Home
Mobile

அரட்டும் பட்ஜெட்.. வெறும் ரூ.23,490 போதும்.. 3D டிஸ்பிளே.. 64MP கேமரா.. 16GB ரேம்.. எந்த மாடல்?

இந்திய ஓப்போ பிரியர்களை அரட்டும் பட்ஜெட்டில் 3டி கர்வ்ட் டிஸ்பிளே, ஹாட் வாட்டர் ரெசிஸ்டன்ட், 67W ஃபாஸ்ட் சார்ஜிங், 16ஜிபி ரேம் மட்டுமல்லாமல், பிரீமியம் டிசைனில் ஓப்போ ஏ3 ப்ரோ 5ஜி (OPPO A3 Pro 5G) போன் வெளியாகி இருக்கிறது.

ஓப்போ ஏ3 ப்ரோ அம்சங்கள் (OPPO A3 Pro Specifications): மிட்-ரேஞ்ச் போன்களில் கிடைக்காத IP69, IP68 மற்றும் IP66 வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் கொண்டிருக்கிறது. ஆகவே, கூலிங் வாட்டர் மட்டுமல்லாமல், ஹாட் வாட்டர் ரெசிஸ்டன்ட்டும் கிடைக்கிறது. ஓப்போ கிரிஸ்டல் கிளாஸ் புரொடெக்சன் (Oppo Crystal Glass Protection) வருகிறது.

வெறும் ரூ.23,490 போதும்.. 3D டிஸ்பிளே.. 64MP கேமரா.. 16GB ரேம் மாடல்!

அதபோல கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 (Corning Gorilla Glass Victus 2) புரொடெக்சன் மற்றும் 360 டிகிரி டிராப் ரெசிஸ்டன்ட் கொண்டிருக்கிறது. பக்கா டியூரபிலிட்டி கொண்ட மாடலாக இருக்கிறது. 6.7 இன்ச் (2412×1080 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது.

3டி கர்வ்ட் டிசைன், ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 240Hz டச் சாம்பிளிங் ரேட் கொண்டிருக்கிறது. 950 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. இதுபோக 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி வருகிறது. ஆகவே, டியூரபிலிட்டி மட்டுமல்லாமல், பிரீமியம் டிஸ்பிளே அவுட் எதிர்பார்க்கலாம்.

இந்த டிஸ்பிளேவை போலவே மிட்-ரேஞ்ச் பர்ஃபாமென்ஸ் கொண்ட ப்ராசஸர், ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14) மற்றும் கலர்ஓஎஸ் 14 (ColorOS 14) உடன் வருகிறது. ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7050 6என்எம் சிப்செட் (Octa Core MediaTek Dimensity 7050 6nm) கொண்டிருக்கிறது.

வெறும் ரூ.23,490 போதும்.. 3D டிஸ்பிளே.. 64MP கேமரா.. 16GB ரேம் மாடல்!

இந்த ஏ3 ப்ரோ மாடலில் 67W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. 44 நிமிடங்களில் ஃபுல் சார்ஜ் செய்து கொள்ளலாம். அதேபோல 20 நிமிடங்களில் 0 - 56 சதவீதம் சார்ஜ் செய்து கொள்ளலாம். வெறும் 5 நிமிடங்கள் சார்ஜ் செய்தால், 2.0 மணி நேரம் பேக்கப் கொடுக்கும். ஹீட் கன்ட்ரோல் சப்போர்ட் கொண்டிருக்கிறது.

இந்த போனில் 64 எம்பி அல்ட்ரா கிளியர் மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் சென்சார் மற்றும் 8 எம்பி செல்பீ கேமரா வருகிறது. 8 ஜிபி ரேம் + 8 ஜிபி விர்ச்சுவல் ரேம் மற்றும் 12 ஜிபி ரேம் + 12 ஜிபி விர்ச்சுவல் ரேம் கொண்ட வேரியண்ட்கள் இருக்கின்றன. அதோடு 3 மெமரி வேரியண்ட்கள் விற்பனைக்கு வர இருக்கின்றன.

ஆகவே, 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி, 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்டிருக்கிறது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio), 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ மற்றும் டூயல் 4ஜி சப்போர்ட் கொண்டிருக்கிறது.

லெதர் மற்றும் கிளாஸ் பேனல் டிசைனில் 3 கலர்களில் வெளியாகி இருக்கிறது. ஆகவே, அசூர் (கிளாஸ்), மவுன்டெய்ன் (லெதர்) மற்றும் யுன்ஜின் பிங்க் (லெதர்) ஆகிய கலர்களில் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.23,490ஆக இருக்கிறது.

அதேபோல 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் ரூ.25,820ஆகவும், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.29,345 ஆகவும் இருக்கிறது. சீனாவில் முதலில் வெளியாகி இருக்கிறது. வரும் ஏப்ரல் 19ஆம் தேதி விற்பனை தொடங்குகிறது. அதன்பின் இந்தியாவில் எதிர்பார்க்கலாம்.

Best Mobiles in India

English summary
Oppo A3 Pro 5G With 64MP Camera, 12GB RAM Launched Sale Form April 19 Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X