Home
Mobile

மிரளுது பட்ஜெட்.. வெறும் ரூ.15000 போதும்.. 6000mAh பேட்டரி.. 50MP கேமரா.. 33W சார்ஜிங்.. எந்த மாடல்?

விவோ பிரியர்கள் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் பிரியர்களும் மிரளும்படியான பட்ஜெட்டில் 6000mAh பேட்டரி, 33W ஃபாஸ்ட் சார்ஜிங், டூயல் ரியர் கேமரா போன்ற பீச்சர்களுடன் விவோ டி3எக்ஸ் 5ஜி (Vivo T3x 5G) போன் வெளியாக இருக்கிறது. இதுகுறித்த விவரம் இதோ.

இந்த விவோ போன் வரும் ஏப்ரல் 17ஆம் தேதி வெளியாக இருக்கிறது. பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் விற்பனைக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அந்த போனில் வரும் பீச்சர்கள் அடுத்தடுத்து அறிவிக்கப்பட்டு வருகின்றன. டிசைன், கலர், சிப்செட் பீச்சர்களை தொடர்ந்து பேட்டரி பீச்சர் வெளியாகி எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது.

விவோ டி3எக்ஸ் 5ஜி அம்சங்கள் (Vivo T3x 5G Specifications): இந்த விவோ போனில் 6.72 இன்ச் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) எல்சிடி (LCD) டிஸ்பிளே வருகிறது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்டிருக்கிறது. ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கொண்டுள்ளது. அதோடு ஃபன்டச் ஓஎஸ் (Funtouch OS) கொடுக்கப்பட வாய்ப்புள்ளது.

ரூ.15000 போதும்.. 6000mAh பேட்டரி.. 50MP கேமரா.. 33W சார்ஜிங் மாடல்!

இந்த விவோ டி3எக்ஸ் 5ஜி போனில் ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிகாரன் 6 ஜென் 1 4என்எம் (Qualcomm Snapdragon 6 Gen 1 4nm) சிப்செட் வருகிறது. இந்த பட்ஜெட்டில் ஃபாஸ்டெஸ்ட் சிப் கொண்ட மாடலாக இந்த போன் இருக்கிறது. 2 ரேம் வேரியண்ட்கள் விற்பனைக்கு வர இருக்கின்றன.

4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்டிருக்கிறது. 8 ஜிபி ரேம் மாடலில் கூடுதலாக 8 ஜிபிக்கான டைனாமிக் ரேம் (Dynamic RAM) வருகிறது. ஆகவே, இந்த விவோ டி3எக்ஸ் 5ஜி போனின் சிப்செட் மற்றும் ரேம் பர்ஃபாமென்ஸ் பட்ஜெட்டிலும் மிட்-ரேஞ்ச் அனுபவம் கொடுக்கும்,

50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera Sytem) வருகிறது. அதேபோல 8 எம்பி செல்பீ ஷூட்டர் கொண்டிருக்கிறது. விவோ போன்களில் வரும் பிரத்யேக கேமரா பீச்சர்கள் இந்த போனில் கொடுக்கப்பட வாய்ப்புள்ளது.

ரூ.15000 போதும்.. 6000mAh பேட்டரி.. 50MP கேமரா.. 33W சார்ஜிங் மாடல்!

சாம்சங் கேலக்ஸி எம்15 5ஜி, மோட்டோ ஜி64 மாடல்களை போலவே இந்த விவோ டி3எக்ஸ் 5ஜி போனிலும் 6000mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரிக்கு 33W ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) சப்போர்ட் வருகிறது. யுஎஸ்பி டைப்-சி சார்ஜிங் (USB Type-C Charging) சப்போர்ட் கொண்டிருக்கிறது.

இவ்வளவு பெரிய பேட்டரி கொண்டிருந்தும், 7.99 எம்எம் தடிமன் மற்றும் 199 கிராம் எடை மட்டுமே கொண்டிருக்கிறது. ஆகவே, 6000mAh பேட்டரி போன்களில் மிகவும் ஸ்லிம் டிசைன் கொண்ட மாடலாக இந்த விவோ டி3எக்ஸ் 5ஜி இருக்க போகிறது. IP64 ரெசிஸ்டன்ட் கொண்டிருக்கிறது.

ரியல்மி போன்களை போன்ற பேனல் டிசைனில் செலஸ்டியல் கிரீன் (Celestial Green) மற்றும் கிரிம்ப்ஷன் பிலிஸ் (Crimson Bliss) ஆகிய 2 கலர்களில் விற்பனைக்கு வர இருக்கிறது. மேற்கூறிய பீச்சர்களில் டிசைன், கலர், சிப்செட் மற்றும் பேட்டரி பீச்சர்களே உறுதி செய்யப்பட்டுள்ளன. மற்ற பீச்சர்கள் மார்கெட்டில் கசிந்தவையாகும்.

இந்த விவோ டி3எக்ஸ் 5ஜி போன் ரூ.15,000 பட்ஜெட்டுக்குள் வெளியாகும் என்று விவோ நிறுவனமே உறுதி செய்துள்ளது. ஆகவே, கம்மியான பட்ஜெட்டில் பக்கா சிப்செட், பேட்டரி மட்டுமல்லாமல், பிரீமியம் டிசைன் மற்றும் கலர் கொண்ட மாடலாக இந்த விவோ 5ஜி போனை எதிர்பார்க்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo T3x 5G With 6000mAh Battery Launch on April 17 Sale From Flipkart Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X