'கலர் ஷிபிட்ங்' தொழில்நுட்பத்தைச் சோதனை செய்யும் நுபியா.. ஒன்பிளஸ் மற்றும் ஒப்போவுக்கு போட்டியா?

|

ஒன்பிளஸ் மற்றும் ஒப்போ உள்ளிட்ட சில முக்கிய பிராண்டுகளால் இந்த ஆண்டு நிறையப் புதுமையான மற்றும் தனித்துவமான ஸ்மார்ட்போன் மாடல்கள் பகிரப்பட்டது. இப்போது, ​​நுபியா நிறுவனமும் ஒன்பிளஸ் கான்செப்ட் ஒன் போனின் ஒத்த கருத்தைக் கொண்ட ஒரு புதிய சாதனத்தில் வேலை செய்கிறது, அதில் எலக்ட்ரோக்ரோமிக் கிளாஸ் வழங்கப்பட்டு கேமரா கண்ணாடியை கலர் ஷிப்ட்டிங் செய்ய முயற்சிக்கிறது.

நுபியா ஒரு ரெட் மேஜிக்

நுபியா ஒரு ரெட் மேஜிக்

சீன மைக்ரோ பிளாக்கிங் தளமான வெய்போவில் ஒரு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது, அங்கு நுபியா ஒரு ரெட் மேஜிக் ஸ்மார்ட்போனைக் காட்சிப்படுத்தியுள்ளது. இது ஒரு பட்டனை டச் செய்ததும் சாதனத்தின் உட்புறங்களைக் அப்படியே காட்சிப் படுத்துகிறது. இந்த வீடியோவை முதலில் மைஸ்மார்ட் பிரைஸ் வலைத்தளத்தில் கண்டறிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

'கலர் ஷிபிட்ங்' தொழில்நுட்பம்

'கலர் ஷிபிட்ங்' தொழில்நுட்பம்

நுபியா ரெட் மேஜிக்கின் பின்புற பேனலில் இரண்டு வெளிப்படையான ஸ்டிரிப் கொடுக்கப்பட்டுள்ளது. இவை ஒரு பிரத்தியேக பட்டனை டச் செய்த பிறகு சாதனத்தின் உட்புறங்களை வெளிப்படுத்திக் காண்பிக்கிறது. மற்றொரு கிளிக்கில், இரண்டு ஸ்ட்ரிப்களும் கருமையாகி, மீண்டும் ஒரு முறை உள்ளே உள்ள பாகங்களை அப்படியே, மறையச் செய்கிறது. நிறுவனம் இந்த அம்சத்தைத் தனது அடுத்த போனில் உட்படுத்துமா என்பது சரியாகத் தெரியவில்லை.

5வது முறையாக மீண்டும் தோன்றிய மோனோலித்.. இம்முறை போலந்தில்.. அடுத்த மர்மம் என்னவோ?5வது முறையாக மீண்டும் தோன்றிய மோனோலித்.. இம்முறை போலந்தில்.. அடுத்த மர்மம் என்னவோ?

ஒன்பிளஸின் இதேபோன்ற தொழில்நுட்பம்

ஒன்பிளஸின் இதேபோன்ற தொழில்நுட்பம்

அல்லது இந்த தொழில்நுட்பம் வெறும் ஒரு கருத்து சாதனமாகச் சோதனை செய்யப்படுகிறதா என்பதும் தெளிவாக இன்னும் நமக்கு தெரியவில்லை. ஒன்பிளஸின் இதேபோன்ற தொழில்நுட்பத்தை ஜனவரி மாதத்தில் காண்பித்தது, ஆனால் இது சாதனத்தின் மிகச் சிறிய பகுதியில்தான் இருந்தது மற்றும் கேமரா கிளாஸை மட்டுமே கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

விவோ பின் பேனலின் வண்ணத்தை மாற்றும் தொழில்நுட்பம்

விவோ பின் பேனலின் வண்ணத்தை மாற்றும் தொழில்நுட்பம்

ஆனால், நுபியா நிறுவனம் இதை சாதனங்களைக் கிளிக் செய்யும் போது சிறந்த வெளிப்பாடு கட்டுப்பாட்டை அனுமதிப்பது போன்ற பிற அம்சங்களுக்கும் முழு பேனளிலும் அமைத்துள்ளது. விவோ நிறுவனம் கூட, இந்த ஆண்டின் செப்டம்பரில், பின் பேனலின் வண்ணத்தை மாற்றும் தொழில்நுட்பத்துடன் இதே போன்ற ஒரு போனின் மாடலை காட்சிப்படுத்தியது.

(வீடியோ) தரையிறங்கும்போது வெடித்து சிதறிய பிரமாண்ட ஸ்டார்ஷிப் ராக்கெட்: (வீடியோ) தரையிறங்கும்போது வெடித்து சிதறிய பிரமாண்ட ஸ்டார்ஷிப் ராக்கெட்: "வெற்றிகரமான சோதனை" எலான் மஸ்க் டுவிட்

2021 ஆம் ஆண்டில் அதிக சாதனங்களில் இதை நாம் காணலாமா?

2021 ஆம் ஆண்டில் அதிக சாதனங்களில் இதை நாம் காணலாமா?

வெய்போவின் மற்றொரு டிப்ஸ்டரான டிஜிட்டல் சாட் நிலையத்தின்படி, ஒப்போ நிறுவனமும் இதே தொழில்நுட்பத்தை ஆராய்ந்து வருகிறது, மேலும் அடுத்த ஆண்டுக்குள் அதைப் பெருமளவில் உற்பத்தி செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது 2021 ஆம் ஆண்டில் இதே தொழில்நுட்பத்தைக் கொண்ட ஸ்மார்ட்போன்களை பொது மக்களுக்கு வெளியிடுவதன் மூலம் அதிக சாதனங்களை நாம் காணலாம் என்று கூறப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Nubia is working on color-shifting back panel technology : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X