"டனுக்கு ரிட்டக்கு ரிட்டக்கு டும்டும்" வாட்ஸ்அப்பில் வைரலாகும் ஸ்டேட்டஸ்: காரணம் இதுதான்?
வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்-ல் "டனுக்கு ரிட்டக்கு ரிட்டக்கு டும்டும்" என்ற குரலோடு அனிமேட்டட் வீடியோ வைராகி வருகிறது. இந்த வீடியோ குறித்த மீம்ஸ்கள் சமூகவலைதளங்களில் வைரலாகத் தொடங்கியுள்ளது.

வாட்ஸ்அப் பயன்பாடு
சமூகவலைதளங்களில் ஒன்றாக இருக்கும் வாட்ஸ்அப் பயன்பாடு உலக மக்கள் பெரும்பாலானோரால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 2017 ஆம் ஆண்டில் வாட்ஸ்அப் அதன் ஸ்டேட்டஸ் அம்சத்தை அறிமுகப்படுத்தியது. இந்த ஸ்டேட்டஸ்கள் 24 மணி நேரத்திற்கு பின் தானாக அழிந்துவிடும்படியாக வடிவமைக்கப்பட்டது.

டெக்ஸ்ட், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள்
ஆரம்பத்தில் இந்த வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் அம்சம் அறிமுகப்படுத்தப்பட்ட போது சில எதிர்ப்பை சந்தித்தாலும், காலப்போக்கில் அனைவரிடமும் பிரபலமடைந்தது. இப்போது, இந்த அம்சம் இல்லாமல் பெரும்பாலான பயனர்கள் இருக்க முடியாது என்ற அளவிற்கு மாறிப்போகி உள்ளது. வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் பயனர்கள் டெக்ஸ்ட், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் காரணம்
வாட்ஸ்அப் ஸ்டேட்டஸை சிலர் தங்களது மனநிலையை பிறருக்கு உணர்த்த பயன்படுத்தி வருகின்றனர். சிலர் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் தங்களுக்கு பிடித்தமான வீடியோ காட்சிகள், போட்டோக்கள், டெக்ஸ்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.
ட்ரெண்டாகும் வீடியோ
சமூகவலைதளங்களில் அவ்வப்போது சில விஷயங்கள் ட்ரெண்டாவது வழக்கம். எடுத்துக்காட்டாக நேசமணி சமாச்சாரம்., பிரெண்ட்ஸ் படத்தில் இடம்பெற்றிருந்த வடிவேல் தலையில் சுத்தியல் விழும் காமெடி உலகளவில் ட்ரெண்டானது. அப்படி ட்ரெண்டாகும் விஷயங்கள் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸிலும் பேஸ்புக் பதிவிலும் தொடர்ச்சியாக உலா வரும்.

"டனுக்கு ரிட்டக்கு ரிட்டக்கு டும்டும்"
அதன்படி தற்போது ஒரு வீடியோ வாட்ஸ்அப் ஸ்டேட்டஸை கலக்கி வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக வாட்ஸ்அப்பில் பெரும்பாலானோர் ஸ்டேட்டஸை ஓபன் செய்தால் அதில் "டனுக்கு ரிட்டக்கு ரிட்டக்கு டும்டும்" என்று பாடியபடி ஒரு பொம்மை ஆடி வருகிறது.

அனிமேட்டெட் செய்யப்பட்ட வீடியோ
குழந்தை குரலில் "டனுக்கு ரிட்டக்கு ரிட்டக்கு டும்டும்" என்ற இசை, ஒரு அட்டைப்பெட்டி தலையில் தொப்பி இரண்டு கை, கால் என அனிமேட்டெட் செய்யப்பட்ட வீடியோவில் பொம்மை பனியில் காலை தேய்த்தப்படி நடந்து வருகிறது.

அணல் பறக்கும் மீம்ஸ்கள்
இதை எதற்கு ஸ்டேட்டஸாக வைக்கிறீர்கள் என்று விசாரித்தால் இது நல்லா இருக்கு, இந்த குரல் க்யூட்ட இருக்கு, இதுபோல ஹேப்பியா இருக்கனும் அப்டி இப்டினு சொல்றாங்க. சரியான காரணம் தெரியவில்லை. சமூகவலைதளங்களில் இதை கலாய்த்து மீம்ஸ்கள் அணல் பறந்து வருகிறது.
PicCourtesy: Social Media


Click it and Unblock the Notifications