ஏப்ரல் 12 உறுதி.. 64MP கேமரா.. IP59 ரேட்டிங்.. மாஸ் என்ட்ரி கொடுக்கும் ஒப்போ போன்.. எந்த மாடல்?
ஒப்போ நிறுவனம் தனது புதிய ஒப்போ ஏ3 ப்ரோ 5ஜி போனின் அறிமுக தேதியை வெளியிட்டுள்ளது. இந்த ஒப்போ போன் ஒன்பிளஸ் போன்களை போன்ற வடிவமைப்பைக் கொண்டுள்ளது. ஆனாலும் இந்த போன் தனித்துவமான அம்சங்களுடன் அறிமுகமாகும்.
தற்போது வெளியான தகவலின்படி, வரும் ஏப்ரல் 12-ம் தேதி ஒப்போ ஏ3 ப்ரோ 5ஜி போன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. சீனாவில் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்ட பின்பு உலக சந்தை மற்றும் இந்திய சந்தையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும் ஆன்லைனில் வெளியான இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்கள் மற்றும் விலைப் பற்றிய தகவல்களை இங்கே பார்க்கலாம்.

ஒப்போ ஏ3 ப்ரோ 5ஜி அம்சங்கள் (Oppo A3 Pro 5G specifications): 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஒஎல்இடி கர்வ்டு (OLED curved)வசதியுடன் இந்த ஒப்போ ஏ3 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். பின்பு 1080 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1400 நிட்ஸ் ப்ரைட்னஸ் உள்ளிட்ட பல டிஸ்பிளே அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போன். குறிப்பாக இந்த ஒப்போ போன் சிறந்த திரை அனுபவத்தைக் கொடுக்கும்.
சக்திவாய்ந்த மீடியாடெக் 7050 பிராசஸர் (MediaTek 7050 processor) உடன் இந்த ஒப்போ ஏ3 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த பிராசஸர் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். மேலும் ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த போன் அறிமுகமாகும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
12ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் இந்த அசத்தலான ஒப்போ ஏ3 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.
ஒப்போ ஏ3 ப்ரோ 5ஜி போனுக்கு ஐபி69 (IP69) தர வாட்டர் மற்றும் டஸ்ட் ப்ரூப் (Waterproof and Dustproof) கொடுக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம். மேலும் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் ஆதரவு இந்த போனில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த போனின் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஒப்போ நிறுவனம்.
64எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் இந்த ஒப்போ ஏ3 ப்ரோ 5ஜி போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவுடன் இந்த போன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.
ஒப்போ ஏ3 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி வசதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும்.

5ஜி, யுஎஸ்பி டைப்-சி, வைஃபை, ஜிபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இதில் உள்ளன. மேலும் ஆன்லைனில் வெளியான தகவலின்படி, இந்த புதிய ஒப்போ ஏ3 ப்ரோ 5ஜி போன் ரூ.27,470 விலையில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.
குறிப்பாக அஸூர் (Azure), யுன் ஜின் பவுடர் (ரோஸ்) (Yun Jin Powder (rose)) மற்றும் மவுண்டன் ப்ளூ (Mountain Blue) நிறங்களில் இந்த அசத்தலான ஒப்போ ஏ3 ப்ரோ 5ஜி போன் வெளிவரும். மேலும் இந்தியாவில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது ஒப்போ ஏ3 ப்ரோ 5ஜி போன்.


Click it and Unblock the Notifications








