ஏர்டெல் வழங்கும் மூன்று மாதம் இலவச யூடியூப் ப்ரீமியம் அணுகல்!

|

ஏர்டெல் தங்களது வாடிக்கையாளர்களுக்கு வெகுமதி திட்டத்தின் கீழ் யூடியூப் ப்ரீமியம் சலுகை வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சேவைகள் விளம்பரக் கால அடிப்படையில் கிடைப்பதாக கூறப்படுகிறது.

ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை

ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை

உலகின் இரண்டாவது பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமாக இருக்கும் ஏர்டெல் தங்களது வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகையை அறிவித்துள்ளது. யூடியூப் ப்ரீமியம் சேவையை மூன்று மாதங்கள் அணுகுவதற்கான வாய்ப்பை ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

யூடியூப் சேவை மூன்று மாத அணுகல்

யூடியூப் சேவை மூன்று மாத அணுகல்

யூடியூப் சேவை மூன்று மாதம் அணுகுவதற்கான வாய்ப்பை ஏர்டெல் தங்களது வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. நிறுவனம் இந்த சலுகையை விளம்பர அடிப்படையில் அறிவித்துள்ளது. இந்த சலுகையானது ஏப்ரல் 22 ஆம் தேதி 2021 வரை கிடைக்கும்.

ஏர்டெல் வெகுமதி திட்டம்

ஏர்டெல் வெகுமதி திட்டம்

ஏர்டெல் வழங்கும் வெகுமதிகள் திட்டம் இணையதளத்தில் பட்டியிலிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தி திட்டம் ஏர்டெல் கூப்பன் விநியோகம் (Airtel Coupon Distribution) என்று அழைக்கப்படுகிறது.

ஏர்டெல் தேங்க்ஸ் ரிவார்ட்ஸ் திட்டம்

ஏர்டெல் தேங்க்ஸ் ரிவார்ட்ஸ் திட்டம்

வாடிக்கையாளர்கள் இந்த திட்டத்தை பெற ஏர்டெல் தேங்க்ஸ் ரிவார்ட்ஸ் திட்டத்தின் கீழ் பதிவு பெற வேண்டும். ஏர்டெல் இந்த சலுகையை சோதனை அடிப்படையில் வழங்கப்படுகிறது. ஏர்டெல் இந்த சலுகை முடிவடையும் காலம் வரை பணம் கழிக்கப்படமாட்டாது. காலம் முடிவடைந்தவுடன் மாதத்திற்கு ரூ.129 வசூலிக்கப்படும். சோதனை காலம் நிறைவடைந்ததும் கட்டணம் செலுத்தாமல் புதுப்பிக்காமல் பிரீமியம் சந்தாவை ரத்து செய்யலாம்.

நவம்பர் 1 முதல் கேஸ் சிலிண்டர் வாங்குவதில் புதிய நடைமுறை: இனி சிலிண்டர் வாங்க இது கட்டாயம்!

ஏர்டெல் கூப்பன் ட்ரையல் கோட்

ஏர்டெல் கூப்பன் ட்ரையல் கோட்

ஏர்டெல் கூப்பன் ட்ரையல் கோட் அனுப்பினால் மட்டுமே இந்த சலுகை பயன்படுத்த முடியும், யூடியூப் மியூசிக், யூடியூப் ரெட் மற்றும் கூகிள் ப்ளே மியூசிக் ஆகியவற்றின் பிரீமியம் சேவைகளை இதுவரை பெறாத பயனர்களுக்கு இந்த சலுகை கிடைக்கிறது என்று ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யூடியூப் ப்ரீமியம் சேவை

யூடியூப் ப்ரீமியம் சேவை

பிற ஓடிடி தளத்திற்கு எதிரான போட்டியை வலுப்படுத்த யூடியூப் கடந்தாண்டு இந்தியாவில் ப்ரீமியம் சேவைகளை அறிமுகம் செய்தது. நிறுவனம் தற்போது ஒரு மாதம் மற்றும் மூன்று மாதம் என்ற அடிப்படையில் யூடியூப் ப்ரீமியம் திட்டங்களை வழங்குகிறது. இந்த ப்ரீமியம் திட்டங்கள் ஆண்ட்ராய்ட் சாதனங்களுக்கு கிடைக்கின்றன எனவும் ஐஓஎஸ் சாதனங்களில் கிடைக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.

ஸ்ட்ரீமிங் தளத்திற்கான சந்தா

ஸ்ட்ரீமிங் தளத்திற்கான சந்தா

அனைத்து தொலைத் தொடர்பு நிறுவனங்களும் பயனர்களுக்கு ஸ்ட்ரீமிங் தளத்திற்கான சந்தா அணுகலை வழங்குகின்றன. அமேசான் பிரைம், நெட்ஃபிளிக்ஸ் மற்றும் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாருக்கான அணுகல் தேவை கணிசமாக அதிகரித்து வருகிறது. இலவச யூடியூப் ப்ரீமியம் சந்தாவை வழங்கும் ஏர்டெல்லின் நடவடிக்கை வாடிக்கையாளர்களுக்கு பயனளிக்கும் என கூறப்படுகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Airtel Offers Three Months Youtube Premium Subscription to Selected Users

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X