WhatsApp-இல் தலைகீழாக டைப் செய்வது எப்படி? அட இது தெரியாம போச்சே!

|

உங்களில் பலருக்கும் வாட்ஸ்ஆப்பில் (WhatsApp) எப்படி வெவ்வேறு வகையான 'பார்மெட்'களில் டைப் செய்வது என்பது பற்றி ஏற்கனவே தெரிந்து இருக்கலாம்!

அதாவது இடாலிக் (Italic), போல்ட் (Bold), ஸ்ட்ரைக்த்ரோ (Strikethrough) மற்றும் மோனோஸ்பேஸ் (Monospace) போன்ற பார்மெட்களில் டைப் செய்வது எப்படி என்பது தெரிந்து இருக்கலாம்.

ஒருவேளை தெரியாதென்றால், கவலை வேண்டாம்; முதலில் வாட்ஸ்அப் சாட்டில் எப்படி தலைகீழாக டைப் செய்வது என்பதை பற்றி பார்ப்போம். பிறகு கட்டுரையின் கடைசியில் வெவ்வேறு பார்மெட்களில் டைப் செய்வது எப்படி என்பதையும் பார்ப்போம்.

தலைக்கீழாய் டைப் செய்வதால் என்ன நன்மை?

தலைக்கீழாய் டைப் செய்வதால் என்ன நன்மை?

வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றால், ஒரு நன்மையும் கிடையாது; எல்லாம் ஒரு வேடிக்கை தான்.

உண்மையாகவே, வாட்ஸ்அப் வழியாக யாரோ ஒருவருக்கு நீங்கள் அனுப்பும் மெசேஜை "தலைகீழாக புரட்டுவதில்" எந்த விதமான நடைமுறைக் காரணமும் இல்லை. ஆனால் அது நிச்சயம் வேடிக்கையாக இருக்கும்.

டக்குனு யாரும் படிக்க கூடாது என்றால்.. இதை பயன்படுத்தலாம்!

டக்குனு யாரும் படிக்க கூடாது என்றால்.. இதை பயன்படுத்தலாம்!

ஒருவேளை நீங்கள் அனுப்பும் வாட்ஸ்அப் மெசேஜை யாருமே டக்கென்று படித்து விட கூடாது, அதை படிக்க அவர்கள் கொஞ்சமாவது சிரமப்பட வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், அதாவது ஒரு சாதாரண வார்த்தையை கூட ஒரு குறியீடு போல அனுப்ப விரும்பினால் இந்த வாட்ஸ்அப் தந்திரம் நிச்சயம் உங்களுக்கு கைகொடுக்கும்.

மற்றபடி, இது முழுக்க முழுக்க வேடிக்கையாகவும் சிரிப்பாகவுமே இருக்கும்.

எச்சரிக்கை! Google Chrome செட்டிங்ஸ்-க்கு போய் உடனே எச்சரிக்கை! Google Chrome செட்டிங்ஸ்-க்கு போய் உடனே "இதை" செய்ங்க.. இல்லனா?

தலைகீழாக டைப் ஆகும் என்றால் அதெப்படி?

தலைகீழாக டைப் ஆகும் என்றால் அதெப்படி?

அதாவது இந்த தந்திரத்தின் கீழ் நீங்கள் அனுப்ப விரும்பும் வாட்ஸ்அப் மெசேஜின் டெக்ஸ்ட் ஆனது ஒரு மிரர் இமேஜ்-ஐ போல, அதாவது ஒரு பேப்பரில் எழுதிய வார்த்தையை கண்ணாடியின் அருகில் வைத்தால், கண்ணாடியில் அது எப்படி பிரதிபலிக்குமோ, அது போல தோன்றும். அதாவது இதை படிக்க முடியும், ஆனால் உடனே படிக்க முடியாது; கொஞ்சம் பழக்கப்பட வேண்டும்.

இப்படியாக, வாட்ஸ்அப்பில் ஒரு டெக்ஸ்ட்டை முழுவதுமாக புரட்டக்கூடிய "தந்திரத்தை" நீங்கள் ஒருபோதும் முயற்சித்து பார்த்தது இல்லை என்றால், வாருங்கள் அதை செய்து பார்த்து விடலாம்.

வாட்ஸ்அப்பில் தலைகீழாக டைப் செய்வது எப்படி?

வாட்ஸ்அப்பில் தலைகீழாக டைப் செய்வது எப்படி?

கண்டிப்பாக இதை செய்ய நமக்கு ஒரு தேர்ட் பார்ட்டி ஆப் தேவை. இங்கே சுவாரசியமான விடயம் என்னவென்றால், இந்த ஆப் மூலம் குறிப்பிட்ட "தலைகீழ் தந்திரத்தை" நீங்கள் வாட்ஸ்அப்பில் மட்டுமல்ல, டெலிகிராம் மற்றும் வேறு எந்த ஆப்பிலும் கூட பயன்படுத்தலாம். மேலும் அடிப்படையிலேயே இது மிகவும் எளிமையானதும் கூட!

இதற்காக நீங்கள் டவுன்லோட் செய்ய வேண்டிய ஆப் - ஃபிளிப் டெக்ஸ்ட் (Flip Text) ஆகும். வெறுமனே இந்த அப்ளிகேஷனை பதிவிறக்கினால் போதும், மற்ற செயல்முறைகள் எல்லாமே மிகவும் எளிது.

Windows யூசர்களே! அடுத்த 6 மாசத்துக்குள்ள Windows யூசர்களே! அடுத்த 6 மாசத்துக்குள்ள "இதை" பண்ணிடுங்க! இல்லனா? கெடு வைத்த Microsoft!

நீங்கள் பின்பற்ற வேண்டிய எளிமையான வழிமுறைகள் இதோ:

நீங்கள் பின்பற்ற வேண்டிய எளிமையான வழிமுறைகள் இதோ:

- முதலில் கூகுள் பிளே ஸ்டோருக்கு சென்று, Flip Text என்று டைப் செய்யவும். உங்களுக்கு பல விருப்பங்கள் கிடைக்கும்; அதில் உங்களுக்கு விருப்பமான ஒன்றை தேர்வு செய்து, இன்ஸ்டால் செய்யவும். நங்கள் Flip Text என்கிற ஒரு ஆப்பையே டவுன்லோட் செய்தோம்.

- குறிப்பிட்ட ஆப்பை பதிவிறக்கம் செய்த பின், அதை திறக்கவும். இப்போது உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள ஸ்க்ரீன் "இரண்டு பகுதிகளாக" பிரிக்கப்பட்டிருப்பதைக் காண்பீர்கள்

- முதல் பகுதியில், நீங்கள் எதை டைப் செய்ய விரும்புகிறீர்களோ அதை உள்ளிட்டு, Flip என்பதை கிளிக் செய்ய, இரண்டாம் பகுதியில் குறிப்பிட்ட வார்த்தை ஆனது அப்படியே தலைகீழாய் தோன்றும்.

- அதை 'காப்பி' செய்தோ, அலல்து 'ஷேர்' என்கிற விருப்பத்தை பயன்படுத்தியோ வாட்ஸ்அப் மற்றும் பிற ஆப்களின் வழியாக பகிரலாம்; அவ்வளவு தான்!

இடாலிக், போல்ட், ஸ்ட்ரைக்த்ரோ மற்றும் மோனோஸ்பேஸ் பார்மெட்களை பயன்படுத்துவது எப்படி?

இடாலிக், போல்ட், ஸ்ட்ரைக்த்ரோ மற்றும் மோனோஸ்பேஸ் பார்மெட்களை பயன்படுத்துவது எப்படி?

இதற்கு எந்த விதமான மூன்றாம் தரப்பு ஆப்களையும் டவுன்லோட் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

ஒரு வாட்ஸ்அப் டெக்ஸ்ட்-ஐ இடாலிக் ஆக மாற்ற அந்த வார்த்தையின் இருபுறமும் 'அண்டர்ஸ்கோர்' செய்யவும்: _தமிழ் கிஸ்பாட்_

போல்ட் ஆக மாற்ற இருபுறமும் அஸ்டரிஸ்க்-ஐ சேர்க்கவும்: *தமிழ் கிஸ்பாட்*

ஸ்ட்ரைக்த்ரோ செய்ய இருபுறமும் டில்டை சேர்க்கவும்: ~தமிழ் கிஸ்பாட்~

மோனோஸ்பேஸ் பார்மெட்-ஐ பெற இருபுறமும் மூன்று பேக்டிக்ஸ்-களை சேர்க்கவும்: ```தமிழ் கிஸ்பாட்```

அவ்வளவுதான்!

Best Mobiles in India

English summary
How to Type WhatsApp Messages in Upside Down Format like Mirror Image using this simple trick

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X