பவர்புல் போனாக வெளிவரும் 2 சாதனம்.. கெத்தாக அறிமுகமாக ரெடியாகும் Nubia போன்கள்..
நுபியா (Nubia) பிராண்ட் சீனாவில் இரண்டு ஸ்மார்ட்போன் சாதனங்களை அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. இந்த இரண்டு புதிய சாதனங்களும் மிரட்டலான சக்தி வாய்ந்த புதிய ஸ்னாப்டிராகன் சிப்செட்டை கொண்டிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
நுபியா வின் இந்த வரவிருக்கும் 2 ஸ்மார்ட் போன் சாதனங்களும் புதிய தலைமுறை ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 (Snapdragon 8 Gen 3) சிப்செட் கொண்ட சக்தி வாய்ந்த போன்களாக அறிமுகப்படுத்தப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. நுபியா ரெட் மேஜிக் 9 ப்ரோ (Red Magic 9 Pro) தொடர் இந்த வார இறுதியில் புதிய சிப்பைக் பெரும் என்று வதந்திகள் பரவியுள்ளது.

அதேசமயம் நுபியா Z60 அல்ட்ரா (Nubia Z60 Ultra) வரும் டிசம்பர் மாதத்தில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்திய லீக் தகவலின் படி, டிப்ஸ்டர் டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் (Digital chat station) குறிப்பிட்ட கேமரா அம்சங்களை வெளிப்படுத்தியது என்று குறிப்பிட்டுள்ளது. அதேபோல், ZTE Z60 Ultra மாடலுக்கான எதிர்பார்க்கப்படும் வெளியீட்டு காலவரையறையை மீண்டும் இந்த லீக் வலியுறுத்தியுள்ளது.
நுபியா இஜட்60 அல்ட்ரா (Nubia Z60 Ultra):
டிப்ஸ்டர் டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் தகவலின் படி, வரவிருக்கும் நுபியா இஜட்60 அல்ட்ரா (Nubia Z60 Ultra) ஆனது அண்டர் டிஸ்ப்ளே முன்பக்கக் கேமரா மற்றும் 35mm கேமராவைக் கொண்டிருக்கும் என அறிக்கை செய்யப்பட்டுள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமரா கூட சிறந்த உள்ளமைவுக்கு மேம்படுத்தப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
இந்த சென்சார் விவரக்குறிப்புகள் தற்போது தொழில்துறையில் மிகப்பெரியதாகக் கருதப்படுகிறது. இது ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS)க்கு ஆதரவளிப்பதாகவும் கூறப்படுகிறது. டிப்ஸ்டர் தகவலின் படி, ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 (Snapdragon 8 Gen 3) இயங்கும் ஃபிளாக்ஷிப் டிசம்பரில் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது. இது ஒரு புதிய வெய்போ இடுகையின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த போனின் உடைய டிப்ஸ்டர் மேலே உள்ள படத்தைப் பகிர்ந்துள்ளார்.
அவர் ஏற்கனவே ஆகஸ்ட் மாதம் வெளியிட்ட தகவலிலும் இது குறிப்பிடப்பட்டிருந்தது. வலதுபுறத்தில் காட்டப்பட்டுள்ள முன்மாதிரி சாதனம், Z60 அல்ட்ராவாகத் தோன்றுகிறது. இது மிக முக்கியமான ப்ரோட்ரூஷனைக் கொண்டுள்ளது. ஆகஸ்ட் மாதத்தில், டிப்ஸ்டர் சாதனத்தில் 1 இன்ச் Sony IMX989 35mm முதன்மை கேமரா பொருத்தப்பட்டிருப்பதாகக் கூறினார்.
நுபியா இஜட்60 அல்ட்ரா கேமரா அம்சம் (Nubia Z60 Ultra camera):
இருப்பினும், நுபியா Z60 அல்ட்ராவில் IMX989 35mm சென்சார்களை Nubia இன்னும் இணைக்கவில்லை என்று டிப்ஸ்டர் கூறியுள்ளார். எனவே, சாதனத்தில் எந்த முதன்மை கேமரா கிடைக்கும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. நுபியா Z60 அல்ட்ராவின் விரிவான விவரக்குறிப்புகள் இன்னும் லீக் ஆகவில்லை. ஆனால் சமீபத்திய Geekbench பட்டியல் இது 12 GB ரேம் உடன் வரும் என்பதை வெளிப்படுத்தியது.
இது ஆண்ட்ராய்டு 14. சந்தை பொருத்துதலின் அடிப்படையில், இது Xiaomi 14 Pro, iQOO 12 Pro, Vivo X100 Pro, OnePlus 12, Realme GT 5 Pro, Meizu 21 series, Oppo Find X7 Pro போன்றவற்றுக்கு போட்டியாக வெளிவரும். சீன சந்தையில் ஹானர் மேஜிக் 6 ப்ரோ. Dimensity 9300 சிப் கொண்ட X100 Pro தவிர, மற்ற அனைத்து முதன்மை ஃபோன்களும் Snapdragon 8 Gen 3 SoC உடன் பொருத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications