எல்லா போனையும் தூக்கி சாப்பிட்ட Nubia Z60 Ultra.. 80W பாஸ்ட் சார்ஜிங்.. GaN சார்ஜ்ஜர்.. அண்டர்-டிஸ்பிளே கேமரா
நுபியாவின் (Nubia) அடுத்த பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடலான நுபியா Z60 அல்ட்ரா (Nubia Z60 Ultra) சாதனம் 18W, 45W, 60W மற்றும் 80W பவர் அவுட்புட்களை வழங்கும் புதுவகையான GaN பாஸ்ட் சார்ஜிங் மற்றும் சார்ஜ்ஜர் உடன் வரப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இது நாம் இப்போது பயன்படுத்திக்கொண்டிருக்கும் சாதாரண சார்ஜ்ஜர் ஹெட் போன்றதல்ல என்பது குறிப்பிடத்தக்கது. இந்த GaN சார்ஜர்கள் தான் உண்மையான பாஸ்ட் சார்ஜிங் சாதனங்கள் என்று குறிப்பிடப்படுகிறது. காரணம், இவை நம்முடைய சாதாரண சிலிகான் சார்ஜ்ர்கள் போலல்லாமல், இவை கேலியும் நைட்ரைடு (Gallium Nitride) மூலம் சக்தியை வேகமாகவும், எலக்ட்ரான் இழப்பு இல்லாமலும் டிவைஸை சார்ஜ் செய்கின்றன.

இந்த விதியசமான சார்ஜ்ஜர் உடன் நுபியா Z60 அல்ட்ரா ஸ்மார்ட்போன் சாதனம் சீன சந்தையில் வரும் டிசம்பர் 19 ஆம் தேதி அறிமுகமாகிறது. அறிமுகத்திற்கு முன்பாக, இந்த Nubia Z60 Ultra சாதனம் 3C சான்றிதழ் இணையதளத்தில் காணப்பட்டுள்ளது. இது நுபியா Z60 அல்ட்ரா சாதனம் 80W பாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் என்று காண்பித்துள்ளது.
நுபியா Z60 அல்ட்ரா (Nubia Z60 Ultra):
அதேபோல், இந்த போனின் சார்ஜர், மாடல் எண் NX721J உடன் காணப்பட்டுள்ளது. இது மிகவும் சுவாரஸ்யமாக GaN சார்ஜர் விருப்பத்தை வெளிப்படுத்துகிறது என்று பட்டியல் விபரம் காண்பிக்கிறது. இது PA202 மாடல் எண்ணைக் கொண்ட 65W GaN சார்ஜர் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அடாப்டரில் இரண்டு USB-C போர்ட்கள் உள்ளன.
ஒவ்வொன்றும் முழு 65W ஆதரவுடன், 30W வழங்கும் திறன் கொண்ட ஒரு USB-A போர்ட்டுடன் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போர்ட்களின் வெவ்வேறு சேர்க்கைகளைப் பயன்படுத்தும் போது, நீங்கள் பெறக்கூடிய வெவ்வேறு வகையான சார்ஜிங் வேகம் குறித்த தகவலையும் 3C தளம் தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளது. அந்த விபரங்கள் இதோ.
- இரண்டு USB-C போர்ட்களையும் ஒன்றாகப் பயன்படுத்தினால் 63W (45W + 18W) பாஸ்ட் சார்ஜிங் கிடைக்கும்.
- ஒரு USB-C போர்ட் மற்றும் USB-A போர்ட்டைப் பயன்படுத்தினால் 63W (45W + 18W) பாஸ்ட் சார்ஜிங் கிடைக்கும்.
- ஒரு USB-C போர்ட் மற்றும் மற்ற USB போர்ட்கள் இரண்டையும் பயன்படுத்தி 60W (45W + 15W) கிடைக்கும்.

இந்த Nubia Z60 Ultra போனில் செல்பி கேமரா எங்கே இருக்கிறது? (Where is the selfie camera in this Nubia Z60 Ultra phone):
இதுவொரு புதுவிதமான அனுபவத்தை பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு வழங்கவுள்ளது. இந்த போனில் இது மட்டும் வித்தியாசமாக அமைக்கப்படவில்லை. இந்த நுபியா Z60 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஒரு முள் டிஸ்பிளே ஸ்மார்ட்போன் சாதனமாகும். காரணம், இதன் டிஸ்பிளேவில் முன்பக்க கேமராவிற்கான நாட்ச் ஓட்டைகள் எதுவும் பாதிக்கப்படவில்லை. அப்படியானால், செல்பி கேமரா எங்கே இருக்கிறது?
நுபியா அதை தனித்துவத்தை இந்த போனில் காண்பித்துள்ளது. நுபியா Z60 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அதன் செல்பி கேமராவை அண்டர் டிஸ்பிளே கேமராவாக வழங்கியுள்ளது. அதாவது டிஸ்பிளேவிற்கு கீழே, செல்பி கேமராவை ஒரு பிரத்தியேகமான தொழில்நுட்பத்தின் மூலம் மறைத்து வைத்துள்ளது. அதேபோல், இந்த ஸ்மார்ட்போனின் பின்பக்க கேமராக்களும் பலே அம்சங்களை பேக் செய்துள்ளது.
Nubia Z60 Ultra ஸ்மார்ட்போன் சாதனம் இரண்டு 50MP சென்சாரை கொண்டுள்ளது. இத்துடன் சேர்த்து 64MP ஆம்னிவிஷன் (OmniVision OV64B periscope unit) பெரிஸ்கோப் யூனிட் சென்சார்களை கொண்டுள்ளது. இந்த சென்சர்களில் ஒரு 50MP சென்சார் 1/1.56' இன்ச் சென்சராக இருக்கும். அதேபோல், இதில் உள்ள 2வது 50MP சென்சார் 1/1.55' இன்ச் அளவில் வரும் அல்ட்ரா வைடு சென்சராக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த சாதனம் 1.5K பிளாட் OLED அம்சத்துடன் இயங்கும் டிஸ்பிளேவை கொண்டிருக்கும். இந்த நுபியா இஜட்60 அல்ட்ரா ஸ்மார்ட்போன் 6,000mAh பேட்டரியை (battery) பேக் செய்யும். இதில் 80W வயர்டு சார்ஜிங் அம்சம் இடம்பெறும். இது GaN சார்ஜ்ஜராக இருக்கும் என்று லீக் தகவல்கள் குறிப்பிடுகின்றன.


Click it and Unblock the Notifications








