எதிர்பார்ப்பை அதிகரிக்கும் விவோ எக்ஸ் 60, விவோ எக்ஸ் 60 ப்ரோ- வெளியான தகவல்!

|

விவோ எக்ஸ் 60 மற்றும் எக்ஸ் 60 ப்ரோ எக்ஸினோஸ் 1080 எஸ்ஓசிக்கு சிப்செட் மூலம் இயங்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஸ்மார்ட்போன் வரும் நவம்பர் 18 ஆம் தேதி அறிமுகம் செய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

விவோ எக்ஸ் 60 தொடர் ஸ்மார்ட்போன்கள்

விவோ எக்ஸ் 60 தொடர் ஸ்மார்ட்போன்கள்

விவோ எக்ஸ் 60 தொடர் ஸ்மார்ட்போன்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஸ்மார்ட்போன் அம்சங்கள் குறித்து முன்னதாகவே சில தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் விவோ எக்ஸ் 60 எஸ், எக்ஸ் 11 மற்றும் எக்ஸ் 60 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் நவம்பர் 18 ஆம் தேதி அறிமுகமாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து விவோ அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியிடவில்லை.

வடிவமைப்பு குறித்த தகவல்கள்

வடிவமைப்பு குறித்த தகவல்கள்

இதுவரை வெளியான தகவல்களின் படி எக்ஸ் 60, எக்ஸ் 60 ப்ரோ ஸ்மார்ட்போன்களின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. சாதனத்தின் வடிவமைப்பு குறித்த தகவல்கள் தொடர்ந்து வெளியான வண்ணம் இருக்கிறது. விவோ இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களும் ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் அடிப்படையிலான யுஐ மூலம் இயங்கும் என தெரிவிக்கப்படுகிறது.

பிளாட் டிஸ்ப்ளே மற்றும் பஞ்ச் ஹோல் வடிவமைப்பு

பிளாட் டிஸ்ப்ளே மற்றும் பஞ்ச் ஹோல் வடிவமைப்பு

மேலும் தகவல்களின்படி எக்ஸ் 60 ஸ்மார்ட்போன்கள் பிளாட் டிஸ்ப்ளே மற்றும் பஞ்ச் ஹோல் வடிவமைப்பை பெற்றிருக்கும். சாதனத்தின் வலது பக்கத்தில் ஆரஞ்ச் நிற பட்டன்கள் உள்ளது. கடந்தாண்டு வெளியான எக்ஸ் 50 ப்ரோ சாதனத்தை போன்றே இருக்கும் என கூறப்படுகிறது.

"டனுக்கு ரிட்டக்கு ரிட்டக்கு டும்டும்" வாட்ஸ்அப்பில் வைரலாகும் ஸ்டேட்டஸ்: காரணம் இதுதான்?

எக்ஸினோஸ் 1080 எஸ்ஓசி

எக்ஸினோஸ் 1080 எஸ்ஓசி

முன்னதாக, கசிந்த சில அறிக்கைகள் சாம்சங்கின் வரவிருக்கும் எக்ஸினோஸ் 1080 எஸ்ஓசி மூலம் சாதனம் இயக்கப்படும் என்று தெரிவித்தன. விவோ எக்ஸ் 50 தொடரின் பதிப்பாக விவோ எக்ஸ் 60 ஸ்மார்ட்போனின் கேமரா செயல்திறன் சிறப்பாக இருக்கும் என கூறப்படுகிறது.

33W வேகமான சார்ஜிங்

33W வேகமான சார்ஜிங்

விவோ எக்ஸ் 60 ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மெலிதாக இருக்கும். இந்த சாதனத்தில் பெரிய பேட்டரி இல்லை. சாதனம் இந்த மாதத்திலேயே வெளியிடப்பட வாய்ப்புள்ளதால், சாதனத்தின் கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியிடப்படும். இந்த சாதனம் 33W வேகமான சார்ஜிங் ஆதரவைக் கொண்டிருக்கும் என்று தகவல்கள் வெளியாகிள்ளன. இந்த ஸ்மார்ட்போன் சீன சந்தையில் 3500 யுவான் விலையாக இருக்கும் என கூறப்படுகிறது.

அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில்

அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில்

முந்தைய கசிவு அறிக்கையின்படி, சாம்சங் எக்ஸினோஸ் 1080 செயலியை சீனாவில் ஒரு நிகழ்வில் அறிமுகம் செய்கிறது. இந்த சிப்செட் விரைவில் ஸ்மார்ட்போனில் இடம்பெறும். சிப்செட் சீன ஸ்மார்ட்போன் முதன்முதலில் பயன்படுத்தும் என்றும் அது விவோவின் இருக்கலாம் என்றும் தகவல்கள் உள்ளன. எனவே எக்ஸ் 60 சீரிஸில் இந்த செயலி இருக்கும் என்பதற்கான சாத்தியங்கள் உள்ளது. இதன் அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும்.

Best Mobiles in India

English summary
Vivo X60, Vivo X60 Pro Smartphones May Launching Soon with 33W Charging

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X