Home
Mobile

தரமான செய்கை.. ரூ.14000 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 1TB மெமரி.. 67W சார்ஜிங்.. 50MP கேமரா.. எந்த மாடல்?

ஓப்போ பிரியர்களை தட்டித்தூக்கும் விதமாக ரூ.2,000 விலை குறைப்பு, ரூ.1,499 பேங்க் டிஸ்கவுண்ட் மட்டுமல்லாமல், 16ஜிபி ரேம், அமோலெட் டிஸ்பிளே, 50எம்பி கேமரா, 67W ஃபாஸ்ட் சார்ஜிங் போன்ற மிரளவிடும் அம்சங்களுடன் ஓப்போ ஏ78 (OPPO A78) போன் விற்பனைக்கு வந்துள்ளது.

ஓப்போ ஏ78 அம்சங்கள் (OPPO A78 Specifications): இந்த ஓப்போவில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) மற்றும் கலர்ஓஸ் 13.1 (ColorOS 13.1) சப்போர்ட் வருகிறது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 மொபைல் (Qualcomm Snapdragon 680 Mobile) சிப்செட் மற்றும் அட்ரினோ 610 ஜிபியு (Adreno 610 GPU) கிராபிக்ஸ் கொண்டிருக்கிறது.

ரூ.14000 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 1TB மெமரி.. 67W சார்ஜிங் போன்!

6.43 இன்ச் (2400 × 108 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. 90Hz ரெஃப்ரெஷ் ரேட், டிசிஐ-பி3 (DCI-P3) கலர் காமட் மற்றும் 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 புரொடெக்சன் (Corning Gorilla Glass 5 Protection) வருகிறது.

இந்த ஓப்போ ஏ78 போனில் 8 ஜிபி ரேம் + 8 ஜிபிக்கான விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) சப்போர்ட் வருகிறது. ஆகவே, 16 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி (microSD) கார்டு சப்போர்ட் கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு கிடைக்கிறது. டூயல் நானோ சிம் சிலாட் (Dual Nano SIM Slot) வருகிறது.

மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் (microSD Card Slot) இடம் பெற்றுள்ளது. 50 எம்பி பிரைமரி கேமரா + 2 எம்பி போர்ட்ராய்டு கேமரா (Portrait Camera) கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) வருகிறது. 8 எம்பி செல்பீ ஷூட்டர் இடம்பெற்றிருக்கிறது. 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack) கொண்டுள்ளது.

ரூ.14000 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 1TB மெமரி.. 67W சார்ஜிங் போன்!

இந்த ஓப்போ ஏ78 மாடலில் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (In-display Fingerprint Scanner) மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) வருகின்றன. கம்மியான பட்ஜெட்டிலும் 67W சூப்பர்வூக் (SuperVOOC) ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. யுஎஸ்பி டைப்-சி போர்ட் கொண்டிருக்கிறது.

180 கிராம் எடை வருகிறது. ஓப்போ ஏ78 போனானது, 4ஜி வேரியண்ட்டாகும். ஆகவே, டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE) கனெக்டிவிட்டி கொண்டிருக்கிறது. அதேபோல ப்ளூடூத் 5.0 (Bluetooth 5.0), வை-பை 802 (Wi-Fi 802) மற்றும் ஜிபிஎஸ் (GPS) ஆகிய கனெக்டிவிட்டி பீச்சர்களும் வருகின்றன. இந்த போனை 2 கலர்களில் வாங்கலாம்.

அக்வா கிரீன் (Aqua Green) மற்றும் மிஸ்ட் பிளாக் (Mist Black) ஆகிய 2 கலர்களில் விற்பனைக்கு வருகிறது. இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டபோது, ரூ.17,499ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இப்போது, ரூ.15,499ஆக விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், அமேசான் (Amazon) தளத்தில் கூடுதலாக பேங்க் டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது.

இந்த ஓப்போ ஏ78 போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலை எச்டிஎப்சி பேங்க் கிரெடிட் கார்டு (HDFC Bank Credit Card) பயன்படுத்தி ஆர்டர் செய்தால், ரூ.1,499 உடனடி டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது. ஆகவே, இந்த போனை வெறும் ரூ.14,000 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். மலிவான விலையில் அமோலெட் டிஸ்பிளே, பிரீமியம் லுக் கொண்ட போன் வேண்டுமானால், இந்த ஆப்ஷனில் எடுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
33 Percent Discount on OPPO A78 With Snapdragon 680 in Amazon Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X