யாரு சாமி அவன்.. பட்ஜெட்ல OLED டிஸ்பிளே.. 24GB ரேம்.. 64MP கேமரா.. 67W சார்ஜிங்.. எந்த மாடல்?
ஓப்போ பிரியர்களை தட்டித்தூக்கும் பட்ஜெட்டில் 3டி கர்வ்ட் ஓஎல்இடி டிஸ்பிளே, IP69 தர ரெசிஸ்டன்ட், 24 ஜிபி ரேம், 64 எம்பி கேமரா, 5000mAh பேட்டரி போன்ற பிரீமியம் பீச்சர்களுடன் ஓப்போ ஏ3 ப்ரோ (OPPO A3 Pro) போன் வெளியாகிறது.
ஐபோன், சாம்சங் கேலக்ஸி போன்ற பிரீமியம் மாடல்களில் மட்டுமே கிடைத்து வந்த IP69 தர ரெசிஸ்டன்ட் இந்த போனில் கொடுக்கப்பட்டிருப்பதால், அல்ட்ரா டியூரபிலிட்டி பீச்சருடன் மார்கெட்டில் கவனம் பெற்றுள்ளது. வரும் ஏப்ரல் 12ஆம் தேதி வெளியாகும் இந்த போன் பீச்சர்கள் கசிந்துவிட்டன.

ஓப்போ ஏ3 ப்ரோ அம்சங்கள் (OPPO A3 Pro Specifications): இந்த ஓப்போவில் 6.7 இன்ச் ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு 3டி கர்வ்ட் டிஸ்பிளே (3D Curved Display) மாடலாகும். ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்டிருக்கிறது.
ஆகவே, பிரீமியம் டிஸ்பிளே அனுபவத்தை இந்த ஓப்போ ஏ3 ப்ரோ போனில் எதிர்பார்க்கலாம். ஓப்போ எப்25 ப்ரோ மற்றும் ஓப்போ ரெனோ 11 போன்களில் கொடுக்கப்பட்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7050 6என்எம் (Octa Core MediaTek Dimensity 7050 6nm) சிப்செட் வருகிறது.
அதேபோல ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மற்றும் கலர்ஓஎஸ் 14 (ColorOS 14) சப்போர்ட் கொண்டிருக்கிறது. இந்த ஏ3 ப்ரோவில் 3 மெமரி வேரியண்ட்கள் வெளியாக இருக்கின்றன. 16 ஜிபி ரேம் (8 ஜிபி ரேம் + 8 ஜிபி டைனாமிக் ரேம்) + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் வருகிறது.

அதேபோல 24 ஜிபி ரேம் (12 ஜிபி ரேம் + 12 ஜிபி டைனாமிக் ரேம்) + 256 ஜிபி மெமரி மற்றும் 24 ஜிபி ரேம் (12 ஜிபி ரேம் + 12 ஜிபி டைனாமிக் ரேம்) + 512 ஜிபி மெமரி கொண்ட ஹை-எண்ட் வேரியண்ட்களும் வெளியாக இருக்கின்றன. 64 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் வருகிறது.
லைட்-சென்சார் இடம்பெற்றிருக்கிறது. சோனி அல்லது ஓம்னிவிஷன் கேமரா சென்சார்கள் கொடுக்கப்படலாம். 8 எம்பி செல்பீ வருகிறது. மிட்-ரேஞ்ச் ஓப்போ போன்களில் வரும் 5,000mAh பேட்டரி மற்றும் 67W ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) சப்போர்ட் வருகிறது. டைப்-சி சார்ஜிங் போர்ட் கொண்டிருக்கிறது.
இந்த பேட்டரி உடன் அல்ட்ரா ஸ்லிம் டிசைனில் 7.89 மிமீ தடிமன் மற்றும் 179.5 கிராம் எடை மட்டுமே கொண்டிருக்கிறது. IP69 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் கொண்டுள்ளது. இந்த ஓப்போவில் ஸ்கை ப்ளூ (Sky Blue), மவுன்டெய்ன் ப்ளூ (Mountain Blue) மற்றும் கிளவுட் ப்ரோகேட் பிங்க் (Cloud Brocade Pink) கலர்களில் வருகிறது.
இந்த போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட மாடலின் விலை ரூ.23,000ஆகவும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட மாடலின் விலை ரூ.25,300ஆகவும் இருக்கிறது. அதேபோல 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.28,750ஆகவும் இருக்கிறது.
இந்த போன் ஏப்ரல் 12ஆம் தேதி சீனாவில் வெளியாகிறது. அதன்பின் இந்தியா உள்பட மற்ற நாடுகளில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. மேற்கூறிய விலை விவரங்கள் மார்கெட்டில் கசிந்தவையாகும். இருப்பினும், அதே விலையில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பட்ஜெட்டில் வெளியாவதால், நல்ல வரவேற்பு பெறலாம்.


Click it and Unblock the Notifications








