நவம்பர் 1 முதல் கேஸ் சிலிண்டர் வாங்குவதில் புதிய நடைமுறை: இனி சிலிண்டர் வாங்க இது கட்டாயம்!
சமையல் எரிவாயு சிலிண்டர்கள் பெறுவதில் புதிய நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இந்த அறிவிப்பானது நவம்பர் 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளது.

சமையல் எரிவாயு சிலிண்டர்கள்
சமையல் எரிவாயு சிலிண்டர்கள் பெறுவதில் புதிய நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளது. இந்த புதிய நடைமுறையானது நவம்பர் 1 ஆம் தேதி முதல் செயல்படுத்தப்பட இருக்கிறது. இந்த புதிய நடைமுறையானது கேஸ் சிலிண்டர் முறைகேடு மற்றும் உண்மையான நுகர்வோர்களை அறிந்து கொள்ள எண்ணெய் நிறுவனங்களால் எடுக்கப்பட்ட நடவடிக்கையாகும்.

OTP கட்டாயம்
இனி எல்பிஜி சிலிண்டரை வீட்டில் விநியோகம் செய்யும் போது ஒரு முறை கடவுச்சொல் எனப்படும் OTP கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. டெலிவரி ஆதென்டிகேஷன் கோட் (Delivery Authentication code) எனப்படும் DAC என்ற புதிய நடைமுறையை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் செயல்படுத்தியுள்ளது.

வாடிக்கையாளர்கள் சிலிண்டர் முன்பதிவு
வாடிக்கையாளர்கள் சிலிண்டர் முன்பதிவு செய்யும் போது பதிவு செய்யப்பட்டுள்ள மொபைல் எண்ணுக்கு ஒரு ஓடிபி அனுப்பப்படும். சிலிண்டர் விநியோகிக்க வரும் ஊழியரிடம் தங்களுக்கு அனுப்பப்பட்ட ஓடிபி எண்ணை கூறினால் மட்டும் இனி சிலிண்டர் வழங்கப்படும்.

நவம்பர் 1 ஆம் தேதி முதல் புதிய நடைமுறை
நவம்பர் 1 ஆம் தேதி முதல் சிலிண்டர் பெறும் வாடிக்கையாளர்களுக்கு ஓடிபி எண் கட்டாயம். இந்த புதிய நடைமுறையானது கேஸ் சிலிண்டர் முறைகேடு மற்றும் உண்மையான நுகர்வோர்கள் அறிந்து கொள்ள எண்ணெய் நிறுவனங்களால் எடுக்கப்பட்ட நடவடிக்கையாகும்.

ஏஜென்சியில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்
எல்பிஜி சிலிண்டர்களின் நுகர்வோர் எரிவாயு ஏஜென்சியில் பதிவு செய்யப்பட்ட தங்களது மொபைல் எண்ணை நீங்கள் மாற்றியிருந்தால் அதை உடனடியாக அப்டேட் செய்துவிடுங்கள். அப்படி செய்யாத பட்சத்தில் தங்களுக்கு ஓடிபி எண் கிடைக்காது, இதன்மூலம் சிலிண்டர் வாங்குவதில் சிக்கல் ஏற்படலாம்.

சிக்கலை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை
சிலிண்டர் ஏஜென்சியில் குறிப்பிடப்பட்டுள்ள தங்களது முகவரியில் இப்போது வசிக்காமல் வேறு இடத்தில் வசிக்கும் பட்சத்தில் அதை மாற்றியமைப்பதின் மூலம் சிலிண்டர் வாங்குவதில் ஏற்படும் சிக்கலை தவிர்க்கலாம்.

முதற்கட்டமாக 100 ஸ்மார்ட் சிட்டிகள்
முதற்கட்டமாக DAC எனப்படும் புதிய நடைமுறை நாடுமுழுவதும் உள்ள 100 ஸ்மார்ட் சிட்டிகளில் கொண்டு வரப்பட உள்ளது. இதையடுத்து அனைத்து மாவட்டங்களுக்கும் இந்த புதிய நடைமுறை செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ள இந்த சிலிண்டர் DAC முறை வணிக எல்பிஜி சிலிண்டர்களுக்கு பொருந்தாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications