Home
Mobile

வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?

விவோ நிறுவனம் தனது விவோ வி30இ 5ஜி (vivo V30e 5G) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த புதிய போன் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என தற்போது பிளிப்கார்ட் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த போனின் அறிமுக தேதி மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.

அதாவது சமீபத்தில் ஆன்லைனில் கசிந்த தகவலின்படி, வரும் மே 2-ம் தேதி இந்த புதிய விவோ வி30இ 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த போன் தனித்துவமான வடிவமைப்புடன் வெளியாகும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. வருகிறது Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?

விவோ வி30இ 5ஜி அம்சங்கள் (vivo V30e 5G specifications): 6.78-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வசதியுடன் வெளிவரும். மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1400 நிட்ஸ் ப்ரைட்னஸ், 360 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் உள்ளிட்ட பல்வேறு டிஸ்பிளே அம்சங்களை கொண்டுள்ளது இந்த விவோ வி30இ 5ஜி போன். பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் இந்த விவோ வி30இ 5ஜி போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தரமான குவால்காம் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 சிப்செட்(Snapdragon 6 Gen 1 chipset) வசதியைக் கொண்டு விவோ வி30இ 5ஜி போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேபோல் ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது இந்த விவோ போன். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

50எம்பி சோனி ஐஎம்எக்ஸ்882 சென்சார் (Sony IMX882 sensor) + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் உடன் இந்த புதிய விவோ வி30இ 5ஜி போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி eye AF செல்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன். எனவே இந்த போனின் உதவியுடன் அசத்தலான புகைப்படங்களை எடுக்க முடியும்.

அதேபோல் விவோ வி30இ 5ஜி போனில் 5500எம்ஏஎச் பேட்டரி வசதி உள்ளது எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 44 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் (44W fast charging) வசதியும் உள்ளது. குறிப்பாக இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும். மேலும் இந்த போனில் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் வசதி உள்ளது.

வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. வருகிறது Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?

விவோ வி30இ 5ஜி போனில் IP64 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) வருகிறது. புளூடூத் 5.1, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த விவோ வி30இ 5ஜி போன். வெல்வெட் ரெட் (Velvet Red) மற்றும் சில்க் ப்ளூ (Silk Blue) நிறங்களில் இந்த போன் அறிமுகம் செய்யப்படும்.

குறிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் வகையில் ஜெம் கட் டிசைன் (Gem Cut Design) கொண்டுள்ளது இந்த விவோ வி30இ 5ஜி போன். குறிப்பாக இந்த புதிய விவோ 5ஜி போன் ஆனது இந்தியாவில் ரூ.20,000 பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
vivo V30e 5G Launch Date Revealed: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X