கெத்தா வெளிவரும் Vivo V30e 5G.. வெல்வெட் ரெட் லுக்கில் தருமாறு அம்சங்கள்.. விலை என்ன இருக்கும்?
விவோ (Vivo) நிறுவனம் அதன் புதிய விவோ வி30e (Vivo V30e) ஸ்மார்ட்போன் சாதனத்தை மே 2ம் தேதி, 2024 அறிமுகம் செய்யுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. விவோ நிறுவனம் அதன் வி சீரிஸ் வரிசையில் அறிமுகம் செய்யும் அடுத்த புதிய மாடல் இதுவாகும்.
இந்த ஸ்மார்ட்போன் சாதனத்தை விவோ நிறுவனம் ஜெம் கட் வடிவமைப்புடன் (Gem Cut Design) உடன் உருவாக்கியுள்ளது. இந்த புதிய விவோ வி30e (Vivo V30e) வெல்வெட் ரெட் (Velvet Red) மற்றும் சில்க் ப்ளூ (Silk Blue) நிறங்களில் வெளிவரும் என்று விவோ அறிமுகம் செய்யுமென்று தகவலை வெளியிட்டுள்ளது.

விவோ வி30e 5ஜி (Vivo V30e 5G):
இந்த புதிய விவோ வி30e (Vivo V30e) சாதனம் வெல்வெட் ரெட் நிறத்தில் ஒரு புதிய ஈர்ப்பை உருவாகியுள்ளது. இந்த புதிய விவோ வி30e (Vivo V30e) ஸ்மார்ட்போன் சாதனம் கர்வுடு டிஸ்பிளே உசன் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இன்னும் பல அட்டகாசமான அம்சங்களை கொண்டு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே பற்றி பேசுகையில், இது 6.78" இன்ச் FHD+ டிஸ்பிளேவுடன் வருகிறது.
இது AMOLED டிஸ்பிளே ஸ்கிரீன் உடன் வருகிறது. இந்த விவோ வி30e (Vivo V30e) ஸ்மார்ட்போன் சாதனம் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 சிப்செட் (Snapdragon 6 Gen 1) உடன் வருகிறது. இது பட்ஜெட் விருப்பமாக மிகவும் சக்தி வாய்ந்த ஸ்மார்ட்போன் சாதனமாக வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் சாதனம் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் விருப்பத்தை கொண்டிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த விவோ வி30e (Vivo V30e) ஸ்மார்ட்போன் சாதனம் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மற்றொரு ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடலாகவும் வெளிவரும் என்று விவோ அறிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் கூடுதல் ஸ்டோரேஜ் வசதிக்கு மெமரி கார்டு போன்ற அம்சங்கள் இடம்பெறுமா என்பது பற்றிய தெளிவான விபரங்கள் எதுவும் வெளிவரவில்லை.
இந்த விவோ வி30e (Vivo V30e) ஸ்மார்ட்போன் சாதனம் ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தில் இயங்க கூடியது. இது 44W பாஸ்ட் சார்ஜிங் அம்சத்துடன் வெளிவரும். இது IP64 வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ஸ் ஆதரவை கொண்டிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. கேமராவை பொறுத்த வரை இதில் 50MP சென்சார்கள் கொண்ட கேமரா அம்சம் இடம்பெறும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்பின் சாதனம் 5500mAh பேட்டரி (battery) உடன் வருகிறது. இது பிரத்தியேகமாக பிளிப்கார்ட் (Flipkart) வழியாக விற்பனைக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த விவோ இந்திய ஆன்லைன் வலைத்தளம் வழியாகவும் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது மே 2, 2024ம் தேதி முதல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பட்ஜெட் பிரியர்களை கவரும் ஸ்மார்ட்போன் சாதனமாக இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது. இதன் அறிமுகத்திற்காக பல விவோ ரசிகர்கள் காத்திருக்கின்றனர். பட்ஜெட் விலையில் அடுத்து புதிதாக எதுவும் ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும் என்ற ஐடியா இருந்தால் கொஞ்சம் பொறுத்திருந்து இந்த போனை வாங்கவும்.


Click it and Unblock the Notifications