Home
Mobile

வெளுத்துக்கட்டுது சேல்.. ரூ.21,000 போதும்.. SONY கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 67W சார்ஜிங்.. எந்த மாடல்?

சோனி கேமரா, அமோலெட் டிஸ்பிளே, 16ஜிபி ரேம், 67W சார்ஜிங் போன்ற பீச்சர்களுடன் பட்ஜெட்டில் வெளியாகி மிகப்பெரும் வரவேற்பு பெற்ற ஓப்போ எப்25 ப்ரோ (OPPO F25 Pro) போனின் புதிய கலர் வேரியண்ட் வெளியாகி விற்பனையை அறக்க பறக்க செய்துள்ளது.

இந்த ஓப்போ போனில் ஓசன் ப்ளூ (Ocean Blue) மற்றும் லாவா ரெட் (Lava Red) ஆகிய 2 கலர்கள் ஏற்கனவே விற்பனைக்கு கிடைக்கின்றன. இப்போது, கோரல் பர்பிள் (Coral Purple) என்னும் புதிய கலரில் வெளியாகி அல்ட்ரா ப்ரீமியம் லுக் கொடுக்கிறது. முதலில் பீச்சர்களை பாத்துவிட்டு, பிறகு விலை விவரங்களுக்கு செல்வோம்.

வெளுத்துக்கட்டுது சேல்.. ரூ.21,000 போதும்.. SONY கேமரா.. எந்த மாடல்?

ஓப்போ எப்25 ப்ரோ அம்சங்கள் (OPPO F25 Pro Specifications): இந்த ஓப்போவில் கேமரா, பேட்டரி, சிப்செட் மற்றும் டிஸ்பிளே போன்ற முக்கிய பீச்சர்கள் தட்டித் தூக்கும்படி இருக்கிறது. பாண்ட் கிளாஸ் புரொடெக்சன் (Panda Glass Protection) கொண்ட 6.7 இன்ச் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது.

இந்த டிஸ்பிளேவில் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 240Hz டச் சாம்பிளிங் ரேட் வருகிறது. 394 பிபிஐ பிக்சல் டென்சிட்டி கொண்டிருக்கிறது. இந்த ஓப்போ எப்25 ப்ரோ மாடலில் டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera System) கொடுக்கப்பட்டுள்ளது.

64 எம்பி மெயின் கேமராவானது, ஓம்னிவிஷன் ஓவி64பி (Omnivision OV64B) சென்சாருடன் வருகிறது. சோனி ஐஎம்எக்ஸ்355 (Sony IMX355) சென்சாருடன் 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா மற்றும் ஓம்னிவிஷன் ஓவி02பி10 (Omnivision OV02B10) சென்சாருடன் 2 எம்பி மேக்ரோ கேமரா வருகிறது.

வெளுத்துக்கட்டுது சேல்.. ரூ.21,000 போதும்.. SONY கேமரா.. எந்த மாடல்?

ஆகவே, மூன்று கேமராக்களிலும் பக்கா சென்சார்கள் வருவதால், நல்ல அவுட்புட் எதிர்பார்க்கலாம். இந்த மெயின் கேமராவில் ஈஐஎஸ் (EIS) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. 4K வீடியோ ரெக்கார்டிங் (Video Recording) சப்போர்ட் வருகிறது. சோனி ஐஎம்எக்ஸ்615 (Sony IMX615) சென்சார் கொண்ட 32 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது.

இந்த ஷூட்டரிலும் 4K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் வருகிறது. சிப்செட் அம்சங்களை பார்க்கையில், பட்டையை கிளப்பும் பர்ஃபாமென்ஸ் கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7050 6என்எம் (Octa Core MediaTek Dimensity 7050 6nm) பிராசஸர் வருகிறது. ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS), கலர்ஓஎஸ் 14 (ColorOS 14) கொண்டிருக்கிறது.

கேமிங் பர்ஃபாமென்ஸ் கொண்ட மாலி-ஜி8 எம்சி4 ஜிபியு (Mali-G68 MC4 GPU) கிராபிக்ஸ் கொண்டிருக்கிறது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட 2 மாடல்கள் விற்பனைக்கு வருகின்றன. எஸ்டிகார்டு சப்போர்ட் கிடையாது, இருப்பினும் 8 ஜிபிக்கான விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) வருகிறது.

இந்த ஓப்போ எப்25 ப்ரோ போனில் 67W சூப்பர்வூக் (SuperVOOC) ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), IP65 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் வருகிறது. டைப்-சி ஆடியோ (Type-C Audio) வருகிறது.

இந்த ஓப்போவின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ. 23,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.25,999ஆகவும் இருக்கிறது. இருப்பினும், கோரல் பர்பிள் வேரியண்ட் உள்பட ரூ.2000 பேங்க் டிஸ்கவுண்ட் உடன் விற்பனைக்கு கிடைக்கிறது. பிளிப்கார்ட் தளத்தில் எஸ்பிஐ கார்ட் பயன்படுத்தி தள்ளுபடி பெறலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
17 Percent Discount on OPPO F25 Pro With Coral Purple Colour in Amazon Sale Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X