உலகமே எதிர்பார்க்கும் Nubia Z60 Ultra.. இது போன் இல்லை பொக்கிஷம்.. என்ன ஸ்பெஷல்? என்ன விலை? நாளை அறிமுகமா?
உலகமே எதிர்பார்த்த அந்தவொரு தருணம் இதோ வந்துவிட்டது. பார்த்து-பார்த்து பல அம்சங்களை இணைத்து ஒன்றாக செதுக்கப்பட்ட ஸ்மார்ட்போனான நுபியா Z60 அல்ட்ரா (Nubia Z60 Ultra) நாளை (December-17) அறிமுகமாகிறது. இதற்கு முன்பாக, இந்த போனின் சிறப்பம்சங்கள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
நுபியா Z60 அல்ட்ரா (Nubia Z60 Ultra) ஸ்மார்ட்போனில் 6.82" இன்ச் 1.5K BOE LTPO டிஸ்பிளே (Display), 5வது தலைமுறை அண்டர்-ஸ்கிரீன் கேமரா தொழில்நுட்பம் (5th Generation Under-Screen Camera Technology), AI மூலம் கஸ்டமைஸ் செய்யப்பட்ட OIS ட்ரிபிள் ரியர் கேமரா (AI customised OIS Triple Rear Camera), ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் (Snapdragon 8 Gen 3 SoC) உடன் இயங்குகிறது.

இதில் 6000 mAh பேட்டரி (Battery), 18W பாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) மற்றும் பல சிறப்பம்சங்கள் நிறைந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனை நுபியா (Nubia) நிறுவனம் பார்த்து-பார்த்து செதுக்கியுள்ளது என்பது இதன் வடிவமைப்பை பார்த்தவுடனே தெரிகிறது. இதுவொரு உண்மையான முழு டிஸ்பிளே ஸ்மார்ட்போன் (Original Full Display Smartphone) என்பது குறிப்பிடத்தக்கது. டிஸ்பிளே நாட்ச் (Display notch) எதுவும் இல்லாமல் முழுமையான டிஸ்பிளே அனுபவத்தை வழங்குகிறது.
நுபியா Z60 அல்ட்ரா நாளை அறிமுகம் (Nubia Z60 Ultra Launch Tomorrow):
ஸ்மார்ட்போன் கேமரா பிரியர்களை கவரும் விதமாக இதன் கேமரா அம்சம் அமைந்துள்ளது. உண்மையை சொல்ல போனால், 3 சிறப்பான கேமரா சென்சார்களை பயன்படுத்தி, இதுவொரு அல்ட்ரா கேமரா போனாக (Best camera smartphone) அறிமுகம் செய்யப்படவுள்ளது. இந்த நுபியா Z60 அல்ட்ரா (Nubia Z60 Ultra) போனின் பின்பக்கத்தை பார்த்தாலே, அதன் கேமரா பம்ப் நம்மை ஈர்க்கிறது. அப்படியொரு தனித்துவமான வடிவமைப்புடன் சிறந்த கேமராவை இந்த போன் பேக் செய்துள்ளது.
இது 16ஜிபி ரேம் (16GB of LPDDR5x RAM) உடன் 1டிபி வரையிலான ஸ்டோரேஜ் (1 TB of UFS 4.0 storage) உடன் வருகிறது. இது 6000mAh பேட்டரி (battery) உடன் 18W பாஸ்ட் சார்ஜிங் அம்சத்தை கொண்டுள்ளது. நுபியா Z60 அல்ட்ரா (Nubia Z60 Ultra) சாதனம் 18W, 45W, 60W மற்றும் 80W பவர் அவுட்புட்களை வழங்கும் புதுவகையான GaN பாஸ்ட்-சார்ஜிங் மற்றும் சார்ஜருடன் வருகிறது.

நுபியா Z60 அல்ட்ரா எதிர்பார்க்கப்படும் விலை (Nubia Z60 Ultra Expecting Price):
இப்போது நாம் பயன்படுத்திக்கொண்டிருக்கும் சாதாரண சார்ஜ்ஜர் ஹெட் போலல்லாமல், இந்த GaN சார்ஜர், உண்மையான பாஸ்ட் சார்ஜிங் அனுபவத்தை வழங்குகிறது. இது நம்முடைய சாதாரண சிலிகான் சார்ஜ்ர்கள் போலல்லாமல், இவை கேலியும் நைட்ரைடு (Gallium Nitride) மூலம் சக்தியை வேகமாகவும், எலக்ட்ரான் இழப்பு இல்லாமலும் ஸ்மார்ட்போனை வேகமாக சார்ஜ் செய்கின்றது.
இது 3 வெவ்வேறு போர்ட்கள் ஆதரவை வழங்குகிறது. இதில் USB-C 1, USB-C 2 மற்றும் USB-Type-A போர்ட்கள் உள்ளன. இதற்கான வெவ்வேறு வகையான கேபிள்களை இந்த போன் அதன் பாக்சுடன் பெரும் என்று கூறப்பட்டுள்ளது. நாளை அறிமுகமாகவிருக்கும் நுபியா Z60 அல்ட்ரா (Nubia Z60 Ultra) இந்தியாவில் ரூ.49,990 என்ற விலையில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








