வெச்சி செஞ்சிட்டாங்க.. பட்ஜெட்ல SONY கேமரா.. 3D டிஸ்பிளே.. 16GB ரேம்.. 67W சார்ஜிங்.. எந்த மாடல்?
கேமரா பிரியர்கள் மூக்கில் விரல் வைக்கும் விதமாக பட்ஜெட்டில் சோனி மற்றும் ஓம்னிவிஷன் சென்சார்கள் கொண்ட கேமரா, 3டி கர்வ்ட் டிஸ்பிளே, 16ஜிபி ரேம், 67W சார்ஜிங் என்று மிரளவிடும் அம்சங்களுடன் ஓப்போ எப்25 ப்ரோ (OPPO F25 Pro) களமிறங்கியிருக்கிறது.
ஓப்போ எப்25 ப்ரோ அம்சங்கள் (OPPO F25 Pro Specifications): இந்த ஓப்போவில் 6.7 இன்ச் (2412 × 1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 3டி கர்வ்ட் டிஸ்பிளே (3D Curved Display) மாடலாகும்.

இந்த டிஸ்பிளேவுக்கு பாண்ட் கிளாஸ் புரொடெக்சன் (Panda Glass Protection) வருகிறது. ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கொண்ட கலர்ஓஎஸ் 14 (ColorOS 14) சப்போர்ட் கொண்டுள்ளது. ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7050 6என்எம் (Octa Core MediaTek Dimensity 7050 6nm) சிப் வருகிறது.
இந்த ஓப்போ எப்25 ப்ரோ 5ஜி போனில் 16 ஜிபி ரேம் (8 ஜிபி ரேம் + 8 ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 128 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் (8 ஜிபி ரேம் + 8 ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 256 ஜிபி மெமரி கொண்ட 2 மாடல்கள் விற்பனைக்கு வர இருக்கின்றன.
எஸ்டிகார்டு சிலாட் கிடையாது. டூயல் நானோ சிம் சிலாட் (Dual Nano SIM Slot) மட்டும் கொண்டிருக்கிறது. இந்த ஓப்போவில் பிரீமியம் சென்சார்கள் கொண்ட டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera System) வருகிறது. ஓம்னிவிஷன் ஓவி64பி (Omnivision OV64B) சென்சாருடன் 64எம்பி மெயின் கேமரா வருகிறது.

அதேபோல 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமராவானது, சோனி ஐஎம்எக்ஸ்355 (Sony IMX355) சென்சாருடனும், 2 எம்பி மேக்ரோ கேமராவானது ஓம்னிவிஷன் ஓவி02பி10 (Omnivision OV02B10) சென்சாருடனும் வருகிறது. இந்த கேமராவில் 4K வீடியோ ரெக்கார்டிங் (Video Recording) சப்போர்ட் வருகிறது.
அதுமட்டுமல்லாமல், ப்ரோ மோட் (Pro Mode), போர்ட்ராய்ட் மோட் (Portrait Mode), நைட் மோட் (Night Mode), எக்ஸ்ட்ரா எச்டி மோட் (Extra HD Mode) மற்றும் டூயல் வியூ வீடியோ (Dual-view Video) போன்ற பீச்சர்கள் வருகின்றன. 4K வீடியோ ரெக்கார்டிங் மற்றும் சோனி ஐஎம்எக்ஸ்615 (Sony IMX615) சென்சாருடன் 32 எம்பி செல்பீ கேமரா வருகிறது.
இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) மற்றும் IP65 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) கொண்டிருக்கிறது. 7.54 எம்எம் தடிமன் மற்றும் 177 கிராம் எடை கொண்டுள்ளது. இந்த ஓப்போவில் 5000mAh பேட்டரியானது, 67W சூப்பர்வூக் (SuperVOOC) ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் வருகிறது.
இந்த போனில் ஓசன் ப்ளூ (Ocean Blue) மற்றும் லாவா ரெட் (Lava Red) ஆகிய 2 கலர்கள் விற்பனைக்கு வர இருக்கின்றன. இதன் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ. 23,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.25,999ஆகவும் இருக்கிறது.
மார்ச் 4ஆம் தேதி முதல் விற்பனை தொடங்குகிறது. அமேசான் (Amazon), பிளிப்கார்ட் (Flipkart) மற்றும் ஓப்போ இந்தியா (OPPO India) ஆகிய தளங்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம். எஸ்பிஐ மற்றும் ஐசிஐசிஐ கார்டுகளுககு 10 சதவீதம் உடனடி கேஸ்பேக் கொடுக்கப்படுகிறது. 9 மாதங்களுக்கான நோ-காஸ்ட் ஈஎம்ஐ சலுகையும் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications