Google Pay, Paytm-இல் தெரியாமல் கூட "இதை" செஞ்சிடாதீங்க.. SBI எச்சரிக்கை!

|

நீங்களொரு ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வாடிக்கையாளராக இல்லை என்றாலும் கூட "இது" உங்களுக்கும் பொருத்தும்.

ஏனெனில் எஸ்பிஐ வெளியிட்டுள்ள செக்யூரிட்டி தொடர்பான இந்த எச்சரிக்கை ஆனது எஸ்பிஐ வங்கி பயனாளர்களுக்கானது மட்டுமல்ல Google Pay, Paytm, PhonePe அல்லது பிற UPI ஆப்களை பயன்படுத்தும் அனைவருக்குமானதும் கூட!

அதென்ன எச்சரிக்கை?

அதென்ன எச்சரிக்கை?

UPI எனப்படும் யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸின் கீழ் நடந்த பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை ஆனது, இந்த ஆண்டின் தொடக்கத்தில் முதல் முறையாக, ஒரே மாதத்தில் 5 பில்லியனை தாண்டியது.

இந்த ஒரு புள்ளி விவரத்தை வைத்தே, இந்தியாவில் UPI பயன்பாட்டின் "அடர்த்தியை" நம்மால் அறிந்துகொள்ள முடிகிறது.

உப்பு மிளகாய் தடவி மாங்காய் விற்கும் பாட்டி கடையில் இருந்து ஆன்லைன் ஷாப்பிங்கையெல்லாம் தாண்டி P2P டிரான்ஸ்பர்கள் வரை எல்லாமே யுபிஐ வழியாகவே நடக்கிறது. இப்படி பல வகையான நன்மைகளை வழங்கும் யுபிஐ-யில் சில "அசால்ட் ஆன" அபாயங்களும் உள்ளன.

இங்கே.. பணம் பறிபோன சம்பவங்கள் அதிகம்!

இங்கே.. பணம் பறிபோன சம்பவங்கள் அதிகம்!

யுபிஐ அடிப்படையிலான மோசடிகளால் வாடிக்கையாளர்கள் / யூசர்கள் தங்கள் பேங்க் அக்கவுண்ட்களில் இருந்து பணத்தை இழந்த பல வழக்குகள் இங்கு உள்ளன.

யுபிஐ தொழில்நுட்பமானது Foolproof என்றாலும் கூட, அதாவது நம்பகமானது, தவறாக பயன்படுத்த முடியாதது என்றாலும் கூட அறியாமை மற்றும் இந்த அமைப்பு எப்படி வேலை செய்யும் என்கிற தெளிவான புரிதல் இல்லாத காரணத்தால் சில யூசர்கள் பலிகிடா ஆகின்றனர்.

Amazon, Flipkart-ல் Amazon, Flipkart-ல் "இதை" கூவிக்கூவி விப்பாங்க.. அவசரப்பட்டு வாங்கிடாதீங்க!

அலெர்ட் ஆக இருக்கும்படி எச்சரிக்கும் எஸ்பிஐ!

அலெர்ட் ஆக இருக்கும்படி எச்சரிக்கும் எஸ்பிஐ!

யுபிஐ தொடர்பான மோசடிகளில் மக்கள் சிக்கிக்கொள்ள கூடாது என்கிற பொதுநல எண்ணத்தின் கீழ் நாட்டின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா , யுபிஐ ஆப்களை பயன்படுத்துபவர்களுக்கு யுபிஐ பாதுகாப்பு தொடர்பான சில அறிவுரைகளை மற்றும் எச்சரிக்கைகளை வழங்கி உள்ளது.

01. பணத்தை அனுப்பும் போதும்... பெறும்போதும்?

01. பணத்தை அனுப்பும் போதும்... பெறும்போதும்?

யுபிஐ பின்-ஐ எப்போது பயன்படுத்த வேண்டும் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். யுபிஐ பின் என்பது பணத்தை டிரான்ஸ்பர் செய்ய மட்டுமே தேவைப்படும், பணத்தை பெறுவதற்கு அல்ல.

அதாவது யுபிஐ பின் என்பது ஒடிபி (OTP) அல்ல. எனவே உங்கள் யுபிஐ பின்-ஐ எக்காரணத்தை கொண்டும் யாருடனும் பகிர வேண்டாம். மேலும் ஒடிபி உடன் உங்கள் யுபிஐ பின்-ஐ குழப்பிக் கொள்ள வேண்டாம்.

யுபிஐ மோசடிகள் வழியாக, தங்கள் வங்கிக் கணக்கில் பணத்தை இழந்த பலரும் செய்த பொதுவான தவறு இதுவாகும்.

இந்த ஜூலை மாதத்தில் அறிமுகமாகும் 13 புது ஸ்மார்ட்போன்கள்; இதோ ஃபுல் லிஸ்ட்!இந்த ஜூலை மாதத்தில் அறிமுகமாகும் 13 புது ஸ்மார்ட்போன்கள்; இதோ ஃபுல் லிஸ்ட்!

02. கண்டபடி ஸ்கேன் செய்ய கூடாது!

02. கண்டபடி ஸ்கேன் செய்ய கூடாது!

நன்றாக மனதில் பதிய வைத்துக்கொள்ளவும், க்யூஆர் கோட் ஸ்கேனர் (QR Code Scanner) பண பரிமாற்றத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.

அதில் உங்களுக்கு சந்தேகம் எழும் பட்சத்தில், எந்த காரணங்களுக்காவும் எந்தவொரு ஒரு க்யூஆர் கோட் ஸ்கேனரையும் ஸ்கேன் செய்ய வேண்டாம்.

03. புகார் அளிக்கிறேன் என்கிற பெயரில் பணத்தை இழக்க வேண்டாம்!

03. புகார் அளிக்கிறேன் என்கிற பெயரில் பணத்தை இழக்க வேண்டாம்!

புகார் எண் அல்லது Consumer redressal number போன்றவைகளை கூகுளில் அணுக கிடைக்கும் ஏதோவொரு இணையதளத்தில் நீங்கள் தேடவில்லை என்பதை உறுதி செய்து கொள்ளவும். எப்போதுமே அதிகாரப்பூர்வ ஆதாரங்களை தவிர வேறு எந்த Source-களிலிருந்தும் புகார் எண்களை தேட வேண்டாம்.

போலியான வலைத்தளத்தில் இருந்து கிடைக்கும் போலியான எண்ணிற்கு அழைப்பு விடுத்தது, புதியதொரு மோசடியில் சிக்கிக்கொள்ள வேண்டாம்.

ஒருவேளை உங்களுக்கு பணம் செலுத்துவதில் அல்லது பெறுவதில் சிக்கல் ஏற்பட்டால் அல்லது ஏதேனும் தொழில்நுட்ப கோளாறு நடந்தால், குறிப்பிட்ட ஆப்பின் ஹெல்ப் செக்ஷனை (Help section) அணுகவும்.

ஆபிஸ் வரச்சொல்லி மிரட்டிய எலான் மஸ்க்கிற்கு 'பல்பு' கொடுத்த பணியாளர்கள்!ஆபிஸ் வரச்சொல்லி மிரட்டிய எலான் மஸ்க்கிற்கு 'பல்பு' கொடுத்த பணியாளர்கள்!

04. இருக்கவே இருக்கு டிஜிசாத்தி.. அதை யூஸ் பண்ணிக்கோங்க!

04. இருக்கவே இருக்கு டிஜிசாத்தி.. அதை யூஸ் பண்ணிக்கோங்க!

ஹெல்ப் செக்ஷன் வழியாக உங்களுக்கு தெளிவு கிடைக்கவில்லை என்றால், கூடுதல் தகவல்களுக்கு DigiSaathi 24x7 ஹெல்ப்லைனை அணுகவும். அறியாதோர்களுக்கு DigiSaathi என்பது ஒரு ஆட்டோமேடட் ரெஸ்பான்ஸ் சப்போர்டட் சிஸ்டம் ஆகும்.

இது நிதி, வங்கி, டிஜிட்டல் பேமண்ட் ப்ராடெக்ட் மற்றும் கார்ட்ஸ் (கிரெடிட், டெபிட் மற்றும் ப்ரீபெய்ட்), மற்றும் நெட்பேங்கிங் பேமண்ட்ஸ் (UPI, NEFT, RTGS, IMPS, AePS, NETC, BBPS, USSD, ATM, QR Code) போன்ற சேவைகள் தொடர்பான வாடிக்கையாளர்களின் கேள்விகளுக்கு, சந்தேகங்களுக்கு தீர்வளிக்கும் தளமாகும்.

கடைசியாக.. எதை மறந்தாலும் இதை மறக்க கூடாது!

கடைசியாக.. எதை மறந்தாலும் இதை மறக்க கூடாது!

யுபிஐ வழியாக நீங்கள் யாருக்கு பணம் அனுப்பினாலும் சரி, குறிப்பிட்ட நபரின் மொபைல் எண், பெயர் மற்றும் UPI ஐடி ஆகியவற்றை - ஒன்றுக்கு இரண்டு முறை - நன்றாக சரிபார்த்த பின்னர், பணத்தை அனுப்பவும்.

பணம் திருடுபவர்களும், அதற்கு அவர்கள் பயன்படுத்தும் வழிமுறைகளும், உருவாக்கும் திட்டங்களும் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே போவதால், நம்மை நாமே தான் பார்த்துக்கொள்ள வேண்டும்; பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும்.

எச்சரிக்கை! உங்க Wi-Fi Router இந்த 4 கம்பெனியை சேர்ந்தது என்றால் உடனே மாத்திடுங்க!எச்சரிக்கை! உங்க Wi-Fi Router இந்த 4 கம்பெனியை சேர்ந்தது என்றால் உடனே மாத்திடுங்க!

எஸ்பிஐ சொல்லாத வேற சில

எஸ்பிஐ சொல்லாத வேற சில "வெயிட்டான" டிப்ஸ்களும் உள்ளன!

அதில் மிகவும் முக்கியமானது - ஸ்க்ரீன் லாக் (Screen Lock). நீங்கள் பின் கோட்-ஐ அல்லது பேட்டர்ன்-ஐ பயன்படுத்தினாலும் சரி, அல்லது ஃபேஸ் டிடெக்ஷன், பாஸ்வேர்ட், ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர்-ஐ பயன்படுத்தினாலும் சரி, உங்கள் ஸ்மார்ட்போனில் ஸ்க்ரீன் லாக் -ஐ செட் செய்யவும்.

இது யுபிஐ பேமெண்ட்ஸ்-ஐ மட்டுமல்ல, ஸ்மார்ட்போனின் பாதுகாப்பையும் உறுதி செய்யும்.

பல வகையான பேமண்ட் ஆப்களை பயன்படுத்த வேண்டாம்! ஏன்?

பல வகையான பேமண்ட் ஆப்களை பயன்படுத்த வேண்டாம்! ஏன்?

Jio UPI, Airtel UPI, Paytm UPI, PhonePe UPI, BHIM UPI, WhatsApp pay, Google Pay என எல்லாவற்றையுமே ஒரே ஸ்மார்ட்போனில் வைத்து, ஒரே நேரத்தில் மாற்றி மாற்றி பயன்படுத்த வேண்டாம். ஒன்று அல்லது இரண்டை மட்டுமே பயன்படுத்தவும்.

பல யுபிஐ ஆப்களை பயன்படுத்துவதில் எந்த சிக்கலும் இல்லை என்றாலும் கூட, பணம் மற்றும் அக்கவுண்ட்களை நிர்வகிப்பதில் உங்களுக்கு குழப்பம் ஏற்படும்.

இம்மாதிரியான சூழலில் நீங்கள் ஏதோவொரு மோசடியில் அல்லது தவறுதலாக சிறிதளவு பணத்தை இழந்திருந்தாலும் கூட, அது உங்களுக்கு தெரியாமல் போகலாம்.

WhatsApp-இல் வாய்ஸ் மெசேஜ் அனுப்பி மாட்டிக்காதீங்க; இனிமேல் இப்படி பண்ணுங்க!WhatsApp-இல் வாய்ஸ் மெசேஜ் அனுப்பி மாட்டிக்காதீங்க; இனிமேல் இப்படி பண்ணுங்க!

கண்டபடி கிளிக் செய்யவில்லை என்றாலே... பாதி பிரச்சனை ஓவர்!

கண்டபடி கிளிக் செய்யவில்லை என்றாலே... பாதி பிரச்சனை ஓவர்!

யார், எப்போது, என்ன லிங்க்-ஐ அனுப்புகிறார்கள் என்று கொஞ்சம் கூட கவலை இல்லாமல், கிடைக்கப்பெற்ற எல்லா வகையான லிங்க்களையும் கிளிக் செய்து, உள்ளே சென்று பார்க்கும் பழக்கம் உங்களுக்கு உள்ளதென்றால், அதை உடனே மாற்றிக்கொள்ளவும்.

பல வகையான சைபர் க்ரைம்களுக்கு அடித்தளமே - போலியான Links தான்; அலெர்ட் ஆக இருக்கவும்!

UPI ஆப்களை எப்போதும் Updated ஆக வைத்துக்கொள்ளவும்!

UPI ஆப்களை எப்போதும் Updated ஆக வைத்துக்கொள்ளவும்!

இப்போது வேண்டாம், நாளைக்கு அப்டேட் செய்துகொள்ளலாம். அல்லது இரவில் தூங்கும் போது அப்டேட் கொடுக்கலாம் என்று தட்டிக்கழிக்கும் வேலையே இருக்க கூடாது.

அப்டேட் கிடைக்கும் போதெல்லாம் அதை உடனே பயன்படுத்தும் பழக்கத்தினை கொண்டு வாருங்கள்!

ஸ்க்ரீன் ஷேரிங், ஸ்க்ரீன் ரெக்கார்ட்டிங்கிற்கு - நோ சொல்லுங்க!

ஸ்க்ரீன் ஷேரிங், ஸ்க்ரீன் ரெக்கார்ட்டிங்கிற்கு - நோ சொல்லுங்க!

உங்கள் ஸ்மார்ட்போனில் எந்தவொரு ஸ்க்ரீன் ஷேரிங் ஆப்பை பயன்படுத்தினாலும் சரி, செட்டிங்ஸ்-க்கு சென்று Blanket Access-ஐ ஆஃப் செய்து வைக்கவும்.

ஏனென்றால், சில "சரிபார்க்கப்படாத" ஆப்களின் வழியாக உங்கள் யுபிஐ ஆப் அக்கவுண்ட்டின் பாஸ்வேர்ட் மற்றும் உங்களுக்கு வரும் ஒடிபி போன்ற முக்கியமான தகவல்கள் "திருடப்படலாம்".

மொபைல் நம்பரை விட UPI ID-க்கும், QR Code-க்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கவும்!

மொபைல் நம்பரை விட UPI ID-க்கும், QR Code-க்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கவும்!

ஒருவருக்கு பணத்தை டிரான்ஸ்பர் செய்யும் போது அவரின் UPI ஐடி-ஐ கேட்கவும் மற்றும் ஒருவரிடம் இருந்து பணத்தை பெறுகிறீர்கள் என்றால் அவரிடம் QR Code-ஐ கேட்கவும்.

மொபைல் எண்ணைப் பயன்படுத்தி பணத்தை அனுப்புவது / பெறுவது எப்போதுமே ஒரு நல்ல யோசனையல்ல. ஏனெனில் நீங்கள் மொபைல் நம்பரை தவறாக டைப் செய்யும் வாய்ப்புகள் அதிகம்!

எச்சரிக்கை! Google Chrome செட்டிங்ஸ்-க்கு போய் உடனே எச்சரிக்கை! Google Chrome செட்டிங்ஸ்-க்கு போய் உடனே "இதை" செய்ங்க.. இல்லனா?

முடிந்த வரை முதலில் ரூ.1 அனுப்புங்கள்!

முடிந்த வரை முதலில் ரூ.1 அனுப்புங்கள்!

கடைசியாக மற்றும் மிகவும் எளிமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, முழு தொகையையும் டிரான்ஸ்பர் செய்வதற்கு முன்பாக, சரியான நபருக்கு தான் நீங்கள் பணத்தை அனுப்புகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்த, வெறும் ரூ.1-ஐ அனுப்பி சோதனை செய்து பார்க்கவும், பின்னர் முழு தொகையையும் அனுப்பவும்.

Best Mobiles in India

English summary
Mistakes you need to avoid while using Google Pay Paytm PhonePe or other UPI apps SBI warns users

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X