(வீடியோ) தரையிறங்கும்போது வெடித்து சிதறிய பிரமாண்ட ஸ்டார்ஷிப் ராக்கெட்: "வெற்றிகரமான சோதனை" எலான் மஸ்க் டுவிட்

|

செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்பும் ஸ்பேஷ்எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார் ஷிப் ராக்கெட் முன்மாதிரி சோதனை முடிந்து தரையிறங்கிய போது வெடித்து சிதறியது.

ஸ்பேஸ் எக்ஸின் டிராகன் கேப்சூல்

ஸ்பேஸ் எக்ஸின் டிராகன் கேப்சூல்

தனியார் நிறுவனம் மூலம் மனிதர்கள் விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தை நாசா முதன்முறையாக கடந்த மே மாதம் சோதனை செய்தது. இதில் நாசாவை சேர்ந்த பாப் பென்கன் மற்றும் டக் ஹர்லி ஆகிய வீரர்கள் இடம்பெற்றனர். விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு ஆகஸ்ட் மாதம் ஸ்பேஸ் எக்ஸின் டிராகன் கேப்சூல் மூலம் பூமிக்கு திரும்பினர்.

தனியார் விண்வெளி நிறுவனங்கள்

தனியார் விண்வெளி நிறுவனங்கள்

சரியாக 9 வருடங்களுக்கு பிறகு அமெரிக்க மண்ணில் இருந்து முதன் முறையாக மனிதர்களை ஏந்திக்கொண்டு ராக்கெட் விண்ணுக்கு சென்றது. தனியார் நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் மூலம் இந்த திட்டம் வெற்றிப்பெற்றதையடுத்து வரும்காலங்களில் பல தனியார் விண்வெளி நிறுவனங்களின் பங்களிப்பு விண்வெளித்துறையில் அதிகரிக்கும் என்று நாசா அமைப்பு நம்பிக்கை தெரிவித்தது.

எலான் மஸ்க்கிற்கு சொந்தமான ஸ்பேஸ்எக்ஸ்

எலான் மஸ்க்கிற்கு சொந்தமான ஸ்பேஸ்எக்ஸ்

முதல் தனியார் நிறுவனம் என்றும் பெருமையை எலான் மஸ்க்கிற்கு சொந்தமான ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் பெற்றது. முன்னதாக ரஷ்யாவின் சோயூஸ் விண்கலம் மூலம் மனிதர்கள் விண்ணுக்கு அனுப்பப்பட்டனர். இந்த நிறுவனம் ஒரு இருக்கைக்கு சுமார் ரூ.600 கோடி கட்டணம் வசூலித்தது. இந்த செலவை குறைக்கும் பொருட்டு நாசா தனியார் நிறுவனம் மூலம் மனிதர்களை விண்ணுக்கு அனுப்ப திட்டமிட்டது.

ஏலியன்ஸ் தலைமறைவாக இருப்பது உண்மை., அவர்கள் வாழும் இடம் இதுதான்: வெளியான அதிர்ச்சி தகவல்!ஏலியன்ஸ் தலைமறைவாக இருப்பது உண்மை., அவர்கள் வாழும் இடம் இதுதான்: வெளியான அதிர்ச்சி தகவல்!

ஸ்டார்ஷிப் விண்கலத்தின் ப்ரோட்டோடைப்

இருப்பினும் எலான் மஸ்க்கின் கனவுத்திட்டமாக கூறப்படுவது செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்பும் திட்டமாகும். ஆனால் இதற்கான முன்மாதிரி விண்கலம் சோதனையின்போது வெடித்து சிதறியது. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் விண்கலத்தின் ப்ரோட்டோடைப் பூமிக்கு திரும்பியபோது வெடித்து சிதறியது.

போகா சிகா ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்டது

போகா சிகா ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்டது

செவ்வாய் கிரகத்துக்கு பயணிக்கக்கூடிய ஸ்டார்ஷிப் விண்கலத்தின் முன்மாதிரி நேற்று அறிமுகம் செய்து சோதனை நடத்தப்பட்டது. சோதனை விண்கலத்துடனான ஸ்டார்ஷிப் ராக்கெட் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள போகா சிகா ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது.

பூமிக்கு தரையிறங்கியபோது வெடித்தது

பூமிக்கு தரையிறங்கியபோது வெடித்தது

செவ்வாய் கிரகத்தில் மனிதர்களை அனுப்புவதற்கான விண்கலத்தின் மாதிரியை 40 ஆயிரம் அடி உயரத்திற்கு செலுத்த ஸபேஸ்எக்ஸ் திட்டமிட்டு இருந்தது. இருப்பினும் எத்தனை அடி உயரத்திற்கு சென்றது என்று குறிப்பிடவில்லை. ஆனால் சில நிமிட பயணத்துக்கு பிறகு பூமிக்கு தரையிறங்கியபோது வெடித்து சிதறியது.

விண்கலத்தில் மூன்று இன்ஜின்கள்

விண்கலத்தின் மூன்று இன்ஜின்களும் அடுத்தடுத்து செயலிழந்து வேகமாக தரையிறங்கியதன் காரணமாக விண்கலம் வெடித்து சிதறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சோதனை ஓட்டம் முடிவடைந்தபிறகு இறுதிகட்ட நேரடி விண்கலத்தில் 6 இன்ஜின்கள் இடம்பெறும் என நிறுவனத்தின் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

யூடியூப் லைவ் ஸ்ட்ரீம்

இதுகுறித்து ஸ்பேஸ்எகஸ் நிறுவனத்தின் எலான் மஸ்க் தெரிக்கையில், இது வெற்றிகரமான சோதனை, தங்களுக்கு தேவையான அனைத்து தரவுகளும் வெற்றிகரமாக சேகரிக்கப்பட்டது என அவர் குறிப்பிட்டார். ஸ்பேஸ் எக்ஸின் இந்த சோதனை ஓட்டம் யூடியூப்பில் லைவ் ஸ்ட்ரீம் செய்யப்பட்டது. அதில் அற்புதமான சோதனை, வாழ்த்துக்கள் ஸ்டார்ஷிப் அணி என குறிப்பிடப்பட்டிருந்தது.

Source: ndtv.com

Best Mobiles in India

English summary
SpaceX StarShip Explodes on Landing: Successful Ascent Says Elon Musk

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X