ஆர்டர் மிரளுது.. ரூ.21999 போதும்.. SONY கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 16GB ரேம்.. 67W சார்ஜிங்.. எந்த மாடல்?
அமேசான் விற்பனையில் (Amazon Sale) 16ஜிபி ரேம், சோனி கேமரா, அமோலெட் டிஸ்பிளே, டைமன்சிட்டி 7050 சிப்செட், 67W சூப்பர்வூக் சார்ஜிங் போன்ற மிட்-பிரீமியம் அம்சங்களை கொண்ட ஓப்போ எப்25 ப்ரோ (OPPO F25 Pro) போன் கிடைக்காத டிஸ்கவுண்ட்டில் வருகிறது.
ஓப்போ எப்25 ப்ரோ அம்சங்கள் (OPPO F25 Pro Specifications): இந்த ஓப்போவில் சோனி, ஓம்னிவிஷன் கேமரா சென்சார்களுடன் டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera System) வருகிறது. ஓம்னிவிஷன் ஓவி64பி (Omnivision OV64B) சென்சாருடன் 64எம்பி மெயின் கேமரா + சோனி ஐஎம்எக்ஸ்355 (Sony IMX355) சென்சாருடன் 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா வருகிறது.

ஓம்னிவிஷன் ஓவி02பி10 (Omnivision OV02B10) சென்சாருடன் 2 எம்பி மேக்ரோ கேமரா கொண்டிருக்கிறது. இந்த கேமராவில் ஓஐஎஸ் (OIS) சப்போர்ட் கொடுக்கப்படவில்லை. இருப்பினும், 4K வீடியோ ரெக்கார்டிங் (Video Recording), ஏஎப் (AF) மற்றும் ஈஐஎஸ் (EIS) சப்போர்ட் வருகிறது. 32 எம்பி செல்பீ கொண்டுள்ளது.
இந்த கேமராவில் சோனி ஐஎம்எக்ஸ்615 (Sony IMX615) சென்சார் வருகிறது. 4K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் உள்ளது. 6.7 இன்ச் (2412 × 1080 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு பாண்ட் கிளாஸ் புரொடெக்சன் (Panda Glass Protection) கொண்ட ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) டிஸ்பிளே பேனலாகும்.
இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 240Hz டச் சாம்பிளிங் ரேட், 394 பிபிஐ பிக்சல் டென்சிட்டி வருகிறது. ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) சப்போர்ட் கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7050 6என்எம் (Octa Core MediaTek Dimensity 7050 6nm) சிப்செட் வருகிறது. கலர்ஓஎஸ் 14 (ColorOS 14) கொண்டுள்ளது.

இந்த ஓப்போவில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. 8 ஜிபிக்கான விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) சப்போர்ட் வருகிறது.
இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) சப்போர்ட் உள்ளது.
இந்த ஓப்போ எப்25 ப்ரோ போனில் IP65 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust / Water Resistant) வருகிறது. 67W சூப்பர்வூக் (SuperVOOC) ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் உடன் 5000mAh பேட்டரி வருகிறது. 177 கிராம் எடை மட்டுமே கொண்டுள்ளது. அதேபோல 7.54 எம்எம் தடிமனுடன் ஸ்லிம் டிசைன் கொண்டிருக்கிறது.
இந்த ஓப்போ போனில் ஓசன் ப்ளூ (Ocean Blue) மற்றும் லாவா ரெட் (Lava Red) ஆகிய 2 கலர்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. இந்த போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ. 23,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.25,999ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும், அமேசான் தளத்தில் ரூ.2000 உடனடி டிஸ்கவுண்ட் மற்றும் ரூ.22,500 மதிப்பிலான எக்ஸ்சேஞ்ச் போனஸ் சலுகைகளுடன் விற்பனை செய்யப்படுகிறது. இந்த டிஸ்கவுண்ட் எச்டிஎப்சி பேங்க் (HDFC Bank) டெபிட் கார்டுக்கு கொடுக்கப்படுகிறது. ஆகவே, இந்த ஓப்போவின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டை ரூ.21,999 பட்ஜெட்டில் வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








