நாளைக்கு லான்ச் ஆகும் புதிய Vivo 5ஜி போன்.. ரூ.13,999 போதும்.. 50MP கேமரா.. 256GB மெமரி.. எந்த மாடல்?
விவோ நிறுவனம் தனது புதிய விவோ டி3எக்ஸ் 5ஜி போனை நாளை (ஏப்ரல் 17) இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் நாளை மதியம் 12 மணி அளவில் பிளிப்கார்ட் தளத்தில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் விவோ டி3எக்ஸ் 5ஜி ஸ்மர்ட்போன் ஆனது ரூ.13,999 அல்லது ரூ.14,999 விலையில் அறிமுகமாகும் என்று தகவல் வெளிவந்துள்ளது. மேலும் இந்த போனின் அம்சங்கள் ஏற்கனவே ஆன்லைனில் வெளியாகி உள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

விவோ டி3எஸ் 5ஜி அம்சங்கள் (Vivo T3x 5G specifications): தரமான ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 சிப்செட் (Snapdragon 6 Gen 1 chipset) உடன் இந்த விவோ டி3எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதியுடன் இந்த போன் அறிமுகமாகும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் கிடைக்கும்.
இந்த விவோ டி3எஸ் 5ஜி போன் 4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என மூன்று வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்படும். அதேபோல் இந்த போனில் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் இந்த புதிய விவோ போன் அறிமுகம் செய்யப்படும். 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1000 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. குறிப்பாக இந்த போன் சிறந்த டிஸ்பிளே அனுபவத்தை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
விவோ டி3எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் 6000எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் அறிமுகம் செய்யப்படும். இந்த பேட்டரியை ஒருமுறை சார்ஜ் செய்தால் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் கிடைக்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போனின் பேட்டரியை சார்ஜ் செய்ய 44 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. குறிப்பாக இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.
அதேபோல் 50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த விவோ டி3எஸ் 5ஜி போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த விவோ போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர்(Side-mounted Fingerprint Scanner), ஐபி54 ரேட்டிங் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான விவோ டி3எஸ் 5ஜி போன். மேலும் இந்த போன் அட்டகாசமான வடிவமைப்புடன் அறிமுகம் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
5G,யுஎஸ்பி டைப்-சி போர்ட், வைஃபை, ஜிபிஎஸ், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. மேலும் டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களையும் ஆடியோ பூஸ்டரையும் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். குறிப்பாக 199 கிராம் எடை கொண்டுள்ளது இந்த விவோ டி3எஸ் 5ஜி ஸ்மார்ட்போன்.


Click it and Unblock the Notifications