இதான்டா டிஸ்கவுண்ட்.. முழுசா ரூ.20000 கட்.. SONY கேமரா.. 12GB ரேம்.. Victus பாதுகாப்பு.. எந்த மாடல்?
ஃபிளிப் போன் பிரியர்கள் அறக்க பறக்கும் விதமாக 6.8 இன்ச் மெயின் டிஸ்பிளே, 3.26 இன்ச் அவுட்டர் டிஸ்பிளே, 12ஜிபி ரேம், ஹாசல்பிளாட் கேமரா போன்ற பிரீமியம் அம்சங்களை கொண்ட ஓப்போ ஃபைண்ட் என்3 ஃபிளிப் போனுக்கு ரூ.20,000 தள்ளுபடி வழங்கப்படுகிறது.
ஓப்போ ஃபைண்ட் என்3 ஃபிளிப் அம்சங்கள் (OPPO Find N3 Flip Specifications): இந்த ஃபிளிப் போனில் 6.8 இன்ச் (2520 × 1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு ஈ6 அமோலெட் (E6 AMOLED) டிஸ்பிளே மாடலாகும். இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 240Hz டச் சாம்பிளிங் ரேட், 403 பிபிஐ பிக்சல் டென்சிட்டி வருகிறது.

அதேபோல 1440Hz ஃபிரிகொன்சி PWM டிம்மிங், 1600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், ஸ்கோட் யுடிஜி கிளாஸ் (SCHOTT UTG Glass) பாதுகாப்பு வருகிறது. அவுட்டர் டிஸ்பிளேவை பார்க்கையில், 3.26 இன்ச் (720 × 382 பிக்சல்கள்) அமோலெட் பேனல் வருகிறது. அதோடு 60Hz ரெஃப்ரெஷ் ரேட், 250 பிபிஐ பிக்சல் டென்சிட்டி மற்றும் 900 நிட்ஸ் பிரைட்னஸ் வருகிறது.
இந்த அவுட்டர் டிஸ்பிளேவுக்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் (Corning Gorilla Glass Victus) பாதுகாப்பு வழங்கப்படுகிறது. ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) மற்றும் கலர்ஓஎஸ் 13.2 (ColorOS 13.2) சப்போர்ட் கொண்டிருக்கிறது. ஆக்டா கோர் டைமன்சிட்டி 9200 4என்எம் (Octa Core Dimensity 9200 4nm) சிப்செட் கொண்டுள்ளது.
இம்மார்டலிஸ் ஜி715 11 கோர் ஜிபியு (Immortalis G715 11 Core GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. இந்த ஓப்போ ஃபைண்ட் என்3 ஃபிளிப் போனில் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் விற்பனைக்கு வருகின்றன. மைக்ரோஎஸ்டி கார்டு (microSD Card) சப்போர்ட் கிடையாது.

ஹாசல்பிளாட் கேமரா சிஸ்டம் (Hasselblad Camera System) கொண்டிருக்கிறது. சோனி ஐஎம்எக்ஸ்890 (Sony IMX890) சென்சாருடன் 50 எம்பி பிரைமரி வைடு ஆங்கிள் (Primary Wide-angle) கேமரா + சோனி ஐஎம்எக்ஸ்581 (Sony IMX581) சென்சாருடன் 48 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + சோனி ஐஎம்எக்ஸ்709 (Sony IMX709) சென்சாருடன் 32 எம்பி டெலிபோட்டோ கேமரா வருகிறது.
அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமராவில் மேக்ரோ சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல சோனி ஐஎம்எக்ஸ்709 சென்சார் கொண்ட 32 எம்பி ஏஃஎப் (AF) செல்பீ கேமரா வருகிறது. இந்த ஓப்போ ஃபைண்ட் என்3 ஃபிளிப் போனில் 44W சூப்பர்வூக் ஃபிளாஷ் சார்ஜ் (SUPERVOOC Flash Charge) சப்போர்ட் கொண்ட 4300mAh பேட்டரி வருகிறது.
5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/NSA), டூயல் 4ஜி (4G), வை-பை 802 (Wi-Fi 802), ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3), என்எப்சி (NFC) மற்றும் ஜிபிஎஸ் (GPS) ஆகிய கனெக்டிவிட்டிகள் மற்றும் யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) வருகின்றன. சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் வருகிறது.
இந்த போனில் கிரீம் கோல்டு (Cream Gold) மற்றும் ஸ்லீக் பிளாக் (Sleek Black) கலர்களில் விற்பனைக்கு வருகிறது. இதன் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.94,999ஆக இருக்கிறது. இந்த விலையில் ரூ.20,000 உடனடி டிஸ்கவுண்ட் பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் வழங்கப்படுகிறது. இந்த தள்ளுபடி மல்டிபிள் பேங்க் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கும் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








