சத்தியமா ரூ.11999 தான்.. 16GB ரேம், 1TB மெமரி, IP64 ரேட்டிங், 6000mAh பேட்டரி, 44W சார்ஜிங்.. VIVO வெறித்தனம்!
கொடுக்குற காசுக்கு 200% வொர்த்து என்று கூறும் அளவிலான அம்சங்களுடன்.. விவோவின் லேட்டஸ்ட் மற்றும் பட்ஜெட்-விலை 5ஜி ஸ்மார்ட்போனாக.. விவோ டி3எக்ஸ் 5ஜி (Vivo T3x 5G) கடந்த வாரம் இந்தயாவில் அறிமுகமானது. தற்போது இது ரூ.1500 தள்ளுபடியுடன் விற்பனைக்கு வந்துள்ளது.
விவோ டி3எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் அசல் அறிமுக விலை என்ன? ரூ.1500 தள்ளுபடிக்கு பிறகான ஆஃபர் விலை என்ன? 200% வொர்த்து என்று கூறும் அளவிற்கு விவோ டி3எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் அப்படி என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? இதோ விவரங்கள்:

விவோ டி3எக்ஸ் 5ஜி-யின் அசல் அறிமுக விலை: இந்தியாவில் விவோ டி3எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 4ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.13,499 க்கும், 6ஜிபி ரேம் + 128ஜிபி ஆப்ஷன் ரூ.14,999 க்கும், ஹை-எண்ட் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஆப்ஷன் ரூ.16,499 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
செல்ஸ்டியல் கிரீன் மற்றும் கிரிம்சன் ப்ளீஸ் என்கிற 2 கலர்களில் வெளியாகியுள்ள விவோ டி3எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் இந்திய விற்பனை (இன்று) ஏப்ரல் 24 ஆம் தேதி முதல் தொடங்கியது. இது விவோவின் அதிகாரப்பூர்வ ஆன்லைன் ஸ்டோர் மற்றும் பிரபல இ-காமர்ஸ் வலைத்தளமான பிளிப்கார்ட் வழியாக வாங்க கிடைக்கிறது.

விவோ டி3எக்ஸ் 5ஜி-யின் ஆஃபர் விலை: எச்டிஎப்சி (HDFC) மற்றும் எஸ்பி (SBI) வங்கிகளின் கார்டுகளை பயன்படுத்தி விவோ டி3எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனை வாங்குபவர்களுக்கு ரூ.1,500 தள்ளுபடி கிடைக்கும் என்று விவோ நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்கீழ் விவோ டி3எக்ஸ் 5ஜி-யின் ஆரம்ப விலையை ரூ.11,999 ஆக குறைக்க முடியும்.
விவோ டி3எக்ஸ் 5ஜி-யின் விரிவான அம்சங்கள்: டூயல் சிம் (நானோ-சிம்) ஆதரவுடன் வரும் இந்த புதிய விவோ ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட ஃபன்டச் ஓஎஸ் 14 மூலம் இயங்குகிறது. டிஸ்பிளேவை பொறுத்தவரை, 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.72-இன்ச் எஃப்எச்டி எல்சிடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

ப்ராசஸரை பொறுத்தவரை இது 4என்எம் அடிப்படையிலான ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது 8ஜிபி வரையிலான LPDDR4X ரேம் மற்றும் 128ஜிபி வரையிலான UFS 2.2 ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் எக்ஸ்டென்டட் ரேம் 3.0 அம்சத்தின்கீழ் பில்ட்-இன் ரேம்-ஐ மேலும் 8ஜிபி வரை விரிவாக்க முடியும். மறுகையில் உள்ள இன்டர்னல் ஸ்டோரேஜை, மைக்ரோஎஸ்டி கார்டு வழியாக 1டிபி வரை விரிவாக்க முடியும்.
கேமராக்களை பொறுத்தவரை, இதில் டூயல் ரியர் கேமரா செட்டப் உள்ளது. அதில் எப்f/1.8 அபெக்ஷர் கொண்ட 50 மெகாபிக்சல் மெயின் சென்சார் + எப்/2.4 அபெக்ஷர் கொண்ட 2 மெகாபிக்சல் சென்சார் உள்ளன. செல்பீக்கள் மற்றும் வீடியோ கால்களுக்காக, முன்பக்கத்தில் எப்/2.05 அபெர்க்ஷர் உடனான 8 மெகாபிக்சல் செல்பீ கேமராவும் உள்ளது.
பேட்டரியை பொறுத்தவரை, விவோ டி3எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 44W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உடனான பெரிய 6,000mAh பேட்டரியை கொண்டுள்ளது. விவோ நிறுவனத்தின் கூற்றுப்படி இதை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 68 மணிநேரம் வரையிலான ஆன்லைன் மியூசிக் பிளேபேக் டைம்-ஐ வழங்கும்.
கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை இது பக்கவாட்டில் பொருத்தப்பட்ட ஃபிங்கர் பிரிண்ட் சென்சார், தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி64 ரேட்டிங் மற்றும் டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது. ஒட்டுமொத்தமாக விவோ டி3எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ரூ.15,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் கிடைக்கும் ஒரு "வெறித்தமான" ஸ்மார்ட்போனாகும்!


Click it and Unblock the Notifications