ஆர்டர் பிச்சிக்கும்.. ரூ.12,499 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. 44W சார்ஜிங்.. 50MP கேமரா.. 1TB மெமரி.. எந்த மாடல்?
விவோ பிரியர்களை அறக்க பறக்க செய்யும் விதமான பட்ஜெட்டில் 44W சார்ஜிங், 6000mAh பேட்டரி, 50எம்பி கேமரா, 1டிபி மெமரி சப்போர்ட் போன்ற பீச்சர்கள் மட்டுமல்லாமல், பிரீமியம் டிசைனில் விவோ டி3எக்ஸ் 5ஜி (Vivo T3x 5G) போன் வெளியாகி இருக்கிறது.
பஞ்ச்-ஹோல் கேமரா, 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்பிளே, IP64 ரெசிஸ்டன்ட் போன்ற மற்ற பீச்சர்களும் பட்ஜெட்டை விட கூடுதல் பிரீமியமாக வருகின்றன. இந்த விவோ டி3எக்ஸ் 5ஜி போனின் முழு அம்சங்கள், விற்பனை தேதி, டிஸ்கவுண்ட் மற்றும் விலை விவரங்கள் இதோ.

விவோ டி3எக்ஸ் 5ஜி அம்சங்கள் (Vivo T3x 5G Specifications): இந்த மாடலில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.72 இன்ச் (2408 × 1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட எல்சிடி (LCD) மாடல் டிஸ்பிளேவாகும்.
ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 4என்எம் (Octa Core Snapdragon 6 Gen 1 4nm) சிப்செட் கொண்டிருக்கிறது. ஃபன்டச் ஓஎஸ் 14 (Funtouch OS 14) வருகிறது. பட்ஜெட்டில் மிட்-ரேஞ்ச் பர்ஃபாமென்ஸ் கொண்ட அட்ரினோ 710 ஜிபியு கிராபிக்ஸ் வருகிறது.
4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி, 6 ஜிபி ரேம் (6 ஜிபி டைனாமிக் ரேம்) + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் (8 ஜிபி டைனாமிக் ரேம்) + 128 ஜிபி மெமரி கொண்ட 3 வேரியண்ட்கள் விற்பனைக்கு வருகின்றன. அதுமட்டுமல்லாமல், 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் சென்சார் (Depth Sensor) கொண்ட டூயல் ரியர் கேமரா செட்டப் (Dual Rear Camera Setup) வருகிறது. 8 ஜிபி ரேம் மாடலில் 4கே வீடியோ ரெக்கார்டிங் (4K Video Recording) சப்போர்ட் வருகிறது. 8 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது.
நைட் (Night), போர்ட்ராய்டு (Portrait), ஸ்லோவ் மோஷன் (Slo-motion), டைம்-லேப்ஸ் (Time-lapse) போன்ற பீச்சர்கள் வருகின்றன. இந்த விவோ டி3எக்ஸ் 5ஜி மாடலில் 6000mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரிக்கு 44W ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) மற்றும் யுஎஸ்பி டைப்-சி (USB Type-C) சார்ஜிங் சப்போர்ட் வருகிறது.
IP64 டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட், 3.5 மிமீ ஆடியோ ஜாக், (Audio Jack), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மற்றும் சைடு ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side Fingerprint Sensor) வருகிறது. 5ஜி, டூயல் 4ஜி வோஎல்டிஇ, வை-பை 6, ப்ளூடூத் 5.1 மற்றும் ஜிபிஎஸ் கனெக்டிவிட்டி கொண்டிருக்கிறது.
கிரிம்ப்சன் ப்ளிஸ் (Crimson Bliss), செலஸ்டியல் கிரீன் (Celestial Green) ஆகிய கலர்களில் விற்பனைக்கு வருகிறது. 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.13,499ஆகவும், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.14,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.16,499ஆகவும் இருக்கிறது.
இருப்பினும், எச்டிஎப்சி பேங்க் கிரெடிட் கார்டுக்கு ரூ.1000 தள்ளுபடியுடன் விற்பனைக்கு வருகிறது. ஏப்ரல் 24ஆம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்கும். பிளிப்கார்ட் (Flipkart), விவோ (Vivo) மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் வாங்கி கொள்ளலாம். பிரீமியம் டிசைன் மட்டுமல்லாமல், மீடியம் பீச்சர்கள் உடன் பட்ஜெட் போன் வேண்டுமானால், இதை ஆப்ஷனில் எடுங்கள்.


Click it and Unblock the Notifications