Home
Mobile

OPPO F25 Pro 5G ஃபர்ஸ்ட் இம்ப்ரெஷன்ஸ்: ரூ.25,000 பட்ஜெட்டில் நம்பி வாங்கக்கூடிய ஸ்மார்ட்போன்!

OPPO F25 Pro 5G ஃபர்ஸ்ட் இம்ப்ரெஷன்ஸ்!

ஒப்போவின் எஃப் சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் அவற்றின் நேர்த்தியான வடிவமைப்புகள், குறிப்பிடத்தக்க கேமரா மேம்பாடுகள், விலையை மீறிய நீடித்து நிலைத்திருக்கும் சகிப்புத்தன்மை ஆகியவற்றிற்காக எப்போதும் அறியப்படுகின்றன.

அப்படியான எஃப் சீரீஸில் ஒப்போ எஃப்25 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் சேர்ந்துள்ளது. 4கே அல்ட்ரா க்ளியர் வீடியோ பேக் டு ஃப்ரண்ட், ஏஐ ஸ்மார்ட் இமேஜ் மேட்டிங், 5,000எம்ஏஎச் பேட்டரி உடனான 67வாட்ஸ் சூப்பர்வூக்க்டிஎம் சார்ஜிங் மற்றும் 94.3% ஸ்க்ரீன் மற்றும் பாடி ரேஷியோ உடன் கூடிய 120ஹெர்ட்ஸ் டிஸ்பிளே போன்ற பல செக்மென்ட்-ஃபர்ஸ்ட் அம்சங்களுடன், செக்மென்ட்டின் சிறந்த ஸ்மார்ட்போனாக மாறுவதற்கான அத்துணை தகுதிகளையும் தன்வசம் கொண்டுள்ளது. மேலும் ஒப்போ எஃப்25 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது நாட்டிலேயே மிகவும் மெலிதான ஐபி65 ரேட்டிங் பெற்ற 5G போன் ஆகும். இப்படியாக இது ரூ.25,000 பட்ஜெட் பிரிவில் பல ஸ்மார்ட்போன்களை வெல்லக்கூடிய மாடலாக தெரிகிறது.

ஒப்போ அதன் எஃப்25 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்வதற்கு முன்பாகவே ஒரு யூனிட்டை எங்களிடம் அனுப்பி வைத்து இருந்தது. புதிய எஃப்25 ப்ரோ 5ஜி உடன் நாங்கள் சில நாட்களை செலவிட்டுள்ளோம். அதன் அடிப்படையிலான இந்த புதிய எஃப் சீரீஸ் ஸ்மார்ட்போனின் ஃபர்ஸ்ட் இம்ப்ரெஷன்ஸ் இதோ:

OPPO F25 Pro 5G ஃபர்ஸ்ட் இம்ப்ரெஷன்ஸ்!

இயற்கையால் ஈர்க்கப்பட்ட வண்ணங்கள் உடனான ஒரு நேர்த்தியான & ஸ்டைலான வடிவமைப்பு!

வெளிப்படையாகவே ஒப்போ எஃப்25 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஒரு அற்புதமான வடிவமைப்பை பெற்றுள்ளது. இது உங்கள் பாக்கெட்டில் இருந்து ஒவ்வொரு முறையும் வெளியே எடுக்கப்படும் போதெல்லாம் அனைத்து கண்களும் உங்களை நோக்கி நகர்வதை உறுதி செய்கிறது. ஒப்போ எஃப்25 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் ஸ்லிம் ஃபிரேம் ஆனது அளவீட்டில் வெறும் 7.54 மிமீ மெல்லியதாக உள்ளது, இது இந்தியாவின் மிகவும் மெலிதான ஐபி65-ரேட்டிங் 5ஜி போனை உருவாக்குகிறது, மேலும் இது 117 கிராம் எடையை கொண்டுள்ளது.

ஒப்போ எஃப்25 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது பக்கங்களிலும் மேட் ஃபினிஷை கொண்டுள்ளது, அதே சமயம் பின்புறம் மெருகூட்டப்பட்ட தோற்றத்தை கொண்டுள்ளது. இதெல்லாம் சேர்ந்து இயற்கையால் ஈர்க்கப்பட்ட இரண்டு கலர் ஆப்ஷன்களுடன்.. இது புதிய எஃப் சீரிஸ் ஹீரோவாக, சிறந்த வேரியண்ட் ஆக உருமாறுகிறது.

டார்க் ஷேட் ஆஃப் பர்கண்டியில் இருந்து, ரியர் கேமரா பேனலின் சன்ஷைன் ரிங்கில் இருந்து மின்னும் அதே நிறத்தின் இலகுவான பதிப்பாக, மினுமினுக்கக்கூடிய ஒப்போ எஃப்25 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் லாவா ரெட் வெர்ஷன் வியப்படைய வைத்தது என்றே கூறலாம்.

லாவா ரெட் கலர்வேயின் டார்க் ஷேட் ஆஃப் பர்கண்டியில் இருந்து வேறுபட்ட நிறங்களை விரும்புவோருக்கு, ஒப்போ எஃப்25 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் ஓஷன் ப்ளூ கலர் ஆப்ஷனும் உள்ளது. இது ரோபோவின் மேக்னட் பார்ட்டிக்கல் வடிவமைப்பை பயன்படுத்தி அசூர் மற்றும் ஒயிட் நிறத்தில் மயக்கும் சிற்றலைகளை உருவாக்குகிறது. எஃப்25 ப்ரோவின் பேக் பேனல் மிகவும் நீடித்த பாலிகார்பனேட் பொருளால் ஆனது, இது தகுதியானதாக தோன்றுவது மட்டுமல்லாமல், தற்செயலான டிராப்களால் ஏற்படும் சேதத்தை தாங்கும் திறன் கொண்டது.

ஒப்போ எப்25 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் இந்திய சந்தைக்கு வருவதற்கு முன்பு நீடித்த தன்மையை உறுதி செய்வதற்காக ஒரு கடுமையான சோதனை செயல்முறைக்கு உட்படுத்தப்பட்டது. அதன்படி ஒப்போ எப்25 ப்ரோ 5ஜி ஆனது 100,000 வால்யூம் கீ பிரஸ்கள் மற்றும் 200,000 பவர் பட்டன் அழுத்தங்களைத் தாங்கும் வகையில் சோதிக்கப்பட்டது. அதேசமயம் யுஎஸ்பி போர்ட் மூலம் 20,000 ப்ளக்கிங் மற்றும் அன்ப்ளக்கிங் நிகழ்வுகளுக்கு உட்படுத்தப்பட்டது.

டிஸ்பிளே: தரமானது: பார்வைக்கு பிரமிக்க வைக்கிறது!

ஒப்போ எப்25 ப்ரோ 5ஜி போனின் டிஸ்பிளே வசீகரிக்கும் வண்ணங்களில் மக்கள் கவனத்தை ஈர்க்கிறது. அதேபோல் 6.7-இன்ச் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் அமோலெட் டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

இந்த போனின் சூப்பர்-நெரோ பெசல்கள் மற்றும்83.4% ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ, அல்ட்ரா-பிரைட் எச்டிஆர் 10 பிளஸ் ஆதரவு, சப்போர்ட் பேனல் ( 900நிட்ஸ் அவுட்டோர் மற்றும் 1100நிட்ஸ் எச்டிஆர் கன்டென்ட்) உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. அதேசமயம் கண்களுக்குப் பாதுகாப்பு தரும் அம்சங்களும் இதில் உள்ளது.

10-பிட் கலர் டிஸ்பிளே வசதி கொண்டுள்ளது இந்த போன். எனவே உங்களுக்குப் பிடித்த ஓடிடி பிளாட்ஃபார்மில் ஸ்ட்ரீமிங் செய்யும்போது, ஒரு மில்லியனுக்கும் அதிகமான நிறங்களை இது வழங்கும். அதேசமயம் இது உங்களுக்குச் சிறந்த திரை அனுபவத்தை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

OPPO F25 Pro 5G ஃபர்ஸ்ட் இம்ப்ரெஷன்ஸ்!

புகைப்படக் கலைஞர்களுக்குப் பிடித்த கேமரா!

புகைப்படக் கலைஞர்களுக்குத் தகுந்தபடி இந்த ஒப்போ எப் சீரிஸ் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. அதாவது தனித்துவமான படங்களை எடுக்க உதவுகிறது இற்த ஒப்போ எப்25 ப்ரோ 5ஜி போன். அதன்படி ஒப்போ எப்25 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 64எம்பி அல்ட்ரா-கிளியர் ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் வெளிவந்துள்ளது. இது சில தரமான புகைப்படங்கள் மற்றும் ஹை -ரெஸ் வீடியோவை உறுதியளிக்கிறது மற்றும் வழங்குகிறது.

ஒப்பே எப்25 ப்ரோ 5ஜி போனின் பிரைமரி கேமரா ஆனது 64எம்பி ஒவி64பி சென்சார் ஆகும். இது எப்/1.7 அபெர்ச்சர் லென்ஸுடன் உள்ளதுஇ இது உங்களைச் சுற்றியுள்ள உலகத்தை இன்னும் விரிவாகப் படம்பிடிக்க உதவுகிறது. ஒப்போ எப்25 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் உதவியுடன் குறைந்த வெளிச்சம் உள்ள இடங்களில் கூட தெளிவான படங்களை எடுக்க முடியும்.

இந்த பிரைமரி கேமரா தவிர பின்புறத்தில் இரண்டு கேமராக்கள் உள்ளன. அதவாவது அல்ட்ரா வைடு கேமரா மற்றும் மேக்ரோ கேமரா உள்ளன. அதாவது 8எம்பி சோனி ஐஎம்எக்ஸ்355 அல்ட்ரா வைடு கேமரா இதில் உள்ளது. இது ஒவ்வொரு ஷாட்டிலும் உலகத்தைப் பற்றிய கூடுதல் தகவல்களை தருகிறது. இந்த அல்ட்ரா வைடு கேமரா மூலம் துல்லியமான புகைப்படங்களை எடுக்க முடியும்.

OPPO F25 Pro 5G ஃபர்ஸ்ட் இம்ப்ரெஷன்ஸ்!

2எம்பி மேக்ரோ கேமராவில் ஓவி02பி10 சென்சார் உள்ளது. இது, உங்களது சப்ஜெக்ட்டை மிகவும் நெருக்கமாக பெற்றுகொள்ள அனுமதிக்கிறது. ஆகவே, சூரியகாந்தியில் மகரந்த சேர்க்கை செய்யும் தேனீ அல்லது இலையின் சிக்கலான டீடெயில்களை, எப்25 ப்ரோ 5ஜியின் மேக்ரோ ஷூட்டரானது, உங்களை நெருக்கமாக பெற்றுகொள்ள அனுமதிக்கிறது.

சோனி ஐஎம்எக்ஸ்615 சென்சார் கொண்ட 32எம்பி செல்பீ கேமராவானது, சமமாக ஈர்க்கக்கூடியது, துடிப்பான மற்றும் கூர்மையான செல்பீக்களை கொடுக்கிறது. அதன் எஃப்/2.4 அபெர்ச்சர் லென்ஸ் மற்றும் அகலமான 21 மிமீ போகல் லென்த்தானது, உங்களை அல்லது உங்கள் நண்பர் குழுவை உலகத்துடன் பகிர்ந்து கொள்ள விரும்பும் சரியான முறையில் படம்பிடிக்கிறது. குறிப்பாக, நீங்கள் போர்ட்ரெய்ட் மோடை ஆன் செய்யும்போது, செல்பீயின் நேச்சுரல் பியூட்டியை மேம்படுத்துகிறது.

இந்த எப்25 ப்ரோ 5ஜியை அதன் அனைத்து போட்டியாளர்களிடமிருந்தும் வேறுபடுத்துவது என்னவென்றால், அதன் அனைத்து கேமராக்களிலிருக்கும் 4கே அல்ட்ரா-ஹை ரெசொலூஷன் வீடியோவை படம்பிடிக்கும் திறனாகும். ஒரு செக்மண்ட்-ஃபர்ஸ்ட், அதாவது நீங்கள் எந்த கேமராவை பயன்படுத்துகிறீர்களோ, அது உங்களை சுற்றி நகரும்போது வாழ்க்கையை படமாக்குகிறது. ஒவ்வொரு அசைவையும் அல்ட்ரா-ஹை டீடெயிலாக பிடிக்கிறது.

OPPO F25 Pro 5G ஃபர்ஸ்ட் இம்ப்ரெஷன்ஸ்!

பர்ஃபாமென்ஸ்: பவர்-பேக்டு மற்றும் எஃபிசியன்ட்!

அண்டர் தி ஹூட், எப்25 ப்ரோ 5ஜி ஆனது மீடியாடெக்கின் டைமன்சிட்டி 7050 மூலம் இயக்கப்படுகிறது, இது 6என்எம் செயல்பாட்டில் கட்டமைக்கப்பட்டுள்ளது. 8ஜிபி ரேம் (+ 8ஜிபி விர்ச்சுவல் ரேம் உங்களுக்குத் தேவைப்பட்டால்), எப்25 ப்ரோ 5ஜியின் பர்ஃபாமென்ஸ் மற்றும் எஃபிசியன்சியின் அற்புதமான கலவையை வழங்குகிறது. 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜானது, உங்களுக்கு பிடித்த நிகழ்ச்சிகள் மற்றும் கேம்கள் அனைத்தையும் ஸ்டோர் செய்ய அனுமதிக்கிறது, அதே நேரத்தில் பெரிய 5,000எம்ஏஎச் பேட்டரி நாள் முழுவதும் விளையாடவும், ஸ்ட்ரீம் செய்யவும் மற்றும் ஸ்க்ரோல் செய்யவும் உங்களை அனுமதிக்கிறது.

பாக்ஸ் சார்ஜிங்கில் இருக்கும் செக்மென்ட்-லீடிங் 67வாட்ஸ் சூப்பர்வூக்டிஎம் சார்ஜர், 10 நிமிடங்களில் பேட்டரியை 30 சதவீதமாக உயர்த்தி, வெறும் 48 நிமிடங்களில் முழு சார்ஜை வழங்குகிறது. ஓப்போவின் அட்வான்ஸ்டு பேட்டரி டெக்னாஜியின் உதவியுடன், ஓப்போ எப்25 ப்ரோ 5ஜியின் பெரிய பேட்டரியானது, ரீமார்க்கபெல் பேட்டரி ஆயுளுக்கு உறுதியளிக்கிறது, நான்கு வருட நிலையான தினசரி பயன்பாட்டிற்கு பிறகும் ஈர்க்கக்கூடிய செயல்திறனைப் பராமரிக்கிறது.

எப்25 ப்ரோ 5ஜி ஆனது, மிகவும் ஸ்டேபிளான சிக்னலை வழங்குவதற்காக, ஏஐ நெட்வொர்க் தேர்வு மற்றும் 360 டிகிரி சரவுண்ட் ஆண்டெனா வடிவமைப்பை ஒருங்கிணைத்து ஓப்போவின் லிங்க்பூஸ்ட் நெட்வொர்க் ஆப்டிமைசேஷன் என்ஜினை பெறுகிறது, (100% ஃபாஸ்டர் டிரான்ஸ்மிஷன் பவர் மற்றும் 58.5% ஸ்ட்ராங்கர் ரிசப்ஷன்). நீங்கள் மெட்ரோவில் இருக்கும்போது அல்லது உங்கள் நண்பர்களுடன் ஸ்டேடியத்தில் கிரிக்கெட்டை பார்க்கும்போது கூட பஃபரிங் மற்றும் ஆன்லைன் கேம் கிளிட்ஜ்களை கடந்த காலத்தின் ஒரு விஷயமாக மாற்றுகிறது.

கலர் ஓஎஸ்: ஸ்மார்ட் டிவைஸ்!

ஒப்போ எஃப்25 ப்ரோ 5ஜியில் இயங்கும் அனைத்தும் ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான கலர்ஓஎஸ் 14 உடன் இயங்குகிறது. கலர்ஓஎஸ் 14 ஆனது உங்கள் ஒப்போ எஃப்25 ப்ரோ 5ஜி எல்லா நேரத்திலும் சீராக இயங்குவதை உறுதி செய்கிறது. இது இன்னும் பல அம்சங்களை வழங்குகிறது.

முதல் ஏஐ ஸ்மார்ட் இமேஜ் மேட்டிங் அம்சத்துடன் இது வருகிறது. இது புகைப்படங்களில் இருந்து சுப்ஜெக்ட்டை பிரித்தெடுத்து, அவற்றை உடனடியாக அல்லது சிறிது நேரம் கழித்துப் பகிரக்கூடிய படங்களாக மாற்ற அனுமதிக்கிறது. புதிய படத்தை ஃபைல் டாக்கில் சேமித்து வைப்பதன் மூலம், இது உங்களை எளிதாக அனுமதிக்கிறது. இது ஈஸி ட்ராக் அண்ட் ட்ரோப் அம்சத்தின் மூலம் புகைப்படம், டெக்ஸ்ட் அல்லது பைல்களைச் சேமிக்க அனுமதிக்கிறது.இவற்றை ஃபைல் டாக்கில் இல் இருந்து எந்த நேரத்திலும் அணுக கலர்ஓஎஸ் 14 அனுமதிக்கிறது.

கலர்ஓஎஸ் 14 இல் இருக்கும் மற்றொரு புது அம்சம் ஸ்மார்ட் டச் அம்சமாகும். இந்த அம்சம் உங்களை ஸ்கிரீன்ஷாட்டில் இருந்து டெக்ஸ்ட் மற்றும் படம் ஆகியவற்றை ஏஐ அம்சம் மூலம் பிரிக்க அனுமதிக்கிறது. ஸ்க்ரீன்ஷாட்டில் இருந்து பிரித்தெடுக்கப்படும் அம்சங்கள் இந்த கலர்ஓஎஸ் 14 இல் சிறப்பாக நடக்கிறது.

கலர்ஓஎஸ் 14 இத்துடன் ஒப்போவின் ட்ரினிட்டி என்ஜின் அனுபவத்தை மேலும் மெருதுவானதாக மாற்றியுள்ளது. ஒப்போ எஃப்25 ப்ரோ 5ஜியின் முழு ஆயுளிற்கும் இந்த ஸ்மூத்னெஸ்ஸை உங்களால் உணரமுடியும். அதாவது இந்த ஒப்போ எஃப்25 ப்ரோ 5ஜி சாதனம் 3 வருட ஓஎஸ் மற்றும் 4 வருட செக்யூரிட்டி பேச் அப்டேட்டை பெறுகிறது. இதன் மூலம் ஒப்போ எஃப்25 ப்ரோ 5ஜி போனை நீங்கள் கையில் எடுத்த முதல் தருணம் போல இறுதி வரை சிறப்பாக செயல்படும் என்கிறது ஒப்போ!

OPPO F25 Pro 5G ஃபர்ஸ்ட் இம்ப்ரெஷன்ஸ்!

ஒப்போ எஃப்25 ப்ரோ 5ஜி பற்றிய இறுதி கருத்து!

குறுகிய காலத்தில் ஒப்போவின் முந்தைய அட்டகாசமான ஸ்மார்ட்போன்களை இந்த ஒப்போ எஃப்25 ப்ரோ 5ஜி மிஞ்சியுள்ளது. இது புதிய ஒப்போ எஃப் சீரிஸ் ஸ்மார்ட்போனுடன் சிறப்படைந்துள்ளது. வெறும் 25,000 பட்ஜெட்டிற்குள் ஒரு மிரட்டலான, சிறப்பான, பெஸ்ட் பெர்பார்மென்ஸ் மற்றும் புத்திசாலித்தனமான ஸ்மார்ட்போனை ஒப்போ வழங்கி அசத்தியுள்ளது. பட்ஜெட்டில் இதுவொரு அல்டிமேட் ஸ்மார்ட்போனாக வாடிக்கையாளர்களை கவரப்போகிறது என்பதில் சந்தேகமில்லை.

ஒப்போ எஃப்25 ப்ரோ 5ஜி போனின் டார்க் எண்சான்ட்டிங் லாவா ரெட் கலர் உங்கள் போனை பார்ப்பவர்களின் கவனத்தை ஈர்க்கிறது. உங்கள் காதில் போனை வைத்துக்கொண்டு நீங்கள் ஒவ்வொரு முறையும் தலையை திருப்பும் பொழுது இதன் தனித்துவத்தை மற்றவர்களால் தெளிவாக ரசிக்க முடிகிறது. இந்த போனில் உள்ள 5000எம்ஏஎச் பேட்டரி மூலம் நீண்ட நேர சர்பிங், கேமிங் மற்றும் ஆன்லைன் ஸ்ட்ரீமிங், ஸ்க்ரோலிங் போன்றவற்றை நாள் முழுக்க அனுபவிக்க முடிகிறது. நீண்ட செயல்பாடுகளுக்கு பிறகும், உங்கள் போனில் மீதம் சார்ஜ் இருப்பதை உறுதி செய்கிறது.

OPPO F25 Pro 5G ஃபர்ஸ்ட் இம்ப்ரெஷன்ஸ்!

இதன் விலை பற்றி பேசுகையில், இந்த ஒப்போ எஃப்25 ப்ரோ 5ஜி போனின் 8ஜிபி + 128ஜிபி ஸ்டோரேஜ் மாடல் ரூ.23.999 விலையிலும், இதன் 8ஜிபி + 256ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் விலை ரூ.25,999 என்றும் ஒப்போ பட்டியலிட்டுள்ளது. ஒப்போ எஃப்25 ப்ரோ 5ஜி சாதனம் வரும் மார்ச் 5ம் தேதி முதல் அமேசான், பிளிப்கார்ட் மற்றும் ஒப்போ ஈ-ஸ்டோர் வெளியயாகவும், சில்லறை விற்பனையாளர் கடைகள் வழியாகவும் விற்பனைக்கு வாங்க கிடைக்கிறது. இத்துடன் பல சிறப்பு சலுகைகளையும் ஒப்போ எஃப்25 ப்ரோ 5ஜி பெறுகிறது.

Best Mobiles in India

English summary
OPPO F25 Pro 5G First Impressions The Must Buy Smartphone Under Rs 25K
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X