Oppo K7x கீக்பெஞ்ச் ஸ்கோர் தகவல் வெளியானது.. முக்கிய சிறப்பம்சம் இது தான்..

|

ஒப்போ நிறுவனத்தின் ஒப்போ K7x ஸ்மார்ட்போன் நவம்பர் 4 ஆம் தேதி சீனாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் அறிமுகத்திற்கு முன்னதாக, கீக்பெஞ்ச் இணையதளத்தில் அதன் மதிப்பெண்ணுடன் சில முக்கிய சிறப்பம்சங்களுடன் தற்பொழுது வெளியாகியுள்ளது.

புதிய Oppo K7x ஸ்மார்ட்போன் 5ஜி

புதிய Oppo K7x ஸ்மார்ட்போன் 5ஜி

ஒப்போ நிறுவனம் சமீபத்தில் தனது வெய்போ கணக்கில் வெளியிட்டுள்ள விளம்பர போஸ்டரில், ரோபோவின் புதிய Oppo K7x ஸ்மார்ட்போன் 5ஜி இணைப்பைக் கொண்டிருக்கும் என்றும், புதிய சாதனத்தின் பின்புறத்தில் மேல் இடது மூலையில் குவாட் கேமரா அமைக்கப்பட்டுள்ளது போன்ற டிசைனையும் காட்டியுள்ளது.

 OPPO PERM00 ஸ்மார்ட்போன் மாடல்

OPPO PERM00 ஸ்மார்ட்போன் மாடல்

சமீபத்தில் TENAA இல் காணப்பட்ட OPPO PERM00 ஸ்மார்ட்போன் மாடல், ஒப்போ K7x ஸ்மார்ட்போனாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. வெளியாகியுள்ள பட்டியல் தகவலின் படி, வரவிருக்கும் ஒப்போ போன் 6.5' இன்ச் 1080 x 2400 பிக்சல்கள் கொண்ட முழு எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளேயுடன் வருகிறது. சாதனம் அறியப்படாத 2GHz ஆக்டா கோர் மீடியா டெக் டைமன்சிட்டி 720 பிராசஸர் மூலம் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 1 முதல் கேஸ் சிலிண்டர் வாங்குவதில் புதிய நடைமுறை: இனி சிலிண்டர் வாங்க இது கட்டாயம்!நவம்பர் 1 முதல் கேஸ் சிலிண்டர் வாங்குவதில் புதிய நடைமுறை: இனி சிலிண்டர் வாங்க இது கட்டாயம்!

ஸ்டோரேஜ்

ஸ்டோரேஜ்

புதிய Oppo K7x ஸ்மார்ட்போன் 6 ஜிபி, 8 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி, 128 ஜிபி, மற்றும் 256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் ஸ்டோரேஜ் அம்சத்திற்காக இதில் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்டும் கொடுக்கப்பட்டுள்ளது.

பெஞ்ச்மார்க் ஸ்கோர்

பெஞ்ச்மார்க் ஸ்கோர்

புதிய Oppo K7x ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தைக் கொண்டிருக்கும். பெஞ்ச்மார்க் தளத்தில், ஒப்போ கே 7 எக்ஸ் சிங்கிள் கோர் சோதனையில் 511 மற்றும் மல்டி கோர் சோதனையில் 1644 மதிப்பெண்கள் பெற்றுள்ளது.

கேமரா

கேமரா

புதிய Oppo K7x ஸ்மார்ட்போனின் கேமராவைப் பொறுத்தவரை, 48 மெகாபிக்சல் பிரைமரி கேமரா, ஒரு 8 மெகாபிக்சல் கேமரா, இரண்டு 2 மெகாபிக்சல் கேமரா சென்சார்களுடன் கூடிய குவாட் கேமரா அமைப்புடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனின் முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இது கிறீன், க்ரெய் மற்றும் ப்ளூ வண்ணங்களில் அறிமுகமாகும்.

நவம்பர் 4ம் தேதி அறிமுகம்

நவம்பர் 4ம் தேதி அறிமுகம்

இந்த சாதனம் 4,910 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரியுடன் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய Oppo K7x ஸ்மார்ட்போன் நவம்பர் 4ம் தேதி சீனாவில் அறிமுகம் செய்யப்படுகிறது. அதனை தொடர்ந்து மற்ற நாடுகளில் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒப்போ நிறுவனத்திற்கு இந்திய சந்தை மிகவும் முக்கியம் என்பதால் விரைவில் இதை எதிர்பார்க்கலாம்.

Best Mobiles in India

English summary
Oppo K7x spotted on Geekbench before the launch know the scores: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X