சாட் மற்றும் க்ரூப் சாட், ஆகிய இரண்டிற்குமே பொருந்தும்படியான புதிய மாற்றம் ஒன்றை கொண்டு வந்துள்ளது. அதென்ன மாற்றம்? எது ஒன்றில் இருந்து மூன்றாக மாறியுள்ளது? இதனால் வாட்ஸ்அப் யூசர்களுக்கு என்ன பயன்? இதோ விவரங்கள்:

வாட்ஸ்அப் நிறுவனம் அதன் பின் மெசேஜஸ் (PIN Messages) அம்சத்தில் முக்கிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. நினைவூட்டும் வண்ணம், பின் மெசேஜஸ் என்பது ஒரு பெர்சனல் சாட் அல்லது க்ரூப் சாட்டின் மேல் பகுதியில் ஒரு முக்கியமான மெசேஜை பின் செய்ய உதவும் அம்சமாகும்.

இனி 1 இல்ல 3 முறை பண்ணலாம்.. WhatsApp-க்கு வந்த திடீர் மாற்றம்!

இதை செய்ய, சாட்டில் உள்ள ஒரு குறிப்பிட்ட மெசேஜை லாங் பிரஸ் (Long Press) செய்ய வேண்டும். பின்னர் வலது மேல்பக்கத்தில் உள்ள த்ரீ டாட் ஐகானை (Three dot icon) கிளிக் செய்ய வேண்டும். அதன் கீழ் கிடைக்கும் 'பின்' (Pin) என்கிற விருப்பத்தை கிளிக் செய்யவும்.

இப்போது "எவ்வளவு காலத்திற்கு இந்த மெசேஜை பின் செய்து வைக்க வேண்டும்?" என்கிற கேள்வியோடு சேர்த்து உங்களுக்கு 3 விருப்பங்கள் (24 மணிநேரம், 7 நாட்கள், 30 நாட்கள்) கிடைக்கும். அவைகளில், உங்களுக்கு விருப்பமான ஏதேனும் ஒன்றை தேர்வு செய்யவும். கடைசியாக ஓகே என்பதை கிளிக் செய்யவும். அவ்வளவு தான்! குறிப்பிட்ட மெசேஜ் பின் செய்யப்படும்!

இனி 1 இல்ல 3 முறை பண்ணலாம்.. WhatsApp-க்கு வந்த திடீர் மாற்றம்!

இந்த அம்சத்தின் மூலம் வாட்ஸ்அப் பயனர்கள், ஒரு குறிப்பிட்ட சாட்டில் உள்ள ஒரு குறிப்பிட்ட மெசேஜை முக்கியமான தகவலாக பின் செய்து வைக்க முடியும்; கூடவே எப்போதெல்லாம் அந்த மெசேஜ் தேவைப்படுகிறதோ, அதை உடனடியாக அணுகவும் முடியும்.

இருப்பினும் தற்போது வரையிலாக, இந்த அம்சத்தின் கீழ் ஒரே ஒரு மெசேஜை மட்டுமே பின் செய்து வைக்க முடியும். ஆனால் கூடிய விரைவில், ஒரே நேரத்தில் மூன்று மெசேஜ்களை பின் செய்யும் விருப்பம் வாட்ஸ்அப்பில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதற்கான டெஸ்டிங், ஆண்ட்ராய்டுக்கான வாட்ஸ்அப் பீட்டாவில் (WhatsApp Beta For Android) செய்யப்பட்டு வருகிறது.

இனி 1 இல்ல 3 முறை பண்ணலாம்.. WhatsApp-க்கு வந்த திடீர் மாற்றம்!

டபுள்யூஏபீட்டாஇன்ஃபோ (WABetaInfo) வழியாக கிடைத்த தகவலின்படி, ஒரே நேரத்தில் 3 மெசேஜ்களை பின் செய்வதற்கான விருப்பம் 2.24.6.15 பீட்டா வெர்ஷனில் அணுக கிடைக்கிறது. ஒரே ஒரு மெசேஜை பின் செய்யும் போது கிடைத்ததை போலவே, 24 மணிநேரம், 7 நாட்கள் அல்லது 30 நாட்கள் என்கிற கால அளவு விருப்பங்களும் அணுக கிடைக்கிறது.

ஒருவேளை நீங்கள் நான்காவதாக ஒரு மெசேஜை பின் செய்ய முயற்சி செய்தால், ஏற்கனவே பின் செய்யப்பட்டு இருக்கும் லிஸ்டிலில் இருந்து ஒரு மெசேஜ் தானாகவே நீக்கப்படும். இதற்கிடையில், வாட்ஸ்அப் சாட்களை பின் செய்வதற்கான வரம்பை அதிகரிக்கவும் வாட்ஸ்அப் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது வரையிலாக 3 சாட்களை மட்டுமே பின் செய்ய முடியும். விரைவில் இது ஐந்தாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு முன்னதாக வாட்ஸ்அப்பில் 4 புதிய டெக்ஸ்ட் ஃபார்மெட்டிங் விருப்பங்கள் (Text Formatting Options) அறிமுகமானதும் இங்கே குறிப்பிடத்தக்கது. வாட்ஸ்அப்பில் ஏற்கனவே அணுக கிடைக்கும் போல்ட் (Bold), இடாலிக் (Italic), ஸ்ட்ரைக்த்ரோ (Strikethrough) மற்றும் மோனோஸ்பேஸ் (Monospace) ஆகிய 4 டெக்ஸ்ட் ஃபார்மெட்டிங் விருப்பங்களுடன் புதிதாக 4 டெக்ஸ்ட் ஃபார்மெட்டிங் விருப்பங்கள் அறிமுகம் செய்யப்பட்டது.

அனைத்து ஆண்ட்ராய்டு (Android), ஐஓஎஸ் (iOS), வெப் (Web) மற்றும் மேக் (Mac) டெஸ்க்டாப் பயனர்களுக்கும் அணுக கிடைக்கும் 4 புதிய டெக்ஸ்ட் ஃபார்மெட்டிங் விருப்பங்களானது.. புல்லடட் லிஸ்ட் (Bulleted List), நம்பர்டு லிஸ்ட் (Numbered List), பிளாக் கோட் (Block Quote) மற்றும் இன்லைன் கோட் (Inline Code) என்று அழைக்கப்படுகின்றன.

More from GizBot

Best Mobiles in India

English summary
New Option Added in WhatsApp Soon All Users Can Pin Up to 3 Messages in Personal and Group Chat
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X