Home
Mobile

ரூ.8000 கம்மி.. அசல் விலையில் இருந்து.. அடிமாடு ரேஞ்சுக்கு இறங்கிய லேட்டஸ்ட் Oppo போன்.. என்ன மாடல்?

இந்தியாவில், கடந்த ஜனவரி மாதம் அறிமுகம் செய்யப்பட்ட ஒப்போ ஸ்மார்ட்போன் மீது தற்போது முழுதாக ரூ.8000 தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. அதென்ன ஸ்மார்ட்போன்? அதன் அசல் விலை என்ன? தள்ளுபடிக்கு பிறகான ஆபர் விலை என்ன? அது என்னென்ன அம்சங்களை கொண்டுள்ளது? இதோ விவரங்கள்:

என்ன மாடல்? ஒப்போ நிறுவனத்தின் பிரபலமான கேமரா-சென்ட்ரிக் ஸ்மார்ட்போன் ஆன ஒப்போ ரெனோ 11 ப்ரோ 5ஜி (OPPO Reno 11 Pro 5G) மீது தான் ரூ.8000 டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. இந்த தள்ளுபடி, பிரபல இ-காமர்ஸ் வலைத்தளமான பிளிப்கார்ட் (Flipkart) வழியாக அணுக கிடைக்கிறது.

ரூ.8000 கம்மி.. அடிமாடு ரேஞ்சுக்கு  இறங்கிய லேட்டஸ்ட் Oppo போன்!

பிளிப்கார்ட் தள்ளுபடி விவரங்கள்: ஒப்போ ரெனோ 11 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் ஸ்டோரேஜ் ஆப்ஷன் (12ஜிபி ரேம் + 256ஜிபி) ரூ.39,999 க்கு வாங்க கிடைக்கிறது. இதுதான் அசல் வெளியீட்டு விலையும் கூட. இருப்பினும் தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் வழியாக செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு ரூ.4,000 தள்ளுபடி கிடைக்கும்.

இதற்காக நீங்கள் எஸ்பிஐ (SBI), ஐசிஐசிஐ (ICICI) மற்றும் எச்டிஎப்சி (HDFC) பேங்க் கார்டுகளை பயன்படுத்த வேண்டியிருக்கும். இதுதவிர்த்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்மார்ட்போன்களை எக்ஸ்சேன்ஜ் செய்வதன் மூலம் கூடுதலாக ரூ.4,000 தள்ளுபடியை பெறமுடியும். ஒப்போ ரெனோ 11 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் இறுதி விலையை ரூ.31,999 க்கு கொண்டுவர முடியும்.

ரூ.8000 கம்மி.. அடிமாடு ரேஞ்சுக்கு  இறங்கிய லேட்டஸ்ட் Oppo போன்!

என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? ஒப்போ ரெனோ 11 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் 120Hz 6.7-இன்ச் FHD+ கர்வ்டு AMOLED டிஸ்பிளே, மீடியாடெக் டைமன்சிட்டி 8200 சிபியு, 50எம்பி + 8MP அல்ட்ராவைடு + 32எம்பி டெலிஃபோட்டோ ரியர் கேமரா செட்டப், 32எம்பி செல்பீ கேமரா, 80W சூப்பர்வூக் சார்ஜிங்குடன் 4,600mAh பேட்டரி போன்றவைகளை கொண்டுள்ளது.

மோட்டோரோலா ஸ்மார்ட்போன்கள் மீது கிடைக்கும் சலுகைகள்: பிளிப்கார்ட் வலைதளமானது ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நடக்கும் சிறப்பு விற்பனை ஒன்றையும் நடத்துகிறது. மெகா சேவிங் டேஸ் சேல் என்று அழைக்கப்டும் இந்த விற்பனையில் 3 மோட்டோரோ ஸ்மார்ட்போஞ்சல் மீது 22% வரையிலான நேரடி தள்ளுபடி கிடைக்கிறது.

ரூ.8000 கம்மி.. அடிமாடு ரேஞ்சுக்கு  இறங்கிய லேட்டஸ்ட் Oppo போன்!

மோட்டோ எட்ஜ் 40 நியோ (Moto Edge 40 Neo): இந்த ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது 17% நேரடி தள்ளுபடியை பெற்று ரூ.27,999 க்கு பதிலாக ரூ.22,999 க்கு வாங்க கிடைக்கிறது. இதே ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது 16% நேரடி தள்ளுபடியை பெற்று ரூ.29,999 க்கு பதிலாக ரூ.24,999 க்கு வாங்க கிடைக்கிறது.

மோட்டோ ஜி34 5ஜி (Moto G34 5G): இந்த ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது 20% நேரடி தள்ளுபடியை பெற்று ரூ.14,999 க்கு பதிலாக ரூ.11,999 க்கு வாங்க கிடைக்கிறது. இதே ஸ்மார்ட்போனின் 4ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் 21% நேரடி தள்ளுபடியை பெற்று ரூ.13,999 க்கு பதிலாக ரூ.10,999 க்கு வாங்க கிடைக்கிறது.

மோட்டோ ஜி54 (Moto G54 5G): இந்த ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது 16% நேரடி தள்ளுபடியை பெற்று ரூ.17,999 க்கு பதிலாக ரூ.14,999 க்கு வாங்க கிடைக்கிறது. இதே ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது 22% நேரடி தள்ளுபடியை பெற்று ரூ.21,999 க்கு பதிலாக ரூ.16,999 க்கு வாங்க கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Rs 8000 Bank and Exchange Discount Offer on Oppo Reno 11 Pro 5G in Flipkart
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X