தட்டித்தூக்குது ஆர்டர்.. ரூ.17100 போதும்.. SAMSUNG கேமரா.. 16GB ரேம்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
அமேசான் விற்பனையில் (Amazon Sale) ஒரே நேரத்தில் விலை குறைப்பு மற்றும் பேங்க் டிஸ்கவுண்ட் உடன் சாம்சங் கேமரா, ஃபுல்எச்டிபிளஸ் டிஸ்பிளே, 16ஜிபி ரேம், 5000mAh பேட்டரி போன்ற அம்சங்களை கொண்ட ஓப்போ ஏ79 5ஜி போனானது, கிடைக்காத விலைக்கு வந்துள்ளது.
ஓப்போ ஏ79 5ஜி அம்சங்கள் (OPPO A79 5G Specifications): இந்த ஓப்போவில் 6.72 இன்ச் (2400 x 1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டி பிளஸ் (FHD+) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு 90Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 180Hz டச் சாம்பிளிங் ரேட் கொண்ட எல்சிடி (LCD) டிஸ்பிளே மாடலாகும்.

இந்த டிஸ்பிளேவில் 680 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 96% என்டிஎஸ்சி கலர் காமட் (NTSC Color Gamut) வருகிறது. சாம்சங் ஜேஎன்1 சென்சார் (Samsung JN1 Sensor) கொண்ட 50 எம்பி மெயின் கேமரா + ஓம்னிவிஷன் ஓவி02பி1பி சென்சார் (OmniVision OV02B1B Sensor) கொண்ட 2 எம்பி போர்ட்ராய்டு கேமரா வருகிறது.
இந்த கேமராவில் ஏஃஎப் (AF), எப்எப் (FF) மற்றும் 1080P வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் இருக்கிறது. நைட் மோட், போர்ட்ராய்டு மோட், எக்ஸ்ட்ரா எச்டி மோட் போன்ற கேமரா பீச்சர்கள் வருகின்றன. அதோடு 1080P வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் கொண்ட 8 எம்பி செல்பீ கேமரா கொண்டிருக்கிறது.
இந்த ஓப்போ ஏ79 5ஜி போனில் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6020 7என்எம் (Octa Core MediaTek Dimensity 6020 7nm) சிப்செட் மற்றும் மாலி-ஜி57 எம்சி2 ஜிபியு (Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் வருகிறது. கலர்ஓஎஸ் 13.1 (ColorOS 13.1) மற்றும் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) வருகிறது.

8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு கிடைக்கிறது. அதுமட்டுமல்லாமல், 8 ஜிபிக்கான விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) சப்போர்ட் வருகிறது. யுஎஸ்பி டைப்-சி (USB Type-C) சார்ஜிங், 3.5 மிமீ ஆடியோ ஜாக் (Audio Jack), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) வருகின்றன.
இந்த ஓப்போவில் சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor), IP54 தர டஸ்ட் / ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் மற்றும் 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/NSA), டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE) வருகிறது. 5000mAh பேட்டரியானது, 33W சூப்பர்வூக் சார்ஜிங் (SuperVOOC Charging) சப்போர்ட்டுடன் வருகிறது.
வை-பை 802 (Wi-Fi 802), ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3), ஜிபிஎஸ் (GPS) ஆகிய கனெக்டிவிட்டி சப்போர்ட் வருகிறது. இந்த ஓப்போ ஏ79 5ஜி போனில் மிஸ்டரி பிளாக் (Mystery Black) மற்றும் குளோவிங் கிரீன் (Glowing Green) ஆகிய 2 கலர்கள் விற்பனைக்கு வருகின்றன. இந்த போனின் 8 ஜிபி ரேம் +128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.19,999ஆக இருக்கிறது.
இந்த விலையில் ரூ.1000 விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில அமேசான் (Amazon) தளத்தில் ரூ.1,899 உடனடி டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது. இந்த டிஸ்கவுண்ட் எச்டிஎப்சி கிரெடிட் கார்டுக்கு கிடைக்கிறது. ஆகவே, ரூ.2,899 டிஸ்கவுண்ட் போக ரூ.17,100 பட்ஜெட்டில் இந்த ஓப்போ ஏ79 5ஜி போனை வாங்கி கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








