Home
Mobile

ஏப்.17 வரை எந்த போனும் வாங்காதீங்க.. 50MP கேமரா.. 44W சார்ஜிங்.. வருகிறது விவோ 5ஜி போன். எந்த மாடல்?

விவோ நிறுவனம் தனது விவோ டி3எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் அறிமுக தேதியை வெளியிட்டுள்ளது. குறிப்பாக இந்த போன் 6000எம்ஏஎச் பேட்டரி, 50எம்பி கேமரா உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் வெளிவர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதாவது இந்த விவோ டி3எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது வரும் ஏப்ரல் 17-ம் தேதி மதியம் 12 மணி அளவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதேபோல் இந்த போனை பிளிப்கார்ட் ( Flipkart) தளத்தில் வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆன்லைனில் வெளியான போனின் சிறப்பு அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஏப்.17 வரை எந்த போனும் வாங்காதீங்க.. வருகிறது விவோ 5ஜி போன்.

விவோ டி3எஸ் 5ஜி அம்சங்கள் (Vivo T3x 5G specifications): 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் இந்த புதிய விவோ டி3எஸ் 5ஜி போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1000 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவருவதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்

தரமான ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 சிப்செட் (Snapdragon 6 Gen 1 chipset) உடன் இந்த விவோ டி3எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும். குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேபோல் ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதியுடன் இந்த போன் அறிமுகமாகும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

குறிப்பாக 4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என மூன்று வேரியண்ட்களில் இந்த விவோ டி3எஸ் 5ஜி போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான விவோ டி3எஸ் 5ஜி போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அசத்தலான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த விவோ போன்.

குறிப்பாக எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன. அதேபோல் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர்(Side-mounted Fingerprint Scanner) வசதியுடன் விவோ டி3எஸ் 5ஜி போன் வெளிவரும். மேலும் ஐபி54 ரேட்டிங் கொண்டுள்ளது இந்த விவோ போன்.

6000எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் இந்த விவோ டி3எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். அதேபோல் இந்த பேட்டரியை ஒருமுறை சார்ஜ் செய்தால் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் கிடைக்கும் என்று நிறுவனம் கூறுகிறது. குறிப்பாக இந்த போனின் பேட்டரியை சார்ஜ் செய்ய 44 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. எனவே இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.

ஏப்.17 வரை எந்த போனும் வாங்காதீங்க.. வருகிறது விவோ 5ஜி போன்.

டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களையும் ஆடியோ பூஸ்டரையும் கொண்டுள்ளது இந்த புது விவோ போன். மேலும் யுஎஸ்பி டைப்-சி போர்ட், வைஃபை, ஜிபிஎஸ், 3.5எம்எம் ஆடியோ ஜாக், உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த போனில் உள்ளன. விவோ டி3எஸ் 5ஜி போன் ஆனது 199 கிராம் எடை கொண்டது.

ஆன்லைனில் வெளியான தகவலின்படி, இந்த விவோ டி3எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.15,000-க்கு கீழ் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக அனைத்து சிறப்பு அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் இந்த விவோ போன் வெளிவர இருப்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
vivo T3X 5G will be launched in India on April 17: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X