மார்க்கெட்டே மிரள போகுது.. Sony கேமரா.. 5500mAh பேட்டரி.. புதிய விவோ 5ஜி போன் ரெடி.. எந்த மாடல்?
விவோ நிறுவனம் தனது விவோ வி30இ ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. அதாவது இந்தியாவில் விவோ டி3எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்ட பின்பு இந்த விவோ வி30இ போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.
அதேபோல் விவோ வி30இ ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே விவோ வி30இ போனின் புகைப்படங்கள் ஆன்லைனில் கசிந்த நிலையில், தற்போது இந்த போனின் முக்கிய விவரக்குறிப்புகள் ஆன்லைனில் கசிந்துள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

விவோ வி30இ அம்சங்கள்: 3டி கர்வ்டு டிஸ்பிளே (3D curved display) வசியைக் கொண்டுள்ளது இந்த போன். எனவே சிறந்த டிஸ்பிளே அனுபவத்தை வழங்கும் விவோ வி30இ போன். மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1400 நிட்ஸ் ப்ரைட்னஸ், 360 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் உள்ளிட்ட பல்வேறு டிஸ்பிளே அம்சங்களுடன் இந்த விவோ போன் வெளிவரும்.
சக்திவாய்ந்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 சிப்செட் (Snapdragon 6 Gen 1 chipset) வசதியைக் கொண்டுள்ளது விவோ வி30இ ஸ்மார்ட்போன். மேலும் இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு விவோ வி30இ போன் அறிமுகமாகும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
இந்த விவோ வி30இ ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவுடன் அறிமுகமாகும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது. மேலும் இந்த போனின் மென்பொருள் வசதி மற்றும் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது விவோ நிறுவனம்.
OIS ஆதரவு கொண்ட 64எம்பி சோனி ஐஎம்எக்ஸ்882 சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான விவோ வி30இ ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அட்டகாசமான படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமரா உடன் இந்த போன் அறிமுகமாகும். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.
விவோ வி30இ ஸ்மார்ட்போனில் 5500எம்ஏஎச் பேட்டரி வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. குறிப்பாக இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.

புளூடூத் 5.1, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த புத்தம் புதிய விவோ வி30இ ஸ்மார்ட்போன். அதேபோல் சிவப்பு, நீலம், பச்சை நிறங்களில் இந்த போன் விவோ வி30இ அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்தியச் சந்தையில் இந்த புதிய விவோ போன் பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.
அதேபோல் ஏப்ரல் 17-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ள விவோ டி3எக்ஸ் 5ஜி போன் ஆனது 6000எம்ஏஎச் பேட்டரி, 50எம்பி கேமரா, 44 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட அம்சங்களுடன் ரூ.20,000-க்குள் விற்பனைக்கு வரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக விவோ நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு போன்களும் நல்ல வரவேற்பு உள்ளது.


Click it and Unblock the Notifications








