Home
Mobile

இருக்கு ஆனா இல்லை.. கேமரா டிஸ்பிளே கீழே இருக்கு.. ஆனா கண்ணனுக்கு தெரியாது.. மேஜிக் காட்டும் Nubia Z60 Ultra..

ஸ்மார்ட்போன் சந்தையில் ஒரு புதிய தொழில்நுட்ப புரட்சியை உருவாக்கிய பெருமை கட்டாயம் நுபியா (Nubia) பிராண்டிற்கே சொந்தமாகும். காரணம், இந்த நிறுவனம் தான் அண்டர் டிஸ்பிளே செல்பி கேமரா (under display selfie camera) அம்சத்தை அறிமுகம் செய்து பயன்பாட்டிற்கு கொண்டுவந்துள்ளது.

நுபியா (Nubia)நிறுவனம் அதன் அடுத்த தலைமுறை பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடலான நுபியா இஜட்60 அல்ட்ரா (Nubia Z60 Ultra) மாடலை அறிமுகம் செய்யவிருப்பதாக அறிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பற்றிய சில துணுக்குகளை கடந்த சில வாரங்களாக நாம் கேட்டு வருகிறோம். அந்த வரிசையில், இப்போது இந்த புதிய Nubia Z60 Ultra ஸ்மார்ட்போன் பற்றிய கேமரா அம்சங்களின் விபரங்கள் லீக் ஆகியுள்ளது.

இருக்கு ஆனா இல்லை.. கேமரா டிஸ்பிளே கீழே இருக்கு.. ஆனா வெளிய தெரியாது..

சமீபத்தில் வெளியான டிப்ஸ்டர் தகவல், Nubia Z60 Ultra ஸ்மார்ட்போன் சாதனத்தின் கேமரா விபரங்களை வெளிப்படுத்தியுள்ளது. மற்றொரு லீக் தகவல் இந்த சாதனம் எந்த சக்தி வாய்ந்த சிப்செட் உடன் வெளிவரக்கூடும் என்ற விபரத்தையும் வெளியிட்டுள்ளது. Nubia Z60 Ultra ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம் என்ற விபரம் இதோ.

டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் (Digital chat station) வெளியிட்ட தகவலின் படி, Nubia Z60 Ultra ஸ்மார்ட்போன் சாதனம் ட்ரிபிள் ரியர் கேமரா (triple rear camera) அம்சத்தை கொண்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளது. அதேபோல், வரவிருக்கும் இந்த புதிய நுபியா இஜட்60 அல்ட்ரா (Nubia Z60 Ultra) சாதனம் அதன் டிஸ்பிளேவின் மையத்தில் மறைத்து வைக்கப்பட்ட அண்டர் டிஸ்பிளே செல்பி (under display selfie camera) கேமராவை கொண்டிருக்கும் என்று தகவல் குறிப்பிடுகிறது.

சமீபத்தில் வெளியான Nubia Z60 Ultra ஸ்மார்ட்போனின் புகைப்படத்தில், செல்பி கேமரா இருப்பது போன்ற அடையாளமே இல்லாமல், Nubia Z60 Ultra-வின் டிஸ்பிளே ஒரு முழுமையான முழு டிஸ்பிளேவாக காட்சியளிக்கிறது. நுபியா நிறுவனம் இதற்கு முன்னர் கூட, இதே தொழில்நுட்பத்தை அதன் Nubia Z50 Ultra மாடலில் வழங்கி அசத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

இருக்கு ஆனா இல்லை.. கேமரா டிஸ்பிளே கீழே இருக்கு.. ஆனா வெளிய தெரியாது..

ஆனால், இந்த முறை சில மேம்படுத்தல்களுடன் நிறுவனம் இந்த அண்டர் டிஸ்பிளே கேமராவை கொண்டுவந்துள்ளது என்று கூறப்படுகிறது. விவரமாக கூறவேண்டும் என்றால், Nubia Z60 Ultra ஸ்மார்ட்போன் சாதனம் இரண்டு 50MP சென்சாரை கொண்டுள்ளது. இத்துடன் சேர்த்து 64MP ஆம்னிவிஷன் (OmniVision OV64B periscope unit) பெரிஸ்கோப் யூனிட் சென்சார்களை கொண்டுள்ளது. இந்த சென்சர்களில் ஒரு 50MP சென்சார் 1/1.56' இன்ச் சென்சராக இருக்கும்.

அதேபோல், இதில் உள்ள 2வது 50MP சென்சார் 1/1.55' இன்ச் அளவில் வரும் அல்ட்ரா வைடு சென்சராக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த சாதனம் 1.5K பிளாட் OLED அம்சத்துடன் இயங்கும் துடிப்பான டிஸ்பிளேவை கொண்டிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த நுபியா இஜட்60 அல்ட்ரா ஸ்மார்ட்போன் 6,000mAh பேட்டரியை (battery) பேக் செய்யும். இதில் 80W வயர்டு சார்ஜிங் அம்சம் இடம்பெறும்.

இந்த ஸ்மார்ட்போனி சிப்செட் பற்றி பேசுகையில், இது புதிய தலைமுறை ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் (Qualcomm Snapdragon 8 Gen 3) உடன் வெளிவரும் ஒரு சக்தி வாய்ந்த பெர்பார்மன்ஸ் போனாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதளத்துடன் இயங்கும். இது அறிமுகம் பெரும்பாலும் இந்த மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Nubia Z60 Ultra confirmed with triple camera setup on rear and under display selfie camera on front
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X