24GB ரேம் + 1TB கொண்ட டாப் ஸ்மார்ட்போன்கள்.. டாப் கிளாஸ் போன்கள்னா இது மட்டும் தான்..
ஸ்மார்ட்போன்களின் அம்சங்கள் வெகுவாகவும், வேகமாகவும் மேம்பட்டு வருகின்றன. ஸ்மார்ட்போன்களின் திறனை அதிகரிக்க நிறுவனங்கள் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அப்படி வேகமாக வளர்ந்து வரும் ஒரு அம்சம் தான் போனின் ரேம் (RAM) அம்சம்.
இதன் விளைவாக தான் நாம் இப்போது 24 ஜிபி ரேம் கொண்ட ஸ்மார்ட்போன்களைப் பார்க்கிறோம். இருப்பினும், இந்த 24 ஜிபி ரேம் ஸ்மார்ட்போன்கள் எதுவும் தற்போது இந்தியாவில் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இவை விரைவில் இந்திய சந்தைக்குள் கால் பதிக்க தயார்நிலையில் உள்ளதினால் இந்த போன்களை பற்றி நீங்கள் முன்பே அறிந்துகொள்வது சிறந்து.

ரெட்மேஜிக் 8எஸ் ப்ரோ பிளஸ்: (RedMagic 8S Pro+)
RedMagic 8S Pro+ ஆனது 24GB RAM உடன் வெளிவந்த உலகின் முதல் ஸ்மார்ட்போன் ஆகும். இது 6.8 இன்ச் BOE OLED டிஸ்பிளே, 120Hz ரெஃப்ரஷ் ரேட், 960Hz மல்டி-ஃபிங்கர் ஸ்கிரீன் டச் வீதம், 1440Hz PWM டிம்மிங் + DC டிம்மிங், 1300 nits பீக் பிரைட்னஸ் போன்ற ஆதரவை கொண்டுள்ளது.
குறிப்பிட்டுள்ளபடி, இந்த சாதனம் 24ஜிபி வரை LPDDR5X ரேம் மற்றும் 1TB ஸ்டோரேஜ் கொண்ட UFS4.0 அம்சத்துடன் வருகிறது. இது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 (Snapdragon 8 Gen 2 SoC) சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது 3D ஐஸ்-லெவல் டூயல் பம்ப் மற்றும் ஒரு சூப்பர் பெரிய VC திரவ குளிரூட்டும் அமைப்புடன் கூடிய ICE 12.0 மேஜிக் கூலிங் சிஸ்டத்தையும் கொண்டுள்ளது.
50MP சாம்சங் ஜிஎன்5 (Samsung GN5) சென்சார், 8MP 120-டிகிரி அல்ட்ரா-வைட் லென்ஸ் மற்றும் 2MP மேக்ரோ கேமரா உள்ளிட்ட மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. 16MP ஆம்னிவிஷன் (OmniVision) அண்டர் ஸ்கிரீன் கேமராவுடன் வருகிறது. இது 14 நிமிடங்களில் 100% வரை சார்ஜ் செய்யக்கூடிய 165W சார்ஜிங்குடன் 5000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.
ஒன்பிளஸ் ஏஸ் 2 ப்ரோ (OnePlus Ace 2 Pro)
ஒன்பிளஸ் ஏஸ் 2 ப்ரோ போன் ஆனது 24GB RAM உடன் வெளி வந்த இரண்டாவது சாதனமாகும். இது 2772 x 1240 பிக்சல்கள், 450 PPI, 1600 நீட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 120Hz ரெஃப்ரஷ் ரேட் வீதத்தின் 1.5K தெளிவுத்திறனுடன் 6.74' இன்ச் AMOLED கர்வுடு டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது 2160Hz உயர் அதிர்வெண் PWM மங்கல் மற்றும் 100% DCI-P3 கவரேஜையும் கொண்டுள்ளது.

இது 50 மெகாபிக்சல் + 8 மெகாபிக்சல் + 2 மெகாபிக்சல் கொண்ட ட்ரிபிள் ரியர் கேமராவை அடக்கியுள்ளது. இது 16 மெகாபிக்சல் கொண்ட கேமராவைப் பெறுகிறது. இது ஸ்னாப்டிராகன் 8 Gen 2 சிப்செட்டை கொண்டுள்ளது. இது 24 GB வரை LPDDR5x ரேம் மற்றும் 1TB வரை UFS 4.0 சேமிப்பகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இது 150W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5000mAh பேட்டரியை பேக் செய்கிறது.
ரெட்மி கே60 அல்ட்ரா: (Redmi K60 Ultra)
ரெட்மி கே60 அல்ட்ரா ஆனது 2,712 x 1,220 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 6.67' இன்ச் 12 பிட் OLED டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இது மீடியாடெக் டிமென்சிட்டி 9200+ (MediaTek Dimensity 9200+ SoC) மற்றும் ஆண்ட்ராய்டு 13-அடிப்படையிலான MIUI 14 உடன் இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் 24 ஜிபி LPPDR5x ரேம், 1TB UFS 4.0 ஸ்டோரேஜ் மற்றும் VC லிக்விட் கூலிங் அமைப்புடன் வருகிறது.
ரெட்மி 50 மெகாபிக்சல் + 8 மெகாபிக்சல் + 2 மெகாபிக்சல் கொண்ட மூன்று பின்புற கேமரா அமைப்புடன் வருகிறது. Redmi K60 Ultra ஆனது 16 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 5,000எம்ஏஎச் பேட்டரி மற்றும் 120W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் வருகிறது.
ரியல்மி ஜிடி 5: (Realme GT 5)
ரியல்மி ஜிடி 5 ஆனது 6.7' இன்ச் 1.5K ரெசல்யூஷன் (2772 x 1240 பிக்சல்கள்) OLED டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இந்த மொபைல் சாதனம் 24ஜிபி வரை LPDDR5x ரேம் மற்றும் 1TB UFS 4.0 ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்ட ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 (Snapdragon 8 Gen 2) சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. Realme UI 4.0 ஸ்கின் மூலம் இந்த போன் ஆண்ட்ராய்டு 13 (Android 13) இல் இயங்குகிறது.
இது 50 மெகாபிக்சல் + 8 மெகாபிக்சல் + 2 மெகாபிக்சல் கொண்ட ட்ரிபிள் ரியர் கேமராவை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் இது 16 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவை கொண்டுள்ளது. இது 150W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,240mAh பேட்டரியுடன் வருகிறது. இதற்கிடையில், GT 5 இன் 240W மாறுபாடு 4,600mAh பேட்டரி மற்றும் 240W பாஸ்ட் சார்ஜிங்குடன் வருகிறது. 24 ஜிபி ரேம் உடன் புது போன் வாங்க நினைப்பவர்கள் இந்த போன்களை கருத்தில் கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








